நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு: தமிழக அரசு அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்!

நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு: தமிழக அரசு அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்!

Published on

தமிழக விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற தமிழக அரசின் புதிய உத்தரவை எதிர்த்து இன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, விவசாயிகள் கழுத்தில் நெல் மூட்டைகளை அணிந்தும், தரையில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இப்போராட்டம் குறித்து விவசாயிகள் கூறீயதாவது:

குறுவை அறுவடை தொடங்கி 10 நாட்களாக ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.இவற்றை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை விவசாயிகளுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும். எனவே அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

-இவ்வாறு அந்த விவசாயிகள் கூறினர்.

logo
Kalki Online
kalkionline.com