online@kalkiweekly.com

spot_img

நான் சொன்னேன்னு சொல்லாதீங்க!

ஒருபக்க கதை

கதை : கீதா சீனிவாசன்
ஓவியம் : சுதர்ஸன்

சுந்தரேசனுக்கு அன்று காலையிலிருந்தே ஏகப்பட்ட ஃபோன் கால்! தங்கை சுபத்ரா, “அண்ணேஇங்க ராத்திரி களேபரமாய்டுச்சு. நம்ப புனிதா யாரையோ லவ் பண்றாளாம். அவரு இடிஞ்சு போய் உட்கார்ந்திட்டாரு. குடும்ப மானம் அவ்வளவுதானான்னு புலம்பறாரு. ஏன் இந்த கல்யாணப் பேச்சை எடுத்தோம்னு ஆயிடுச்சு. நீ எதேச்சையா வர்றா மாதிரி வந்து, புனிதாவை கண்டிச்சுப் பாரேன். அப்புறம் முக்கியமா, நான் சொன்னேன்னு காட்டிக்காத!”

என்னடா இதுவென்று சுந்தரேசன் கவலைப்பட்டார். பிறகு, பத்து மணி வாக்கில் மகேஷ் பேசினான். “மாமா எனக்கு எதுவுமே புரியலைஅக்கா யாரையோ லவ் பண்ணுதாம். வீட்ல சண்டை. யாரும் சரியா சாப்பிடல. நீங்க வந்து சமாதானப்படுத்துங்க மாமா. நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க. அப்பா பலி போட்டுருவாரு!”

சுந்தரேசனின் கவலை இன்னும் அதிகமாயிற்று. அந்தக் காலத்துல பெரியவங்க அறிவுரைக்கு எவ்வளவு மரியாதை இருக்கும்? மாலை போகலாம். சரிஎப்படி ஆரம்பிப்பது? எப்படித் தெரியும் என்றால்…? தங்கையின் கணவர் முன்கோபி ஆச்சே?

மாலைக்குள் புனிதாவே ஃபோன் செய்தாள். “மாமா என்னை மன்னிச்சிடுங்க. நேர்ல தனியா எல்லாத்தையும் சொல்றேன். மனசுல ஒருத்தர வெச்சுக்கிட்டு எப்படி மாமா வேற ஒருத்தரோட குடும்பம் நடத்த முடியும்? அப்பா எரிமலையா இருக்காரு. முடிஞ்சா வீட்டுக்கு வாங்க மாமா. நான் சொன்னேன்னு காட்டிக்காதீங்க!”

மாலைபலத்த யோசனையுடன் சுந்தரேசன் தங்கை வீட்டிற்குள் நுழைந்தார். நடுக்கூடத்தில் சுபத்ராவின் கணவர் கண்கள் சிவக்க, கைகளைப் பிசைந்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார். உள்ளே வந்த சுந்தரேசனை, நக்கீரனை சிவபெருமான் பார்த்ததுபோல் பார்த்தார். இந்த நேரத்தில் இவன் எப்படி? “வாவாஎன்ன விசயம்” தடிப்பான குரலில் கேட்டார். சுந்தரேசனுக்கு ஞாபகம் வந்தது. ‘நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க’ என்ற வேண்டுகோள். சரி பிறகு எப்படி ஆரம்பிப்பது? சுற்றுமுற்றும் யாருமில்லை. “ஹி ஹி சும்மாதான் வந்தேன். வீட்ல அப்பான்னா உன்னை மாதிரிதான் இருக்கணும். கம்பீரமா! நியாயமா! நமக்கெல்லாம் கௌரவம் ரொம்ப முக்கியம். ஏதோ சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். ஆனா, ஒண்ணுநான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.”

விறு விறுவென்று வெளியேறினார் சுந்தரேசன்!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப் போட்டி! – 2ம் பரிசுக்கான கதை

அவர் பொருட்டு பெய்யும் மழை! கதை      : ஆதலையூர் சூரியகுமார் ஓவியம் : லலிதா சின்ன வரப்பில் இருந்த நுனா மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தார் கதிர்வேல் தாத்தா. 'தன் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்ச...

விடுபடுவோம்!

0
ஒரு கப் Zen - 13 எழுத்து : லேzy இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மனிதனுக்கு survival ஒரு பொருட்டே அல்ல. உணவுக்கும் நீருக்கும் பஞ்சம் இருந்த காலமெல்லாம் மலையேறியாகி விட்டது. புயலோ, பெருமழையோ, வெள்ளமோ, எதுவாயினும்...

மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
மிதக்கத்தான் ஆசை! இதுவரை மிதக்கவில்லை. அதனால், கப்பல் பயணம் செய்யத்தான் ஆசை. விமானத்தில் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது. வெளியே எதையும் பார்க்க முடியாது. கப்பலின் மேல் தளத்தில் நின்று, நடந்து எல்லாவற்றையும் பார்த்து...

நிழலும் நிஜமும்!

0
கதை : மாதவி ஓவியம் : பிரபுராம் ஏற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர். “ஏய்யா தம்பிகளா... ஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க.” கண்டக்டரின்...

ஜோக்ஸ்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க படங்கள் : பிரபுராம்  “உங்க வீட்டுக்காரர் சமையல் டிப்ஸ் தந்தார்னு ஏன் கோபப்படறே?” “பின்ன... சீடை கெட்டியானா, ஊற வைச்சு சப்பிடலாம் அல்லது பொடி செய்து சாப்பிடலாம்னு சொல்றாரே!” - ஆர்.பத்மப்ரியா, திருச்சி  “தலைவரே! உங்களுக்கு லோகமான்ய...
spot_img

To Advertise Contact :