0,00 INR

No products in the cart.

தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல!

முகநூல் பக்கம்
ஸ்ரீதர் சுப்பிரமணியம்

‘நானும் பல தேர்வுகளில் தோல்வி அடைந்திருக்கிறேன். மோசமான மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறேன். தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல,` என்ற ரீதியில் பேசி நடிகர் சூர்யா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். மன அழுத்தம் எதிர்கொள்ளும் மாணவர்கள் யாரிடமாவது மனம்விட்டுப் பேசுங்கள் என்றும் அறிவுரைத்து இருக்கிறார்.

நல்ல நோக்கத்திலும் அன்பினாலும் வெளிப்பட்டிருக்கும் இந்த அறிக்கை பாராட்டத்தக்கதுதான். ஒவ்வொரு முறை ஏதாவது மாணவர் பற்றிய அவலச் செய்தி வரும்பொழுதெல்லாம் `தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல,` என்றுதான் நாம் எல்லாரும் எழுதுகிறோம்.

ஆனால் அது வெறுமனே ஆறுதல் வார்த்தையாக மட்டுமே நின்று விடுகிறதோ என்ற கவலை எழுகிறது. உண்மை நிலை என்ன? இந்திய சிறுவர்களுக்கு சுமார் ஐந்து வயது தொடங்கியது முதல் அடுத்த 15-20 ஆண்டுகள் தேர்வுகள் மட்டுமே வாழ்க்கை என்ற அளவில்தான் அவர்கள் வாழ்வைக் கொண்டுபோகிறோம். ஐந்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு வைக்கலாமா, எட்டாம் வகுப்புக்கு வைக்கலாமா என்று அரசு யோசிக்கிறது;

ஏழைகள் `புள்ள டென்த் பாஸ் பண்ணா போறும்`; கீழ் மத்திய வர்க்கத்தினர். `ஏதாவது டிகிரி பாஸ் ஆயிட்டா போறும்`, மத்திய, உயர் மத்திய வர்க்கத்தில். இன்ஜினியரிங், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., பிலானி என்று வர்க்கத்துக்கும் சாதிக்கும் ஏற்றபடி அபிலாஷைகள் நீளுகின்றன.

ஆனால் இந்த ஒவ்வொரு கட்ட அனுமதிக்கும் மதிப்பெண் வரம்புகள் தான் இருக்கிறது. அந்த வரம்புக்குக் கீழே மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அடுத்தக்கட்ட அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வரம்புகளும் ஆண்டுக் காண்டு தொடர்ந்து உயர்த்தப்பட்டுக்கொண்டே போகின்றன. தில்லியின் புகழ்பெற்ற செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் இரண்டு வருடம் முன்பு அனுமதிக்கு வரம்பு 99.5% என்று வைத்திருந்தார்கள். அது முதல் பக்கச் செய்தியானது. அதற்கு அடுத்த ஆண்டும் அதே வரம்பு வைத்தது. ஐந்தாம் பக்கப் பெட்டி செய்தியாக மட்டுமே வந்தது. இவற்றுக்கு எல்லாம் காரணம், இருக்கும் மாணவர்களுக்கு ஏற்ற பள்ளிகள், கல்லூரிகள் இல்லை. இருப்பவையும் பல அவலமாக இருப்பதால் ஓரளவு தரம் கொண்ட நிலையங்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது.

8000 இடங்களுக்கு ஐந்து லட்சம் பேர் போட்டி இடும் அதிசயம் எல்லாம் இங்கே நிகழ்கிறது. படிப்பு முடிந்த பின்னரும்கூட பல பெரிய நிறுவனங்களில் இன்டர்வியூவுக்கே எஸ்.எஸ்.எல்.ஸி., பிளஸ் டூ, டிகிரி என்று மதிப்பெண்கள் வரம்பு இருக்கிறது.

தேர்வுகளின் கடுமையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அறுபது களில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற ஒருவர் இன்றைய ஐ.ஏ.எஸ். பாஸ் செய்வது மிகக் கடினம். ஐ.பி.எஸ்., ஜே.ஈ.ஈ. என்று எல்லாமே அப்படித்தான்.

இவையெல்லாமே பெற்றோர்களுக்குத் தெரியும்; மாணவர்களுக்கும் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது; அறிவுறுத்தப்படுகிறது. இந்த வரையறைக்குள் வர இயலாத மாணவர்களுக்குச் சமூகம் `மாடு மேய்க்கும்` சான்றிதழ் கொடுத்து அனுப்புகிறது.

