online@kalkiweekly.com

‘திருடா திருடா’ படத்தின் பயங்கர அனுபவம்

ஸ்டார்ட்… கேமரா… ஆனந்த் – 14
எஸ்.சந்திரமௌலி

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘நாயகன்’ படம் பார்த்தபோது அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், பின்னாளில் எனக்கு சினிமா மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி பி.சி. சாரிடம் நான் அசிஸ்டென்ட்டாகச் சேர உந்துதலாக இருந்தது. எனவே, ‘தேவர் மகன்’ படப்பிடிப்பின்போது, சிவாஜி, கமல், நாசர் ஆகியோரது அற்புதமான நடிப்பை நேரில் அருகில் இருந்து பார்த்தபோது, எனக்கு அவர்கள் மேலிருந்த மரியாதை பன்மடங்காகியது.

‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெறும் கோவில் தேர்த் திருவிழா காட்சி மிகப் பிரம்மாண்டமான முறையில் படம்பிடிக்கப்பட்டு, பெரும் பாராட்டைப் பெற்றது. அந்தக் காட்சிக்காக இரண்டாயிரம் பேர் கொண்ட மக்கள் கூட்டம் வேண்டும் என்று டைரக்டர் பரதனும், ஒளிப்பதிவாளர் பி.சி.யும் சொல்லிருந்தார்கள். ஆனால் திருவிழாக் காட்சியை எடுக்கவேண்டிய தினத்தன்று காலை யில் கமல் ஸ்பாட்டுக்கு வந்தார்.

எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை என்பதைக் கவனித்துவிட்டு,

“இரண்டாயிரம் பேர் வேணும்னு டைரக்டர் சொல்லி இருக்காரு! இங்கே ஆயிரம் பேர் கூட இருக்கமாட்டங்க போல இருக்கே? இன்னும் ரெண்டு மணி நேரத்தில் இரண்டாயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு வர முடியுமா?” என்று புரொடக் ஷன் மானேஜரைக் கேட்டார். அவர், கையைப் பிசைந்துகொண்டு நிற்க, “இன்னிக்கு ஷூட்டிங்வேணாம்! நாளைக்குக் காலையில நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது! ரெண்டாயிரம் பேர் இங்கே இருக்கணும்” என்று கண்டிப்பன குரலில் சொல்லிவிட்டு, புறப்பட்டுப் போய்விட்டார்.

படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கமல் நினைத்திருந்தால், ரெண்டாயிரம் பேர் இருந்தால் திருவிழா சீன் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். ஆனால் ‘ஆட்கள் வரலியே! வேற வழி இல்லை; சரி! இருக்கிறவர்களை வைத்து அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்’ என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. செலவு பற்றிக் கவலைப்படாமல், முதல் நாள் வந்தவர்களுக்கு ஷூட்டிங் நடக்காதுபோனாலும், பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, மறுநாள் இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்களத் திரட்டி, காட்சியை தத்ரூபமாக எடுக்க ஏற்பாடு செய்தார். கமல் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்யும் மனிதர் என்பதை உணர்த்திய சம்பவம் இது.

‘தேவர் மகன்’ படத்தில் ஏரி உடைந்து, வெள்ளம் பெருக்கெடுத்து, ஊருக் குள் வர, பல குடிசைகள் தண்ணீரில் மூழ்கிவிடுவதாக ஒரு காட்சி இடம் பெறும். திரையில் அந்தக் காட்சி வெகு தத்ரூபமாக அமைந்து, பலரது பாராட்டையும் பெற்றது. ஊருக்குள் வெள்ளம் வந்து குடிசைகள் மூழ்குவதற்குப் பதிலாக, ஒரு பெரிய ஏரியிலேயே குடிசைகள் மூழ்கி இருப்பதுபோல வும், கால்நடைகள் செத்துக் கிடப்பது போலவும், ஒரு நிஜமான வெள்ளக்காடு போலவே செட் போட்டு படம் பிடித்தோம்.

இயக்குநர் பரதன் ஒரு நல்ல ஓவியர்; சினிமாவில் ஆர்ட் டைரக்டராக வும் இருந்திருக்கிறார். எனவே, அந்த வெள்ளக் காட்சியைப் படம் பிடிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அந்த ஏரிப் பகுதிக்குப் போய்விட்டார். படத்துக்கு அஷோக் என்ற ஆர்ட் டைரக்டர் இருந்தாலும், ஏரியை ஒட்டியே ஒரு கூடாரம் அடித்து, அங்கே இரவு பகலாகத் தங்கி, தானே மேற்பார்வையிட்டு, ஐம்பது ஆட்களை வைத்து வேலை வாங்கி, செட் அமைத்தார். அந்த செட் அமைக்கிறபோது, இயக்குநர் பரதனின் டெடிகேஷனைப் பார்த்து வியந்து போனேன்.

