தோல் கருப்பு உளுந்து வடை

தோல் கருப்பு உளுந்து வடை
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையானவை:

கருப்பு உளுந்து – 2 கப்

மிளகாய் வற்றல்2.

உப்பு சிறிதளவு

நெய் சிறிதளவு

எண்ணெய்பொரிக்க.

பெருங்காயம் – சிறிதளவு.

கருவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை

கருப்பு தோல் உளுந்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் கருப்பு உளுந்து மிளகாய் வற்றல் உப்பு பெருங்காயம் எல்லாவற்றையும் போட்டு ஒன்றிரண்டாக கெட்டியாக அரைத்து எடுக்கவும். இரண்டு ஸ்பூன் நெய் சிறிதளவு கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு அரைத்த மாவுடன் கெட்டியாக கலந்து சிறிது சிறிதாக வட்டமாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு பொரித்து எடுத்தால் மிகவும் ருமையான கருப்பு உளுந்துவடை தயார். இவற்றை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தினால் மிகவும் விசேஷமானது.

உஷா முத்துராமன்

logo
Kalki Online
kalkionline.com