0,00 INR

No products in the cart.

நவராத்திரி புதிர் சொல்லு சொல்லு… யார் சொல்லு…

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

1. சிவப்பு சிப்பாய் காவலிருக்க, சிங்கார சித்திரப் பெண்ணழகி வளைகரங்களில் பிடிபட்டாளே – அம்மாக்கண்ணு!
அவ யாரு யாரு… யாரு சொல்லு – அம்மாக்கண்ணு!

2. மூன்றெழுத்தில் இவர் முகமிருக்கும் – இவர்
முறுவலிக்கும் அழகு நம்மை இழுக்கும்.
சாதி, மத பேதமில்லை. உயர்வு தாழ்வுமில்லை – இந்த
சமத்துவப் பெரியார் யாரு சொல்லு!

3. உருவினிலே சிறியது, உள்ளபடி நல்லது,
உத்ஸவமாம் கொலு விழாவில் உலா வரும் உணவிது.
பாரம்பரியம் கொண்டது, படைப்பதற்கும் எளியது
பாரு, இதன் பேரு என்ன? சொல்லு!

4. இருவரும் தோழிகள், இணை பிரிவதில்லை!
இவர்கள் இல்லாத பண்டிகை இல்லை.
விருந்துக்கு இவர் துணை என்றும் எல்லை!
மருந்துக்கும் உதவிடும் இவர்க்கு ஈடில்லை!
யாரு யாரு… யார் இவர் யாரு?

5. மங்கலச் சின்னமாய் மாதர்கள் கொள்வது,
பொங்கல் பண்டிகைக்கும் பொருத்தம் உள்ளது.
தங்க நிறமதை தன்னிடம் கொண்டது,
தரணியில் இது இல்லாத வீடெது?

6. நாட்டுக்கு நல்லது செய்யும் நங்கையர்கள் இந்த மூன்று பேரு.
பாட்டுப் பாடி, ஆட்டமாடி, இங்கு பாராட்டுவது பல பேரு,
பாவைகள் இந்த மூன்று பேரு இல்லாட்டி நமக்குப் பெரும்பாடு.
யாரு யாரு… இவங்க பேரைச் சொல்லுங்க?

விடைகள் :

1.செம்மண் கோலம், 2.பொம்மை, 3.சுண்டல், 4.வெற்றிலை பாக்கு, 5.மஞ்சள், 6.மலைமகள், அலைமகள், கலைமகள்.

– ஆர்.ஜெயலெட்சுமி, மதுரை

———————————————–

டிசா மாநிலத்தில் நவராத்திரி விழாவை 16 நாட்கள் கொண்ட பூஜையாகக் கொண்டாடுகிறார்கள். ஆயுத பூஜையன்று பூரியில் ஜெகந்நாதர் கோயிலில் அருளும் ஜெகநாதரின் கரங்களில் உள்ள சங்கு சக்கரங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெறும். அமாவாசைக்கு அடுத்து வரும் ஐந்தாவது நாளை ‘அசுவ பஞ்சமி’ எனக் கொண்டாடுகின்றனர். அசுவம் என்றால் குதிரை. அன்று குதிரைகளுக்கு திருமஞ்சனம் செய்து, திலகமிட்டு, பூமாலைகள் அணிவித்து வேத பண்டிதர்கள் பூஜை செய்வார்கள். அதற்கு அடுத்த நாள் யானைகளை ஆற்று நீரில் நீராட்டி கஜபூஜை செய்வது வழக்கம்.

– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

———————————————–

• சிம்ம வாகினியாக விளங்குபவள் வனதுர்கை.

• மூன்று சக்திக்கும் மூலமானவள் மூல துர்கை.

• கையில் சூலத்துடன் காட்சி தருபவள் சூலினி துர்கை. அர்ச்சகர்கள் இந்த விக்ரகத்தைத் தொடமாட்டார்கள். கோலினால் ஆடை, மாலைகளை அணிவிப்பர்.

• சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து அக்னிரூபமாய் வந்தவள் ஜாதவேதா துர்கை.

• தட்ச யாகத்தில் சினங் கொண்ட சிவனை சாந்தமடையச் செய்தவள் சாந்த துர்கை.

• அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளித்தபோது பராசக்தி வேடுவச்சியாக வந்ததால் சபரீதுர்கை.

• பண்டாசுர யுத்ததில் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரிக்கு உதவியாக எதிரிகள் உள்ளே வராமல் அக்னி ஜவாலையாக தடுத்தவள் ஜ்வாலா துர்கை.

• லவணாசுரனை அழிக்க லட்சுமணன் சென்றபோது ராமலட்சுமணர்கள் வெற்றி பெற உதவிய துர்கை லவணதுர்கை.

• ராமருக்கும் அர்ச்சுனனுக்கும் வெற்றி பெற உதவியவள் ஜலதுர்கை.

• யோகிகளின் அஞ்ஞான இருளகற்றியவள் தீபதுர்கா.

• தேவர்களுக்கு அமுதம் கிடைக்கவும் அசுரர்களுக்கு கிடைக்காமலும் செய்தவள் ஆஸுரி துர்கா.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...