நிழலும் நிஜமும்!

நிழலும் நிஜமும்!
Published on

கதை : மாதவி

ஓவியம் : பிரபுராம்

ற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர்.

"ஏய்யா தம்பிகளாஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க." கண்டக்டரின் கத்தல் கேட்டு, நெருக்கித்தள்ளி உள்ளே போனால் நிற்க இடமிருந்தது.

சுற்றிவர பை சுமந்த வயசான, நடுத்தர, யுவ யுவதிகள் மற்றும் இளம், பேரிளம் பெண்கள். பஸ்ஸின் உள்ளே பெரிய கம்பியை பிடித்தபடி ஒரு பிச்சைக்காரன், 35வயதிருக்கும். கிழிந்த கறுப்பு கலர் பாதி போர்வையைச் சுற்றியிருந்தான். முழங்கை முதல் கை முழுதும் வெள்ளையாய் திட்டுத் திட்டாய். அவன் மேல் வியர்வையுடன் வாடை வந்தது.

"யோவ், தள்ளி நில்லு" அதட்டினான் மணி.

"வேறு பஸ்ஸா இல்லை? பீக் டயத்துல அடுத்தவனை இடிச்சிக்கிட்டு…" ரவியும் திட்டினான்.

"கண்டக்டர் இந்தாளை இறக்கிவிடு" சிவா கத்தினான்.

"முடியாது. டிக்கெட் எடுத்திருக்கான். நீ வேணா இறங்கிக்க" என்றார் கண்டக்டர்.

"ங்களையா இறங்கச் சொல்றே? நாங்க சூரிய ஸ்டார் குணா ரசிகர்கள். நினைச்சா இந்த பஸ்ஸை உடைப்போம். பாக்கறியா?"

"ஏன் தம்பிஉள்ளே போக ஆசையா?"

"என்ன சொல்றே? தியேட்டர் வந்திடுச்சு. பஸ்ஸை நிறுத்து. எல்லாரும் வாங்க. நம்ம சூரிய ஸ்டார் குணா ரசிகர்களை கேவலமா பேசிட்டான். பஸ்ஸை உடைச்சு கொளுத்துங்கடா" கத்தினான் சிவா.

திடீரென மணி, சிவா, ரவி மூன்று பேரும் பஸ்ஸிலிருந்து தூக்கியெறியப்பட்டு, அடி தாங்காமல் சாலையில் துடித்தனர்.

அடித்தவன் பஸ்ஸில் வந்த பிச்சைக்காரன்.

மேக்கப்பை கலைத்தான் பிச்சைக்காரன். "அட நம்ம சூரிய ஸ்டார் குணா!"

"என்ன ஸார்நீங்க மாறு வேஷத்தில்?" மலைத்தனர் அனைவரும்.

"ஷூட்டிங் தம்பி." பஸ்ஸில் கடைசி சீட்டில் கேமரா இருந்தது. ரகசியமா அடுத்த பட ஷூட்டிங். "ஏன்டா பஸ்ஸை உடைப்பீங்களா? என் ரசிகர்னு வேற சொல்லிக்கிட்டு! எங்கே பஸ்ஸை உடைங்க பாக்கலாம்!" சூரிய ஸ்டார் குணா கர்ஜிக்க, ரசிகர்கள் திகைத்தனர்.

"படம் போட்டாச்சு! டைட்டில் சண்டை சூப்பராயிருக்கும்" என்று ரசிகர்கள் உள்ளே ஓடி விசிலடிக்க…

"ங்கே நான் நிஜமா சண்டை போடறேன். ஓசியில் பாக்கலாம். ஆனா, பொய் சண்டையை நிழலா பாக்க, அதுவும் ஏகப்பட்ட காசு கொடுத்து பாக்க ஓடுறானுக. இதுதான் சினிமா பவர்!" என்று விரக்தியாய் சிரித்தார் சூரிய ஸ்டார் குணா.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com