நீட் தேர்வு மாணவர்களின் தரத்தை உறுதி செய்கிறதா?

நீட் தேர்வு மாணவர்களின் தரத்தை உறுதி செய்கிறதா?
Published on
சர்ச்சை
ஹர்ஷா

'நீட் தேர்வு… தகுதியான மாணவர்களை, திறமையான மருத்து வர்களை உருவாக்கும். அதை நீக்கவேன்டும் என்று சொல்லுபவர்கள் குறுகிய நோக்கில் அரசியல் செய்கிறார்கள்' என்கிறார்கள் நீட் தேர்வை ஆதரிப்பவர்கள்.

'நீட் தேர்வு ஊரகப் பகுதி மாணவர்களைப் பாதிக்கும். மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களை ஒதுக்கிவைக்கும், முதல் தலை முறை பட்டதாரிகளுக்கு இடம் கிடைக்காது' என்ற வாதத்தை வைக்கிறார்கள் நீட் எதிர்ப்பாளர்கள்.

தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய தோடு அதைச் சட்டமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதற்காகநீதிபதி ஏ.கேராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து அறிக்கை கேட்டிருந்தது.

ஏகே ராஜன் கமிட்டியின் அறிக்கை இப்போது வெளிவந்திருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள் :

தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதி செய்யவில்லை. மாறாக, குறைவான திறனுள்ள மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுவதையே உறுதி செய்கிறது. மாறாக, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்தும்போது தரமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுகிறார்கள்.

நீட் தேர்வானது, பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித் துவத்தை மருத்துவக் கல்வியில் குலைக்கிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்குச் சாதகமாக இருப்பதோடு, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது. தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், 2.5 லட்ச ரூபாய் வருமானத்திற்குக் கீழே உள்ள வர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினர், பழங்குடி யினர் ஆகியோர் இந்தத் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கமிட்டியின் ஆய்வறிக்கையில் பல தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக் கின்றன

அவற்றின் முக்கியமானவை…

* 2015-16 முதல் 2019-20ல், அதாவது நீட்டுக்கு முன் நீட்டுக்குப் பின்னான கல்லூரி அனுமதி விகிதம் குறிப்பிடத் தகுந்த அளவில் மாறி இருக்கிறது.

* தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு சேரும் விகிதம் 16.9%ல் இருந்து 1.7% ஆகக் குறைந்திருக்கிறது.

* மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் சேரும் விகிதம் 99.4%ல் இருந்து 65.7% ஆகக் குறைந்திருக்கிறது.

* ஊரகப் பகுதி மாணவர்கள் மருத்துவப் படிப்பு சேரும் விகிதம் 62.8%ல் இருந்து 49.8% ஆகக் குறைந்திருக்கிறது.

* முதல் தலைமுறை மருத்துவப் பட்டதாரிகள் விகிதம் 29.5%ல் இருந்து 17.2% ஆகக் குறைந்திருக்கிறது.

இவற்றின் விளைவு மருத்துவமனைகளிலும் பார்க்க முடிகிறது. ஊரகப் பகுதிகளில் மருத்துவர்களின் இடம் காலியாகப் போய்க்கொண்டு இருக்கிறது. தமிழகம் போன்ற மருத்துவக் கட்டமைப்புகளில் முன்னேறிய மாநிலங்களில் இந்தக் காலியிட வித்தியாசம் இப்போதைக்கு சிறிதாக இருக்கிறது. ஆனால் இதர மாநிலங்களில் இந்த விகிதம் மிகப் பெரிதாக இருக்கிறது.

இந்தத் தரவுகள் நீட் சமூகநீதிக்கு மட்டும் எதிரானதல்ல. சுகாதார வளர்ச்சிக்கும் எதிரானது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

நீட்டுக்கு எதிராகத் தமிழ்நாடு முன்னெடுக்கும் போர் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நாளை உதவப் போகிறது. நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து போராட இந்தக் கமிட்டியின் அறிக்கை உதவும் என்றும் நம்பப்படுகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com