0,00 INR

No products in the cart.

‘திருச்சிற்றம்பலம் படம்: தனுஷ் –நித்யா மேனன் நடன வைரல் வீடியோ!

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இருந்து தனுஷ் – நித்யா மேனன் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் – அனிருத் இணைவதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பினிடையே ‘மின்சாரக் கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே’ பாடலுக்கு தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியா அல்லது இடைவேளையின்போது சும்மா இருவரும் டான்ஸ் ஆடியதா என்பது குறித்த தகவல்கள் வெளீயாகவில்லை.

 

.

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழகத்தில் புதிய வகை கொரோனா; மாஸ்க் கட்டாயம்!

0
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் புதிய...

டெல்லி சென்றார் ஓபிஎஸ்!

0
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் நேற்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.  அதிமுக-வில் ஒற்றைத் தலைமை கருத்துக்கு தீவிர...

திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!

0
நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று அப்பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை...

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி; நெல்லை அணி அபாரம்!

0
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது....

கல்யாணத்தில் கலாட்டா: நண்பனைச் சுட்ட மணமகன்!

0
உத்தரபிரதேசத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மணமகன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் பிராம்நகரைச் சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா (25). இவருக்கும் அதே...