0,00 INR

No products in the cart.

நியாயமா அய்யா?

விஜய்டாலி
ஜெகநாதன் வெங்கட்

“வாடா… வா…” என்று அவனை வரவேற் றேன். அவனுடைய மகனைப் பார்த்து, “மதன், நல்லாப் படிக்கிறியா?” என்று வினவினேன். அவன், “ஆமாம்” என்று தலையாட்டினான்.

“என்ன சுப்பு, திடீர் வருகை?” என்று வினவினேன்.

“ஒரு சின்ன உதவி செய்யணும்” என்றான்.

“சொல்” என்றேன்.

“மதன் அடுத்த வாரம் ஒரு பேச்சுப் போட்டி யில் கலந்துகொள்ளப் போகிறான். தலைப்பு ‘பாரதியின் தீர்க்க தரிசனம்’. அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பாரதி என்ற பெண் இவனுக்குச் சரியான போட்டியாக இருக் கிறாள். நீ எழுதிக் கொடுத்தால் நிச்சயமாக இவன் வெற்றி பெறுவது உறுதி.”

சுப்பு கூறியதைக் கேட்டதும் எனக்குப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே பேச்சுப் போட்டிகளுக்கும் கட்டுரைப் போட்டிகளுக்கும் பலருக்கு எழுதிக் கொடுத்திருக் கிறேன். அவர்களில் நிறையப் பேர் பரிசு பெற்றிருக்கிறார்கள். அதை நினைக்கும் பொழுதெல்லாம் கொஞ்சம் தலையில் கனம் கூடிவிடும்.

“சரி சுப்பு. இன்று இரவு எழுதிவிடுவேன். நாளை வந்து வாங்கிக்கொள்” என்று கூறி, அவனை அனுப்பி வைத்தேன். என்னிடம் ஒரு நூலகமே இருந்தது. அதில் பாரதியார் பற்றிய புத்தகங்கள் நிறைய இருந்தன. அவற்றின் சாராம் சத்தை ஒன்று சேர்த்து ஒரு அழகான கட்டுரையை எழுதி முடித்தேன். அதைப் படித்துப் பார்த்த பொழுது நன்று, நன்று என என்னையே பாராட்டிக் கொண்டேன்.

காலையில் மகனை அழைத்துக்கொண்டு வந்தான் சுப்பு. எழுதி வைத்த கட்டுரையை பையனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். ஏற்ற, இறக்கங்களோடு எப்படிப் பேசுவது என்று சொல்லிக் கொடுத்தேன். புறப்படும் பொழுது அவன் என் காலில் விழுந்து ஆசிர் வாதம் வேண்டினான்.

“உனக்குத்தான் வெற்றி. போய் வா” என்று அனுப்பி வைத்தேன்.

“பேச்சுப் போட்டியன்று நீயும் வா” என்று அழைத்தான் நண்பன்.

ஞாயிற்றுக்கிழமை பேச்சுப் போட்டி நடக்கும் பள்ளிக்குச் சென்றேன். ஒரு பெரிய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் பின்வரிசை யில் ஒரு பார்வையாளனாக அமர்ந்துகொண்டேன். என்னை யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்கவில்லை. பேச்சுப் போட்டி தொடங்கியது. பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேசினார்கள்.

சிலருடைய பேச்சு மிகவும் சராசரியாக இருந்தது. ஒன்றிரண்டு மாணவ, மாணவியர் சுமாராகப் பேசினார்கள். ‘அடுத்த போட்டியாளர் பாரதி’ என்று அறிவிக்கப்பட்டபொழுது பலத்த கரவொலி எழுந்தது. பார்வையாளர்களில் பலர் அவளை ஏற்கெனவே தெரிந்தவர்கள்போல.

பாரதி கம்பீரமாக ஒலிப்பெருக்கிக்கு முன்னால் நின்றாள். பத்து நிமிடங்கள் அங்கு கருத்து மழை வெளுத்து வாங்கியது. தெளிவான, அலங்கார அடுக்குமொழிகள் இல்லாத அமைதியான பேச்சு. அவள் பேசி முடித்த பொழுது ஒரே கைதட்டல். என்னையும் அறியா மல் நானும் கை தட்டினேன்.

கடைசியாக மதன் பேச அழைக்கப் பட்டான். அவனுடைய வகுப்புத் தோழர்கள் கைகளை பலமாகத்தட்டி அவனை வரவேற்றார்கள். மதன் ஒருவித மிடுக்கோடு மேடையேறினான். நான் சொல்லிக் கொடுத்தபடி ஏற்ற இறக்கத்தோடு பேசினான்.

எப்படிக் கவர்ச்சியோடு பேசினால் கேட் பவர்களைக் கட்டிப்போட முடியும் என்பதை தமிழாசிரியராய் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தில் நன்கு அறிந்திருந்தேன். அதை யெல்லாம் கவனத்தில்கொண்டுதான் மதனுக்கு எழுதிக் கொடுத்திருந்தேன். பார்வையாளர்கள் மதனின் பேச்சை ரசித்துக் கைதட்டினர். எனக்கு ஏகப்பட்ட சந்தோசம்.

இறுதியில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மதன் முதல் பரிசையும் பாரதி என்ற அந்தப் பெண் இரண்டாம் பரிசையும் பெற்றிருந்தனர். நானே பரிசு பெற்றது போல் மனசுக்குள் ஒரு மதர்ப்பு.