இன்னொருன் சுவாரசியமான விஷயம். அந்தக் காட்சியில் திடீரென்று தண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரச் செய்வதற்காக, ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு, ஒரு பிரம்மாண்டமான தொட்டியைக் கட்டி, அதில் தண்ணீரை நிரப்பி, சரியான தருணத்தில் அதிலிருந்து தண்ணீரை வெளியேறச் செய்து, அந்தக் காட்சி மிகவும் ரியலிஸ்டிக்காக இருக்கும்படி செய்தார் கமல்.

நாலு படங்களில் ஒர்க் பண்ணிய ஒரு டெக்னிஷியனுக்குக் கிடைக்கும் அனுபவம், ஒரு மணிரத்னம் படத்தில் ஒர்க் பண்ணினாலே கிடைத்துவிடும். எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ‘திருடா திருடா’ படத்தில் கிடைத்தது. படத்துக்கு ஒளிப்பதிவு பி.சி.சார். கர்நாடகாவில் மலைப்பகுதியில் காட்டுக்குள் சக்லேஸ்வர் என்ற ஏரியாவில் ஓடுகிற ரயிலின் கூரை மீது ஒரு சண்டைக் காட்சி எடுத்தோம். சண்டைக் காட்சிக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த ரயில் எங்களையும், கிரேன், கேமரா போன்ற உபகரணங்கள், சாப்பாடு, தண்ணீர் என்று சகலத்தையும் ஏற்றிக்கொண்டு காலை ஆறு மணிக்குப் புறப் பட்டு, காட்டுக்குள் ஒற்றை டிராக் ரயில் பாதையில் சுமார் 40 கி.மீ. தூரம் உள்ளே போய்விடும். தகவல் தொடர்பு வசதியோ, ரோடு வசதியோ கிடையாது. காட்டுக்குள் ஜன நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ எதுவும் இருக்காது.

ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிய மாலை ஆறு மணிக்கு மேலாகி விடும். ரயிலுக்கு எக்கச்சக்க கட்டணம் என்பதால் அரை மணி நேரம் கூட வீணாக்காமல் வேலை நடக்கும். ஒரு கட்டத்தில் சாப்பிடுவதற்காகக் கூட நேரம் செலவழிக்க வேண்டாம் என முடிவு செய்து, மெஸ் ஊழியர்கள், தட்டுகளில் வேகவைத்த முட்டை, பிரெட் சாண்ட்விச் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வலம் வர, ஆளாளுக்குத் தேவையானதை எடுத்துச் சாப்பிட்டபடியே வேலையைப் பார்க்க ஆரம்பித்தோம். இப்படி ஒன்பது நாட்கள் காட்டுக்குள் அந்தச் சண்டைக் காட்சியைப் படம் பிடித்தோம். திரையில் அந்தக் காட்சியைப் பார்க்கிறபோது, நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

‘திருடா திருடா’ படத்தில் ஒரு அருவியில் பிரஷாந்தும், ஆனந்தும் மார்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு குளித்துக் கொண்டிருப்பார்கள். பின்னணியில் கரையில் ஹீரா நின்றுகொண்டிருப்பார். அப்போது, ஆனந்த், ஹீராவைக் காதலிக்கிறார் என்பது தெரியாமலேயே, பிரஷாந்த், தான் ஹீரா வைக் காதலிக்கும் விஷயத்தை ஆனந்திடம் சொல்வதாக வசனம். “இந்தக் காட்சியை பிரஷாந்த், ஆனந்த் இருவரும் நிற்கும் இடத்தைச் சுற்றி டிராலி போட்டு, 360 டிகிரி கோணத்தில் கேமரா சுற்றி வந்து அவர்களைப் படம் பிடிக்க வேண்டும்” என்று மணி சாரும், பி.சி. சாரும் சொன்னார்கள்.

பி.சி.யின் முதல் அசிஸ்டன்டான எனக்கு ‘இப்படி ஒரு காட்சியினை எடுப்பது எவ்வளவு சிரமம் என்று புரிந்துதான் சொல்கிறார்களா? இல்லை சும்மா நம்மை கலாய்க்க இப்படிச் சொல்கிறார்களா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது. காரணம், பிரஷாந்தும், ஆனந்தும் நாலடி ஆழத் தண்ணீரில் நிற்கிறார்கள். அவர்களை 360 டிகிரி கோணத்தில் டிராலி ஷாட்டில் படம் பிடிக்க வேண்டும் என்றால், தண்ணீருக்குள்ளே தரை மட்டத்தில் தண்டவாளம் போன்ற வட்ட வடிவ டிராக்கைப் பொறுத்தவேண்டும். அதற்குத் தண்ணீருக்குள் தரை சமதளமாக இருக்க வேண்டும். அடுத்து அதன் மீது நகரும் டிராலியையும், டிராலியின் மீது கேமராவுக்கான ஸ்டேண்டை நிறுத்த வேண்டும். தண்ணீர் மட்டத்துக்கு மேலே கேமரா இருக்கும்படி, ஸ்டேண்டில் கேமராவைப் பொருத்த வேண்டும்.

