’’தலைவி’’யாக கங்கணா ரனாவத்! எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி!

’’தலைவி’’யாக கங்கணா ரனாவத்! எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி!

-ராகவ் குமார்

இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும், நீங்காத இடத்தை பிடித்தவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா. கனிவும் கம்பீரமும் ஒரு சேர பெற்றவர். அரசியலில் எதிர்முகம் கொண்டவர்களால் கூட அம்மா என்று மரியாதையுடன் அழைக்கப்பட் டவர். அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ''தலைவி'' என்ற பெயரில் இயக்கி திரைக்கு கொண்டு வர இருக்கிறார் டைரக்டர் விஜய்.

இப்படத்தில் எம் ஜிஆராக அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக ஹிந்தி ந டிகை கங்கனாவும் நடிக்கிறார்கள். நமது முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் ஒரு வட இந்திய பெண்ணா? எம் ஜி யாராக முன்னாள் சாக்லேட் பாய் அரவிந்த் சாமி சரியாக இருப்பாரா என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியவர்களுக்கு படத்தின் போஸ்டரும், ட்ரைலரும் சரியான பதிலை தந்துள்ளது.குறிப்பாக ஜெயலலிதா அரசியல் பயணத்தில்  முக்கிய திருப்புமுனையாக அமைந்த 1989 ம் ஆண்டு நடந்த சட்ட சபை கலவர காட்சிகளை தத்ரூபமாக படம் பிடித்து உள்ளார் விஜய்.அந்த நாட்களில் எம் ஜி ஆர் ஜெயலலிதா ஸ்க் ரீன் கெமிஸ்ட்ரி பெரிய வரவேற்பை பெற்றது போல, அரவிந்த் சாமி -கங்கனா திரை கெமிஸ்ட் ரியும் சிறப்பாக உள்ளது. ட்ரைலர் வெளியாகி சில மணி நேரங்களில் பலரின் வரவேற்பை பெற்று விட்டது.

அச்சு அசல்  எம் ஜி ஆர் போலவே நடை உடை பாவனையில் இமிடேட் செய்கிறார் அரவிந்தசாமி. சில போராட்டங்கள், பிரச்சனைகள் தாண்டி ''தலைவி'' திரைப்படம் ஓரிரு நாட்களில்  திரைக்கு வர உள்ளது. ஜெயலலிதா என்றாலே தன்னம்பிக்கை, போராட்டம், விடாமுயற்சி, வெற்றி ஆகியவைதானே?! அதேபோல் அவரை பற்றி எடுக்கும் படமும் பலகட்ட போராட்டங்களை தாண்டி வருவது இயல்புதானே என்கின்றனர் ஜெ-ரசிகர்கள்!  மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வரை திரையில் காண தயாராகி வருகிறார்கள் மக்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com