0,00 INR

No products in the cart.

நவராத்திரி கொலு நினைவில் கொள்ள…

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

* நவராத்திரி கொலுவில் மாவிலை தோரணம் கட்டும்பொழுது பிளாஸ்டிக் மாவினால் சிறுசிறு பளபளக்கும் குந்தன் கற்களை ஒட்டிவிட்டால் பளபளக்கும்.

* கொலு பொம்மைகள் பழையதாக இருந்தால், நெற்றியில் பளிச்சென ஸ்டிக்கர் பொட்டு, கண்ணுக்கு மை தீட்டி, கவரிங் நகைகளை மாட்டிவிட்டால் பளிச்சென இருக்கும்.

* செட்டியார் பொம்மையின் முன்பு பல்லாங்குழியை வைத்து, அதில் பாரம்பரிய உணவான சாமை, தினை, வரகு, குதிரைவாலி என நிரப்பி அவர் வியாபாரம் செய்வது போல செய்து, அவர் சொல்வதுபோல அதன் பயன்களை எழுதி கையில் மாட்டி விடுங்கள்.

* அஷ்ட லட்சுமிகளை வைக்கும்போது, ஒவ்வொரு லட்சுமிக்கு கீழேயும் ஒவ்வொரு தாமரை பூ, அதாவது ஒரு செந்தாமரை, ஒரு வெள்ளைத் தாமரையை வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

* கொலு பார்க்க வருபவர்களுக்கு செடி கன்றுகள், காய்கறி விதைகள் என இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், வீட்டுத் தோட்டத்தை உண்டாக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அன்பளிப்புகள் கொடுக்கலாம்.

* கொலுவில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை எழுதி ஒட்டிவிட்டால், பார்க்க வருபவர் படித்துப் பயன் பெறுவர். மாஸ்க், சோப்பு, சானிடைசர் போன்றவற்றை வைத்துக் கொடுங்கள். பயனாக இருக்கும்.

* கொலுவில் பார்க், மலை போன்று அமைக்கும்போது சிறிய தகர டப்பாவை மணலில் புதைத்து, அதிலிருந்து சாம்பிராணி புகை வரும்படியாக அமைத்தால், மலையிலிருந்து பனிப்புகை வருவது போன்று இருக்கும்.

* உறவினர், நண்பர்களோடு வீட்டில் வேலை செய்பவர்களையும் கொலு பார்க்க அழையுங்கள்.

* திருநங்கை, விதவை, மணமாகாத பெண்கள் என வேறுபாடு பார்க்காமல் அவர்களும் பெண்கள்தான் என்ற விசாலமான மனத்தோடு அவர்களுக்கும் வெற்றிலை பாக்கு, பழம், சுண்டல், தேங்காய் கொடுங்கள்.

* பித்தளை குங்குமச் சிமிழ், சிறிய தட்டு, ஊதுபத்தி ஸ்டாண்ட், சந்தன கும்பா என பித்தளை சாமான்களை வைத்துக் கொடுங்கள். புண்ணியம் கூடும்.

* கொலு வைக்கும் இடத்தில் டி.வி.யை வைக்காதீர்கள்.

* கொலுப் படிகளில் வரிசையாக மண் அகல் ஏற்றி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

* கொலு வைக்கும் அறை சுவர்களில் அழகான ஓவியங்களை மாட்டினால் கூடுதல் அழகு தரும்.

* குட்டி குட்டி பொம்மைகளை அழகான, அகலமான தாம்பாளத்தில் கலர் பேப்பரை ஒட்டி, அதில் வரிசையாகவோ ரவுண்டாகவோ வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். குட்டி பொம்மைகள் கீழேயும் விழாது.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி

* கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும் அன்பைப் பெருக்கவும், பாரம்பரிய கலாசாரத்தைக் கடைப்பிடிக்கவுமே. வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது. மனித நேயம் வளர உதவியாக அது இருக்க வேண்டும்.

* நவராத்திரிக்கு பயன்படுத்தும் விளக்குகளை சாம்பலுடன் இரண்டு அல்லது மூன்று சொட்டு மண்ணெண்ணெய் விட்டுத் தேய்த்த பின், தனி சாம்பலால் ஒருமுறை நன்றாகத் தேய்த்து, சுத்தமான துணி கொண்டு துடைத்துவிட்டால் பளபளவென்று இருக்கும்.

* எளிதில் உடையக்கூடிய, ஒட்டு வேலைப்பாடுகளுடைய பொம்மைகளை, காது குடைய கடைகளில் விற்கும் காட்டன் பட்ஸை வாங்கித் தூசி துடைத்தால் மிகச்சிறிய பள்ளங்கள், இடுக்குகளைக்கூட உடையாமல் துப்புரவாகத் துடைத்து, ‘பளிச்’சென்று ஆக்கி விடலாம்.

* நவராத்திரிக்கு எப்போதும் தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என்றுதான் கூப்பிட்டு பூஜை செய்வோம். இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாக, பக்கத்தில் வசிக்கும் முதியோர்களை, முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்களைக் கூப்பிட்டு பூஜை செய்து பாருங்கள். அவர்களும், `தங்களை உறவினர்கள் போல் நேசிப்பவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்’ என்று மனம் மகிழ்ந்து போவார்கள்.

* கொலுவில் தெப்பக்குளம் அமைக்கும்போது தெப்பக்குளத் தண்ணீரில் துணிக்குப் போடும் உஜாலா லிக்விட் நீலத்தை சிறிது கலந்தால் தெப்பக்குளம் தத்ரூபமாக இருக்கும்.

* கொலு படிக்கட்டுகளின் ஓரங்களில் சிறிய கலர் கலரான ப்ளாஸ்டிக் பந்துகள் வைத்து பெவிகால் தடவி ஒட்டிவிட்டால், படிகள் பார்க்க வித்தியாசமாக இருக்கும்.

* கொலு பொம்மைகளில் வார்னிஷ் பூசிவிட்டால் பளிச்சென்று மின்னும். தூசி படர்ந்தால் துடைத்துவிடலாம். பெயிண்டும் உதிராது.

* நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை தம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தது வைத்தபடி வாடாமல் இருக்கும்.

* மாலையில் வாங்கும் மல்லிகைப் பூ, மறு தினத்திற்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதிதாக மணமுடன் இருக்கும்.

* பக்கத்திலிருக்கும் ஏழைப் பெண்களை அழைத்து சாப்பாடு போட்டு, சேலை வைத்துக் கொடுங்கள். அடுத்து வரும் தீபாவளிக்கு உடுத்திக்கொள்ள அவர்களுக்குப் பயன்படும்.

* கொலு முடிந்த பின் பொம்மைகளை மொத்தமாக பேக் செய்வதைத் தவிர்த்து, ஒவ்வொரு படி பொம்மையையும் தனித்தனியாக பெட்டிகளில் வைத்தால், அடுத்த வருடம் கொலு வைக்கும்போது அந்தப் படிக்குரிய பொம்மைகளை வரிசைப்படுத்த சுலபமாக இருக்கும்.
– சீதாலக்ஷ்மி, கேரளா

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

2
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

1
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...