online@kalkiweekly.com

spot_img

தலையங்கம்

இருபது ஆண்டுளுக்கு முன்பு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்கா முன்னெடுத்த முயற்சியில் முக்கியமானது ஆப்கானிஸ்தானத்தில் அதன் படைகளையும் நவீன ஆயுதங்களையும் நிறுத்தியது. பல மில்லியன் டாலர் செலவிட்டு 20 ஆண்டுகள் போரைத் தொடர்ந்த பின்னர் அண்மையில் அந்தப் போரில் தோல்வி என்பதை ஏற்றுத் தனது படைகளைத் திரும்ப அழைத்துக்கொண்டிருக்கிறது.

தாலிபான் புரட்சிப்படையினர் எல்லா மாவட்டங்களையும் கைப்பற்றி இறுதியில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியிருக்கின்றனர். ஆப்கானின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். நாட்டின் ராணுவம் தாலிபான்களுக்கு எதிராகப் போராடவில்லை. பல நாடுகள் தங்கள் தூதரகங்களை மூடிவிட்டன. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் குடியரசு அமைந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். சுருக்கமாகச் சொல்வதானால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி பெரிய போராட்டங்கள் எதுவுமில்லாமல் அமுலுக்கு வந்துவிட்டது. சீனாவும் ரஷ்யாவும் அவர்களை ஆதரித்துள்ளன. பாகிஸ்தான் அவர்களது வெற்றியை வெளிப்படையாகவே கொண்டாடியிருக்கிறது.

இந்த நிலை இந்தியாவிற்கு ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மைக்காலமாக நமது எல்லைப்புற நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், சீனா போன்ற நாடுகளுடன் நல்லுறவைத் தொடர முடியாமல் மோடி அரசு திணறிவருகிற நிலையில் இப்போது அந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தானும் சேர்ந்து மற்றொரு தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக முந்தைய ஆட்சியாளர்களின் வேண்டுகோளை ஏற்று அணைக்கட்டுகள், பள்ளிக்கூடங்கள், சாலை வசதிகள் என்று ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்புக்கு நல்லெண்ண நோக்கில் இந்தியா செய்த உதவிகளுக்குத் தாலிபான்கள் நன்றி பாராட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

கடந்தமுறை 1996-ல் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை இப்போதைய ஆட்சி மாற்றத்தோடு ஒப்பிடமுடியாது. இப்போது அவர்களிடம் மத அடிப்படைவாத மனோபாவத்தோடு அமெரிக்க விட்டுச்சென்ற நவீன ஆயுதங்களும் அதைக் கையாளத் தெரிந்தவர்களாகவும் உருவெடுத்திருக்கிறார்கள். மேலும் இப்போது தாலிபான்களை எதிர்க்க முன்பிருந்த வடக்குக் கூட்டணி மட்டுமில்லை, எவருமே இல்லை. இதன் விளைவுகளை இப்போது கணிக்க முடியாவிட்டாலும் ஆப்கானிஸ்தானை இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருள் ஆசியாவின் புவியரசியலில் புதிய சவால்களையும் தோற்றுவித்துள்ளது என்பதுதான் உண்மை.

தாலிபான்கள் தங்களது கடுமையான மதக்கோட்பாடுகளை நடைமுறைப் படுத்துவதாகவும் மறுப்பவர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்துவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே விமானங்களை நோக்கி மக்கள் பதறியபடி ஓடிய காட்சிகளே அங்கு எந்த மாதிரியான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்குச் சாட்சி. இப்படி வெளியேறும் மக்கள் இன்னும் சில நாட்களில் பெருமளவில் அதிகமாகி அருகிலிருக்கும் நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைவார்கள். ஆப்கானிஸ் தானத்துக்கு மிக அருகில் எளிதான தரை வழி தொடர்பில் இந்தியா இருப்பதால் பங்களாதேஷ், இலங்கை நாடுகளிலிருந்து வந்தவர்களைப்போல் ஆப்கான் மக்கள் அதிக அளவில் அகதிகளாக வர வாய்ப்பு அதிகம்.

இந்த நிலையில் இந்திய அரசு ஆப்கானிஸ்தானம் குறித்துப் புதிய வியூகங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி பெரும் வல்லரசு நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நல்லுறவைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் மக்களின் பாதுகாப்பிற்காக ஐ,நா.வின் தலையீட்டுக்கு அழுத்தம் தரவேண்டும். அவசியமானால் பாகிஸ்தானுக்கு ராஜதந்திர அழுத்தங்களைத் தரவும் தயங்கக்கூடாது. இந்தச் செயல்களின் விளைவுகள் ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமில்லை, நமக்கும் நன்மை பயக்கும்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field
Next articleகல்கி

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கல்கி

0
spot_img

To Advertise Contact :

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field