நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்த நாளையொட்டி, இன்று கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், தெலுங்கில்  9, ஹிந்தியில் 2, மற்றும் 1 மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, போன்றோர் நம் கண்முன் உயிர்ப்புடன் காட்சியளித்தனர்.

சின்னையா மன்ராயர் – ராஜாமணி தம்பதியருக்கு 4-வது மகனாக 01.10.1927 ஆம் தேதி பிறந்தவர் கணேசன். கணேசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இவர் 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்தே சிவாஜி கணேசன் என்ற பெயர் நிலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரையுலகில் செவாலியர் பட்டம் முதல் நடிகர் சிவாஜி கணேசன். இவர் கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன், தாதா சாகெப் பால்கே விருது பல விருதுகள் இவரது நடிப்பின் திறமையை கௌரவிக்கின்றன.

இன்று சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளையொட்டி, தகவல் தேடுபொறியான கூகுள் நிறுவனம், தனது முகப்பு பக்கத்தின் டூடுவில் சிவாஜி கணேசனின் படத்தை வைத்து கௌரவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com