0,00 INR

No products in the cart.

நமது எம்.எஸ்.

ஃபேஸ்புக் வாசகர் பதிவுகள்!

ம்.எஸ்.ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, காற்றினிலே வரும் கீதம் ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான, ’வைஷ்வணவ ஜனதோ’ பாடலையும் எம்.எஸ். குரல் இன்னும் தூக்கிக் கொடுத்து, இன்றும் பிரபலமான பாடலாக விளங்கி வருகிறது. அதோடு, மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி எழுதிய பாடல்களையும், மறைந்த முதல்வர் ராஜாஜி உலக அமைதிக்காக எழுதிய பாடல்களையும் எம்.எஸ்.தான் பாடினார். மேலும் இவர், இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பாடி, கர்நாடக இசையின் பெருமையை உலகம் உணரச் செய்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக, 1998ல் இந்தியாவின் உயரிய விருதான, ’பாரத ரத்னா’ விருதைப் பெற்றார் எம்.எஸ்.

-கே.லதா, சென்னை.

ம்.எஸ். அம்மா அவர்கள் பாடிய, ’குறையொன்றும் இல்லை’ என்ற பாடலை கேட்டாலே எனது கண்களிலிருந்து கண்ணீர் தானாகப் பெருக்கெடுக்கும். வழியும் கண்ணீரைத் துடைக்க கைகள் மறந்தும், மறுத்தும் போகும். மேலும், இந்தப் பாடல் அனைவருக்கும் ஒரு, ’நம்பிக்கை டானிக்’ ஆகும். அதேபோல், ’காற்றினிலே வரும் கீதம்’ என்கின்ற பாடல், அம்மா அவர்களின் இனிமையான குரலில் காற்றினில் அனைவரையும் மிதக்க வைப்பது போன்ற உணர்வைத் தரும். அவரது 105வது பிறந்த நாளில், அவரைப் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர வாய்ப்பு தந்தமைக்கு, மங்கையர் மலருக்கு எனது நன்றி.

-என்.ஜெகதாம்பாள்

து, 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கம். எங்கள் தொலைக்காட்சி, மாதம் ஒரு தமிழ்ப்படம் மட்டுமே காட்டும். அதுவும் இரவு 8.00 மணிக்கு மேல். அப்படி ஒரு முறை திரையேறிய படம்தான் பக்த மீரா. அப்பொழுது நான் சிறுமி. திரையிலும் ஒரு சிறுமி ஒரு சிலையோடு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும். கதை புரியும் வயதில்லை. புராணத்தைச் சொல்லித் தரவும் வீட்டில் ஆள் இல்லை. ஆனால், பாடல்கள்?! ஆளே தேவையின்றி காதில் வாங்கிக்கொண்டு அந்த சிறு வயதில் பாடிக்(?) கொண்டிருந்த பாடல்தான், ’காற்றினிலே வரும் கீதம்.’ பாட்டோடு வளர்ந்து விட்ட மீராவின் கனிவான பார்வையும் சிரிப்பும் மனதுக்குள் தங்கி விட்டது நிஜம். நான் படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர்தான் தமிழக பத்திரிக்கைகள் வாங்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எம்.எஸ். அம்மாவைப் பற்றி நிறைய செய்திகள் வாசிக்க ஆரம்பித்தேன். 2018ல், ’கல்கி பவளவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது, அவர்களின் இளைய தலைமுறை வாரிசுகள் சிலரைக் காணக் கிடைத்தது. மனம் முழுக்க, ’பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ’ ஓடிக்கொண்டிருக்கிறது.

-மங்களகெளரி பெருமாள், மலேசியா

1970ம் ஆண்டு தி.நகரில் நடந்த உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். வழக்கமாக எல்லா விழாக்களிலும் பாடுவதால், ’ஊஞ்சல் நிகழ்ச்சி’யில் பாடச் சொன்னார்கள்.

கர்நாடக சங்கீதம் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, எம். எஸ். பாடல்கள் என்றால் உயிர்.

அவருடைய சங்கீதம் மனதை மயக்கும்! கடவுள் பக்தியை அதிகரிக்கச் செய்யும்,

‘காற்றினிலே வரும் கீதம்’ பாடிக் கொண்டிருந்தேன். திடீரென அமர்க்களம்

திருமதி எம்.எஸ். அம்மா வந்து கொண்டிருந்தார்!

நேராக என்னை நோக்கி வந்தார்!

சட்டென்று நான் பாடுவதை நிறுத்திவிட்டு, அவரை வணங்கினேன். அவரும் பதிலுக்கு வணங்கி விட்டு, “ஏன் பாட்டை பாதியில் நிறுத்தி விட்டீர்கள்? அருமையான குரல்” என்றார்.

‘’உங்கள் முன்பு நான் எப்படிப் பாடுவேன்?’’ என்று கூறி, தயங்கினேன்.

அந்த சங்கீத கலாநிதி, “ஏன் மிகவும் நன்றாகப் பாடுகிறீர்கள். நல்ல குரல் வளம். யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?

” கேள்வி ஞானம்தான். யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. உங்கள் கச்சேரி எங்கே நடந்தாலும் விடாமல் வருவேன்” என்று நான் கூறியவுடன், உற்சாகப்படுத்தி பாட வைத்தார். எத்தகைய பெருந்தன்மை?! எப்பேர்ப்பட்ட சங்கீத திலகத்திடமிருந்து பாராட்டு பெற்றது எனது அதிர்ஷ்டம்!