இத்தனை முன்னேற்பாடுகளுக்கும் பிறகு, டைரக்டர் ‘ஸ்டார்ட்` சொன்ன வுடன், கேமரா நகர வேண்டும். தானாக எப்படி கேமரா நகரும்? ஒரு உதவி யாளர் தண்ணீருக்குள் மூச்சைப் பிடித்துக்கொண்டு மூழ்கி, கேமராவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் டிராலியை ஒரே சீராகத் தள்ளவேண்டும்.

ஒருவரால் அதிகபட்சம் ஒன்று அல்லது ஒன்றரை நிமிடத்துக்குத் தண்ணீருக்குள் தம்கட்ட முடியுமென்றால், இன்னொருவர் அதற்குள் தண்ணீ ருக்குள் மூழ்கி, ஏற்கெனவே தண்ணீருக்குள் மூழ்கி, டிராலியில் இருக்கும் கேமரா ஸ்டேண்டை தள்ளுபவருடைய பொசிஷனை எடுத்துக் கொண்டால் தான், கேமராவின் மூவ்மென்ட் தடையில்லாமல் ஸ்மூத்தாக இருக்கும். இப்படி கேமரா முழு வட்டமடித்து முடிக்கும் வரை ஆள் மாறி, மாறி தண்ணீருக்குள் மூழ்கித் தள்ளிக்கொண்டே இருக்கவேண்டும். (இங்கே, வாசகர்கள் மேற்கொண்டு படிப்பதை நிறுத்தி, ஒரு நிமிடம் இந்தக் காட்சி எடுக் கப்பட்ட முறையைக் கற்பனை செய்து பார்த்தால், அந்த காட்சியை எவ்வளவு சிரமப்பட்டு படம் பிடித்தோம் என்பது நன்றாகப் புரியும்)

நான் ஒளிபதிவு செய்த முதல்வன், சிவாஜி ஆகிய இரண்டு படங்களின் இயக்குநரான ஷங்கரும் மணிரத்னம் மாதிரியே ஒரு டாஸ்க் மாஸ்டர்தான்!

(தொடரும்)

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

மூங்கில், நண்டு, வாழை, மனிதன்!

3
  கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன்   இந்த வாரம் மீண்டும் சென்னை விஜயம். காலை நடையில் தி.நகர் ‘ஹாட் சிப்ஸ்’ல் காஃபி சாப்பிடும்போது  விஜயதசமி முடிந்து வாழை தோரணங்கள் வாடி வதங்கி அதன் அடிப் பகுதியில் தண்டு சின்னதாக...

சென்னையிலிருந்து இலங்கைக்கு  ரயில் விட்டிருக்கிறார்கள்

1
  அது ஒரு கனாக் காலம் – 5 - ஜெயராமன் ரகுநாதன்   “என்னது ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் நின்னு நின்னு போகுமா?” “கரி எஞ்சினா? வீட்டுக்கு வந்து குளிச்சாத்தான் உள்ள சேர்ப்பாங்களா?” “டிரெயின்ல பாண்ட்ரியெல்லாம் இருக்காதா? ஸ்டேஷன்ல இறங்கி அவசர...

அமைதியான நடிப்பு; ஆரவாரமான வெற்றி!

0
  அண்ணாத்தே வந்த பாதை - 2 எஸ்.பி.முத்துராமன்     /   எழுத்து வடிவம் : எஸ். சந்திர மௌலி அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவான ரஜினியை ஒரு கிராமத்துப் பின்னணி கொண்ட கதையில் ஆர்பாட்டம் துளியுமில்லாமல், அமைதியான...

அண்ணாத்தே வந்த பாதை

0
புதிய தொடர்   டைரக்டர் எஸ்பி. முத்துராமன் 1) பாஸ்...மொட்டை பாஸ் மிக அதிகமன ரஜினியின் படங்களை இயக்கிய டைரக்டர் என்ற முறையில் ரஜினியுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் எனக்கு எப்போதுமே ஒரு தனி அன்பும், மரியாதையும்...

ஸ்டார்ட்… கேமரா…-ஆனந்த்16

0
- எஸ்.சந்திரமெளலி ஒரு கேமராமேன் என்ற வகையில் நான் ரஜினி சாரை எந்த ஒரு காட்சியிலும் இடுப்புவரை ஃப்ரேமில் கொண்டுவர தயங்க மாட்டேன். காரணம் அவருக்குத் துளியும் தொப்பை கிடையாது. உடம்பை அவ்வளவு ட்ரிம்மாக...
spot_img

To Advertise Contact :