ஒரு கட்டத்தில் தேவைப்படும் மதிப்பெண்கள் எடுக்க இயலாவிடில் வாழ்க்கையே போச்சு என்ற அளவுக்கு நிலைமை போகிறது. அந்த மாணவன் அல்லது மாணவி அவர்களது நண்பர்கள், உறவினர்கள் பார்வையில் பல படிகள் கீழே இறங்குகிறார்கள். பெற்றோரின் அன்பு குறைகிறது. அது குறையாவிடிலும் தங்களது தோல்வி மூலம் தன் பெற்றோரை அவமானப்படுத்திவிட்டதாக அல்லது ஏமாற்றிவிட்டதாகச் சம்பந்தப்பட்ட மாணவர்கள் குமைகிறார்கள். இது ஒரு எல்லையை மீறும் பொழுது தீவிர முடிவுகளை எடுக்கிறார்கள்.

நீட் சம்பந்தப்பட்ட செய்திகள் வரும்பொழுது மட்டும்தான் நமக்கு அது முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் மட்டும்தான் செய்தியாகிறது. ஆனால் இந்தியாவில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் இதர மாநிலங்களில் எல்லாம் இந்தத் தற்கொலைகள் முக்கிய விஷயமாக பேசப்படுவ தில்லை. அரசியல்வாதிகள் அவற்றை அரசியலாக்குவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். அல்லது ஒரு சமூகமாக நாம் அனைவருமே தேர்வுகள்தான் வாழ்க்கை என்பதை ஏற்றுக்கொண்டு அவற்றுக்குப் பழகி விட்டிருப்பதாக இருக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம் தற்கொலை நேரத்தில் `தேர்வுகள் மட்டுமே வாழ்வில்லை` என்று நாம் சொல்வது வெறும் ஆறுதல் வார்த்தைதான். நாம் யாரும் அதை நம்புவதில்லை. நமது சொந்தப் பிள்ளைகளைத் தேர்வைத் தாண்டிய மாணவ வாழ்வை வாழ விடுவதில்லை. கடைசியாக, தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் குறித்து மட்டுமே நாம் பேசுகிறோம். தோல்வியுற்றும் தற்கொலை செய்து கொள்ளாமல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த எத்தனை மாணவர்களை நாம் `மாடு மேய்க்க` அனுப்பி இருக்கிறோம் என்பது குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் வாழ்வுத் தரம் உயர நாம் என்னென்ன முனைப்புகள் எடுத்திருக் கிறோம் என்பது குறித்து தகவலில்லை.

இந்தியாவில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்; மொத்தமாக எத்தனை கல்லூரி இடங்கள் இருக்கின்றன. கல்லூரி சீட் கிடைக்காமல் எத்தனை பேர் விடுபட்டுப் போகிறார்கள் என்பன குறித்துப் பேசுவதில்லை. மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதன் அர்த்தமற்ற தன்மை குறித்து நிறைய பேசுவதில்லை. இவற்றை எல்லாம் நாம் பேச வேண்டும். விவாதிக்க வேண்டும். ஒரு சமூகமாக நாம் தேர்வுகள் பற்றியும் நவீன காலத்தில் அவற்றின் பயனின்மை குறித்தும் பேச வேண்டும். இந்தியா வுக்கே மிக உரித்தான சமூக சமநிலை இன்மை குறித்துப் பேச வேண்டும்.

`தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை,` என்பதை நாம் மாணவர்களிடம் சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெற்றோர்களிடம் சொல்லிப் பிரயோசனம் இல்லை. கல்வியாளர்களிடம் சொல்ல வேண்டும். கொள்கை வடிவமைப்பாளர்களிடம் சொல்ல வேண்டும் (Policy makers). ஆட்சியாளர் களிடம் சொல்ல வேண்டும். ஐந்தாம் கிளாசுக்குப் பொதுத்தேர்வு, எட்டாம் கிளாசுக்குப் பொதுத்தேர்வு என்று அலையும் அரசியல்வாதிகளிடமும் அவர் களுக்குக் கொடி பிடிக்கும் தொண்டர்களிடமும் சொல்ல வேண்டும். அதுதான் மாற்றத்தைக் கொணரும் என்று நம்புகிறேன்.Sridhar Subramaniam முகநூல் பக்கத்திலிருந்து

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...