online@kalkiweekly.com

spot_img

தேன் மெதுவடை

ஜெயஸ்ரீ நாகராஜன், திருவிடைமருதூர்.

நமக்கு சமையல் அவ்ளோ வராதுங்க! ஆனா எங்க அம்மா செய்யுற வடைக்கு நான் அடிமை ! அதை எப்படி செய்வாங்கன்னு சொல்றேன்.

உளுந்தை ஊற வெச்சி கையில ஒட்டமா எடுத்து மையா கெட்டியா அரைச்சுக்கணும். அதுல அரையும் காலுமா மிளகு இடிச்சி போட்டு, கொஞ்சம் உப்பு போட்டுக் கலக்கணும். அநத மாவை வாழை இலைல வச்சு வடையா தட்டி நடுவுல ஓட்டை போட்டு எண்ணையில பொறிச்சு எடுக்கணும். சூப்பரா நம்ம மொறுமொறு மெதுவடைதயார்!

இதுல என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா? விஷ்யம் இத்தோட முடியலீங்க! அந்த வடையை ஆறவிட்டு அது மேல முழுசா மூடுகிற அளவுக்கு எங்கம்மா தேனு ஊற்றி வெச்சிடுவாங்க. வடையில தேனு ஊறி.. ப்பா !! செம டேஸ்ட் !! வாராஹி அம்மனுக்கு நெய்வேத்யமாக படைப்பாங்க. அது மட்டும் இல்லாம இது பெண்களின் இடுப்பு எலும்புகளுக்கு அவ்ளோ நல்லதுங்க! செஞ்சி பார்த்து சாப்பிட்டு சொல்லுங்க!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

நார்த்தங்காய் பச்சடி

0
B.லலிதா. திருச்சி தேவையானவை: நார்த்தங்காய் - ( மீடியம் சைஸ்)- பச்சை மிளகாய்- 10 அல்லது 12 புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு. நல்லெண்ணெய்- ஒரு கரண்டி. உப்பு,- தேவைக்கேற்ப. பெருங்காயம், மஞ்சள் தூள்- 1 சிட்டிகை. மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன். வெல்லம்...

களாக்காய் ஊறுகாய்

0
வாணி கண்பதி, பள்ளிக்கரணை. களாக்காய் ..1 கப் மிளகாய்த்தூள்..1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்..1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்..1 டீஸ்பூன் வெந்தயத் தூள் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய். 1/4 கப் செய்முறை.. காய்களை நன்றாக கழுவி விட்டு இரண்டாக பிளந்து...

கறுப்ப கொண்டைக்கடலை

0
https://youtu.be/J01UgXOs4GI -ஆதிரை வேணுகோபால். தேவையான பொருட்கள் கருப்பு கொண்டைக்கடலை -ஒரு கப் பொடியாக நறுக்கிய மாங்காய்+ தேங்காய் துருவல்- தலா கால் கப் காய்ந்த மிளகாய் 2 எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, பெருங்காயத்தூள் - தலா...

சாபுதானா சுண்டல்

0
https://www.youtube.com/watch?v=__d46MXE-d8&authuser=0   -ஆதிரை வேணுகோபால். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி -1 கப். குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது). தேங்காய் துருவல் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 உளுத்தம்பருப்பு +கடலைப்பருப்பு -சிறிதளவு கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை -...

ராஜ்மா சுண்டல்

0
https://www.youtube.com/watch?v=M4oGuyLNykk -ஆதிரை வேணுகோபால். தேவை: சிவப்பு ராஜ்மா- 2 கப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு (வறுத்து அரைக்க): கடலைப்பருப்பு, தனியா, மிளகு - தலா 4...
spot_img

To Advertise Contact :