21-09-2022

புதன்கிழமை
dina palan
dina palan
Published on

மேஷம்

இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பொருளாதாரநிலையிலும் பற்றாக்குறைகள் நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.

அஸ்வினி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.

பரணி: மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும்.

க்ருத்திகை - 1: கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்

இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பண வரத்தில் நிறைவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். நீங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். ஒரு காரியத்தை இருமுறை யோசித்துச் செய்தால் சிரமத்திலிருந்து மீளலாம். மாணவர்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நண்பர்களை அடையாளம் கண்டு விலகுவீர்கள்.

க்ருத்திகை 2, 3, 4: புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

ரோகினி: காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் நீங்கும்.

ம்ருகசீரிஷம் - 1, 2: உடல் ஆரோக்கியம் மேம்படிம். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பீர்கள். பெண்களுக்கு கணவரால் இருந்து வந்த தொந்தரவுகள் மாறும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியம் தடையின்றி நடக்கும். உறவினர் வருகை, சுபகாரியப் பேச்சுகள் என்று வீட்டில் கலகலப்பு நிலவும்.

ம்ருகசீரிஷம் - 3, 4: மனக்கவலை ஏற்பட்டு நீங்கும்.

திருவாதிரை: எதிர்பாராத செலவு ஏற்படும்.

புனர்பூசம் - 1, 2, 3: மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கடகம்

இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடும்முன் சக நண்பர்களைக் கலந்து செய்யும் முடிவு லாபத்தைத் தரும். எதிர்பார்த்தபடி வெளிநாடு செல்வீர்கள்.

புனர்பூசம் - 4: எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது.

பூசம்: சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.

ஆயில்யம்: தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். உத்யோகஸ்தர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும். அரசு ஊழியர்களை ஆட்டிப்படைத்துவரும் அதிகாரிகள் சிலர் லஞ்ச வழக்குக்கு ஆட்படுவார்கள்.

மகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.

பூரம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம்.

உத்திரம் - 1: கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி

இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள்

விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் கூடும். மாணவர்களின் தொழிற்கல்வி உயரும். கல்விக்கடனும் தடையின்றிக் கிடைக்கும். சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும்.

உத்திரம் - 2, 3, 4: பிள்ளைளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

ஹஸ்தம்: உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம்.

சித்திரை - 1, 2: எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

துலாம்

இன்று அரசியல் துறையினர் வாக்கு வன்மையால் உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன பதவி உயர்வு, வர வேண்டிய பணம் வந்து சேரும். எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை உண்டு. பெண்களால் குடும்பத்தில் நன்மையுண்டு. கால்நடை வளர்ப்போர் நல்ல லாபம் பெறுவார்கள்.

சித்திரை - 3, 4: எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ஸ்வாதி: செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம் - 1, 2 ,3: அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விசாகம் - 4: எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை.

அனுஷம்: உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம்.

கேட்டை: மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு

இன்று பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பெண்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.

மூலம்: தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

பூராடம்: போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும்.

உத்திராடம் - 1: உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகவார்கள். வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும்.

உத்திராடம் - 2, 3, 4: எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

திருவோணம்: குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும்.

அவிட்டம் - 1, 2: கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கும்பம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் - 3, 4: பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.

சதயம்: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.

பூரட்டாதி - 1, 2, 3: அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்

இன்று எடுத்த வேலைகளை மிகச்சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். டென்ஷனை குறைப்பது நல்லது.

பூரட்டாதி - 4: துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.

உத்திரட்டாதி: மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும்.

ரேவதி: உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com