online@kalkiweekly.com

பச்சை பூண்டு அதில் விஷயம் உண்டு!

கோவிந்தராஜன்,சென்னை

இதயப் பிரச்னைகள், ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பைபாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த ட்ரெட்மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க, உடல் உறிஞ்சத் தகுதியில்லாதக் கழிவாகத் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற, ‘நிறைமாத கர்பிணி’போன்ற தோற்றத்தைத் தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க, பச்சை பூண்டு மிக மிகச் சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத் தன்மையின் வீரியம் தாங்க முடியாமல், ‘சமைத்து சாப்பிடுதல்’என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிக் கொண்டு,முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம், ஒப்பற்ற மருத்துவகுணம் உடையது! சமைத்தால், அதன் இயல்புத்தன்மை வெகுவாக பாதிக்கப்படும்! சமைத்துக் கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாக வும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை :

பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் எட்டிலிருந்து பன்னிரெண்டு மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் ஐந்து முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும்வரை தேன் ஊற்றி, குறைந்தது ஐம்பது நாட்கள் ஊறவைத்த பின், காலை, மாலை அரை ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து, ரசித்து சாப்பிட, ஆரோக்கியத்தை அருகிலேயே வைத்துக் கொள்ளலாம்! சாப்பிட அவ்வளவு ருசியாகவும், அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாகவும் விளங்கும்!

ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்குத் தொடர்ந்து இதை சாப்பிட்டு வர, ‘யமதர்மன்’ நமது பெயரை, உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, நூறாவது வயதிற்குப் பின்வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

மழலை சொன்ன பாடம்!

0
சிறுகதை சுமதி ராணி ஓவியம் : தமிழ் சூரியன், அதிகாலை ஆரஞ்சு வண்ண சேலையை வானம் முழுவதும் வாரி இறைக்க, சிக்னல் கிடைத்துவிட்ட சுறுசுறுப்பில் பறவைகள் சங்கீத மொழியில் விடியலைக் கொண்டாடின. இவற்றால் உறக்கம் கலைந்த சங்கரன்,...

யாகாவாராயினும் நாகாக்க….

0
கட்டுரை: ஜி.எஸ்.எஸ் செபாஸ்டியன் மைக்கேல் என்பவரின் சுவை அரும்புகளை பத்து லட்சம் டாலர் தொகைக்கு இன்ஷ்யூர் செய்திருக்கிறது அவரைப் பணிக்கு அமர்த்தி இருக்கும், ‘டெட்லி’என்ற பிரபல பிரிட்டிஷ் தேயிலை தயாரிப்பு நிறுவனம். எதற்காக அவ்வளவு...

நலந்தரும் நாஞ்சில் நாட்டு உணவு!

0
-ம.லெஷ்மி நீலகண்டன்,ஈத்தாமொழி பல நீண்ட நெடிய வரலாறு படைத்தது நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அதுகுறித்து எனக்குத் தெரிந்த, பழக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே விவரிக்க முயல்கிறேன். காப்பி, தேனீர் : எனது அறிவுக்கு...

யுபிமிஸ்ம்

0
-லதானந்த் ஆங்கிலத்தில் ‘யுபிமிஸ்ம்’(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த...

இங்கிதம்!

0
லதானந்த் ஓவியம் : தமிழ் கோவையில் ஒரு கவியரங்கம் -‘வனத்திலிருந்து வருகிறேன்’அப்படிங்கிற தலைப்பில், ‘உலக வன நாளை’ ஒட்டி நடந்துச்சு. இடம் : அவினாசி லிங்கம் ஹோம் சயின்ஸ் யூனிவர்சிடி. பல கவிஞர்கள் இதில் கலந்துக்...
spot_img

To Advertise Contact :