நவராத்திரியில் அம்பிகை அலங்காரம்!

நவராத்திரியில் அம்பிகை அலங்காரம்!
Published on
வாசகர் ஜமாய்க்கிறாங்க!
– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பிகையை ஒன்பது விதமாக அலங்கரிப்பார்கள்.

முதல் நாள் – மது, கைடபர் என்ற அரக்கர்களின் அழிவிற்குக் காரணமாக விளங்கிய குமரி வடிவ அலங்காரம்.

இரண்டாவது நாள் – மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரிஅலங்காரம்.

மூன்றாவது நாள் – மகிஷாசுர வதம் முடித்து, சூலத்தைக் கையில் ஏந்தி மகிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கல்யாணி வடிவம்.

நான்காம் நாள் – சிம்மாசனத்தில் அமர்ந்து, இன்னல்களிலிருந்து விடுபட்ட தேவர்களும், முனிவர்களும் செய்யும் தோத்திரங்களை ஏற்று, அவர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெயதுர்கை அலங்காரம்.

ஐந்தாம் நாள் – சுகாசனத்தில் வீற்றிருந்து, சும்பன் என்ற அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் துர்கை அலங்காரம்.

ஆறாம் நாள் – சர்ப்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகா தேவி அலங்காரம்.

ஏழாம் நாள் – சண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்த பின், பொற்பீடத்தில் அமர்ந்து, வீணை வாசிக்கும் சாம்பவி கோலம்.

எட்டாம் நாள் – ரக்தபீஜன் வதைக்குப் பிறகு, கருணை நிறைந்தவளாய், அஷ்ட ஸித்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் கோலம்.

ஒன்பதாம் நாள் – அரக்கர்களை அழித்து முடித்து, கரங்களில் வில், பாசம், அங்குசம், சூலம் ஏந்தியவளாக சிவசக்தி வடிவமாகக் காட்சி தரும் காமேஸ்வரி கோலம்.

விஜயதசமி நாளன்று அம்பிகை பார்வதியின் ஸ்தூல வடிவமான விஜயாம்பாளாக அலங்கரிக்கபடுகிறாள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com