0,00 INR

No products in the cart.

நான் வந்துட்டேன்: பாலிவுட் நடிகர் சோனு சூட்!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித்துறை சோதனையிட்டது. இந்நிலையில் தான் மீண்டும் மக்கள் சேவைக்கு வந்து விட்டதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பலருக்கும் சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக திகழ்ந்து வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மும்பையில் சோனு சூட் மற்றும் அவர் கூட்டாளிகளுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில் அவர் 20 கோடி ரூபாய் வரை அவர் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருமான வரிச் சோதனை குறித்து நடிகர் சோனு சூட் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“நீங்கள் எல்லா சமயங்களிலும் உங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல வேண்டியதில்லை. காலம் அதற்கான பதிலைச் சொல்லும். நான் வலிமையுடனும் திறந்த மனதுடனும் மக்களுக்காக சேவை செய்ய என்னை அர்ப்பணித்துள்ளேன். என் அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றவும் தேவையானவர்களுக்கு உதவுவதற்காகவுமே காத்திருக்கிறது. கடந்த 4 நாட்களாக சில விருந்தினர்களை சந்திப்பதில் பிசியாக இருந்ததால், உங்கள் சேவைக்காக வர இயலவில்லை. இப்போது மீண்டும் வந்துவிட்டேன். என் பயணம் தொடர்கிறது.

-இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழகத்தில் புதிய வகை கொரோனா; மாஸ்க் கட்டாயம்!

0
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் புதிய...

டெல்லி சென்றார் ஓபிஎஸ்!

0
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் நேற்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.  அதிமுக-வில் ஒற்றைத் தலைமை கருத்துக்கு தீவிர...

திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!

0
நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று அப்பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை...

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி; நெல்லை அணி அபாரம்!

0
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது....

கல்யாணத்தில் கலாட்டா: நண்பனைச் சுட்ட மணமகன்!

0
உத்தரபிரதேசத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மணமகன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் பிராம்நகரைச் சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா (25). இவருக்கும் அதே...