வேக வேகமாக பேருந்து நிலையத்தை அடைந்தேன். நான் ஏறவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை. அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தேன். இரண்டு மாணவிகள் எனக்கு முன்னால் இருந்த இருக்கைகளில் வந்தமர்ந்தனர். அவர்களில் ஒருத்தி இரண்டாம் பரிசு பெற்ற பாரதி. எனக்கு அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது.

“ஏம்மா, உன் பேரு பாரதி தானே? சற்று முன்னர் ஒரு பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது நீ தானே?” என்று உரை யாடலை ஆரம்பித்தேன்.

“ஆமாங்கய்யா… உங்களுக்கு எப்படி…” என ஆச்சர்யத்தோடு கேட்டாள் அந்த மாணவி.

“நானும் ஒரு பார்வையாளனாக அங்கு வந்திருந்தேன். உன் பேச்சையும் கேட்டேன். நல்லா இருந்திச்சு. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா நீ முதலிடத்திற்கு வந்திருக்க லாம்” என்றேன் ஆறுதலாக.

“பரவாயில்லீங்க அய்யா. இரண்டாம் பரிசு பெற்றதே எனக்குப் பெருமையா இருக்குது. நான் தோத்தது மதன் என்ற ஒரு மாணவன் கிட்ட இல்லங்கய்யா. ஒரு புலமை வாய்ந்த தமிழாசிரியரிடம் மோதி அல்லவா தோற்றுப்போய் விட் டேன்” என்று கூறிச்சிரித்தாள் பாரதி.

“என்னம்மா சொல்ற? எனக்குப் புரிய லையே?” என்று திகைப்புடன் கேட்டேன்.

“மதனோட அப்பா தனக்குத் தெரிந்த ஒரு தமிழாசிரியரை அணுகி மகனுக்காகக் கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல, அந்தத் தமிழாசிரியர் மதனுக்குப் பேசுவதற்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார். இதெல்லாம் மதன் வீட்டுப் பக்கம் வசிக்கிற என் மாமா பையன் மூலம் எனக்குத் தெரியவந்தது” என்று விவரித் தாள் அந்தப் பெண். யாரோ பொட்டில் அடித்தது மாதிரி இருந்தது.

பாரதி மீண்டும் தொடர்ந்தாள்: “என் வருத்த மெல்லாம் உழைப்புக்குப் பலனில்லாமல் போய் விட்டதே என்பதுதான். எத்தனை நாள் நூலகத்திற்கு நடையாய் நடந்து புத்தகங்களைத் தேடி எடுத்துப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்திருப்பேன். அதையெல்லாம் ஒரு நொடியில் நொறுக் கிட்டாரே அந்தப் பாவி தமிழாசிரியர். என் கண்ணில் மட்டும் அவர் பட்டால் அவர் செய்தது நியாயமா என்று நறுக்குன்னு கேட்பேன்.”

அந்த மாணவியின் வார்த்தைகள் அம்புகளாக என் மனதைத் துளைத்தன. ஒரு திறமைசாலி யான மாணவிக்கு அநியாயம் செய்துவிட்டதாக மனசாட்சி என்னைச் சாடியது. ‘நான் தானம்மா அந்தப் பாவி’ என்று ஒத்துக்கொள் வதற்கு என் வறட்டு கௌரவம் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அந்தப் பள்ளி மாணவி, ஆசிரியரான எனக்கு ஒரு நல்ல பாடத்தைப் புகட்டிவிட்டாள்.

இப்போதெல்லாம் நான் யாருக்கும் எழுதிக் கொடுப்பதில்லை. ‘பேச்சுப் போட்டிக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று யார் வந்து கேட்டாலும் ‘நூலகத்திற்குப் போ. நீயே தயாரித்துக்கொள்’ என்று சொல்வதோடு சரி.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அருள்வாக்கு

0
விநாயகர் வழிபாடு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ‘தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல்,...

உங்கள் நூலகத்துக்குப் பெருமை சேர்க்கும்!

0
நூல் அறிமுகம்,நறுக்குத் தெறிப்புகள் அனுராதா கிருஷ்ணசாமி,திருமூலன் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி, அவர் எழுதிய சிறுகதைகளில், சிறந்த இருபது கதைகளடங்கிய தொகுப்பு ஒன்றை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் தேர்வையும் தொகுப்பையும் மாலன் செய்திருக்கிறார். தொகுப்பில்...

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

0
முகநூல் பக்கம் எழுத்தும் ஓவியமும் ராஜன் ஒரு ஓவியனின் டைரியிலிருந்து... பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை. இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது,...

பாலாபிஷேகம்

0
தமிழ் ஹெச்.என்.ஹரிஹரன் “மெய்யாலுமா சொல்றே..?” காலி பிளாஸ்டிக் குடங்களின் கழுத்திற்குள் கையை நுழைத்து பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக திரேசாவைப் பின் தொடர்ந்தாள் கண்ணம்மா. “ஆமாக்கா.. விடிகார்த்தால டமார்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான் நானும் புரண்டு படுத்தேனா... எப்பவும்...

ஒரு பாடல் செட்டுக்கு 2 கோடி செலவு செய்யப்பட்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்...!12 எஸ்.சந்திரமௌலி ஐஸ்வர்யா ராயின் முதல் படமான ‘அவுர் பியார் ஓகையா’விலிருந்து விலகி, இரண்டு வாரங்கள் இருக்கும், மும்பையிலிருந்து மிகப் பிரபல மான வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ரத்தன் ஜெயின் டெலிபோன் செய்தார். அடுத்து அவர்கள்...