அதன் பிறகு ஒவ்வொரு முறை பாடும் பொழுதும் எம். எஸ். அம்மா பக்கத்தில் இருந்து ரசிப்பது போல் தோன்றும்! இப்போது எனது வயது 81. மறக்க முடியாத சங்கீத அனுபவம்!

– எஸ். நாராயணன், சென்னை.

ரு சமயம் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. செம்மங்குடி சீனிவாச ஐயர் தலைமை தாங்கினார். ஒரு பெரிய மாலையை எம். எஸ். சுப்புலட்சுமிக்கு அணிவிக்க செம்மங்குடியிடம் வழங்கப்பட்டது. அவரும் அதனைப் பெற்று, எம். எஸ்.க்கு அணிவிக்கும் முகத்தான் மைக்கை பிடித்தவர். ’’எம். எஸ். ஒரு பெண்மணி. அவருக்கு நான் மாலை போட இந்த சபை அனுமதிக்கிறதா?’’ என்று கேட்டார்.

அவையில் இருந்தவர்கள் அனுமதி தந்தனர். அடுத்து, ’’இதற்கு எம். எஸ். சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவம் அனுமதி அளிக்கிறாரா?’’ என்று கேட்டார். அவரும் அனுமதித்தார்.

அடுத்து, “என்னுடைய துணைவியார் இதனை அனுமதிக்கிறாரா?’’ என்று கேட்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இறுதியாக, ’’எம். எஸ்.சுப்புலட்சுமி இதற்கு ஒப்புக்கொள்கிறாரா?’’ என்று கேட்டார்.

அவரும் மகிழ்ச்சியாகத் தலையை ஆட்டினார். மீண்டும் மைக்கைப் பிடித்த செம்மங்குடி, ’’எத்தனை பேர் அனுமதி தந்தாலும் எனக்கு ஏதோ ஒன்று உறுத்துகிறது.

அதனால் திரு. சதாசிவம் அவர்களே மாலை அணிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி, மாலையை சதாசிவத்திடம் ஒப்படைத்தார்.

சதாசிவமும் மாலையைப் பெற்று எம். எஸ்.க்கு அணிவித்தார்.

அவையின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. செம்மங்குடியை தடுத்த அந்த ஏதோ ஒன்றுதான் என்ன? அதன் பெயர்தான் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம்.

இது இன்றளவும் இந்தியாவில் ஒட்டிக்கொண்டு இருக்கிற காரணத்தால்தான் உலகமே இந்தியாவை பார்த்து வியந்து கொண்டிருக்கிறது.

-சுந்தரி காந்தி, பூந்தமல்லி.

சைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

வருடம் 1967 அல்லது 1968. நான் அப்பொழுது ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். நாங்கள் நாக்பூரில் காந்தி நகர் ஏரியாவில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராம் நகர் என்ற இடத்தில் எம்.எஸ். அம்மா பாட வந்திருக்கிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. அப்போது பகல் வேலை 11 மணி இருக்கலாம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான் பள்ளிக்குப் போகவில்லை என்று நினைக்கிறேன். என் அம்மா மற்றும் எங்கள் தெருவில் உள்ள எல்லோரும் ராம் நகருக்கு வேகவேகமாக ஓடத் துவங்கினர். என் அம்மா, வீட்டில் போட்டது போட்டபடி, பாட்டி இருந்ததால் கதவைக் கூட பூட்டவில்லை, ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். என் அண்ணன் எங்கோ விளையாடச் சென்று விட்டான். நான் என் தந்தையின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றது நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் தெருவில் இருந்த பலரும் ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடி வந்தனர். அதில் ஓரிருவர் ஹிந்திக் காரர்கள் கூட. அன்றுதான் நான் முதன்முதலாக எம்.எஸ். அம்மாவை நேரில் பார்த்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், தூரத்திலிருந்துதான் பார்த்தேன். சிறுமியாக இருந்ததால் சங்கீதம், அதன் மகத்துவம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது. எவ்வளவு நேரம் பாடினார்… எப்போது எல்லோரும் திரும்பி வந்தோம் என்றெல்லாம் எனக்கு இப்போது நினைவில்லை. அதன் பிறகு, எனக்கு எம்.எஸ். அம்மாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. என்னுடைய மாமா பெண் எம்.எஸ். அம்மா முன்னிலையில் பாடி இருக்கிறாள். எம்.எஸ். அம்மா பாடிய ஏதேனும் ஒரு பாடலையாவது கேட்காமல் நான் ஒரு நாளைக்கூட கழிப்பது இல்லை. ’அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்’ என்ற பெருமை என்றென்றும் எனக்கு நீடிக்கும்.

– சுதா திருநாராயணன்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!

- மஞ்சுளா சுவாமிநாதன்  கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு. கடந்த இரண்டு வருஷமா வீட்டுலயே  முடங்கிக் கிடந்த எங்களுக்கு சென்ற டிசம்பர் மாதம் ‘ஓமைக்ரான்' வருதே,...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board...

முத்துக்கள் மூன்று

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா. தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்...

எல்லாம் நாராயணன்!

0
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி படங்கள்: சேகர் இந்த ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் பல தத்துவங்களையும், மிக எளிதில், அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகளாக...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டபிராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள்....