online@kalkiweekly.com

spot_img

பின்னோக்கி ஓடி, முன்னேறிய வீராங்கனை!

நான் சிறுமியாக இருந்தபோது என் அப்பா மராத்தான் ஓட்டத்திற்குப் பயிற்சி எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பயிற்சியின் கடைசிச் சுற்று ஓட்டத்தின்போது என்னையும் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தன்னுடன் ஓடச் செய்வார்என்று நினைவு கூறும் ஜஸ்டின் காலோவே, நியூயார்க் நகரின் நியூஜெர்சி டீநெக் நகரில் வளர்ந்தவர். அவர் தந்தை ஜேம்ஸ் ஒரு கட்டடப் பொறியாளர். காலோவேவுக்கு ஆறு வயது இருக்கும்போது ஜேம்ஸ் பார்க்கின்சன் நோயால் தாக்கப்பட்டார். ஆயினும், அடுத்த சில ஆண்டுகள் அவர் தொடர்ந்து ஓடினார்.
நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின் ஒரு மராத்தான் கூட ஓடினார். ஆனால், அதற்குப் பிறகு பார்க்கின்சன் நோய் அவரை ஓட விடவில்லை. காலோவேவுக்கு பத்து வயது இருக்கும் போது ஜேம்ஸ் பணியிலிருந்து விலக வேண்டி வந்தது. அப்போதுதான் அந்த நோய் குறித்து ஓரளவு புரிந்து கொண்டார் காலோவா. தாய் வெர்ஜீனியா ஒரு கம்பெனியில் பணிபுரியத் தொடங்கினார்.

எங்கள் குடும்பத்தின் மொத்த வடிவமும் மாறத் தொடங்கிய காலம் அது. என் தந்தை படுக்கையில் இருந்ததால், நான் அவரோடு அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. அரசியல், ஓட்டப்பந்தயம் என்று எல்லாமே பேசினோம். அப்பா பந்தயங்களில் ஓடுவதை நிறுத்திய பின், நான் ஓடத் தொடங்கினேன். எனக்கு இயல்பாகவே ஓட வந்தது. பள்ளிப் பந்தயங்களில் ஓடினேன். 1988ல் இன்ஜினியரிங் படிப்பதற்காக ருட்கட்ஸ் நகரம் சென்றேன். அங்கு போட்டிகளில் பங்கேற்றேன். ஆனால், அப்போதெல்லாம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் ரன்னிங் ரேஸ் ஓடியதில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்த பின் நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினேன். என் தந்தை மராத்தானில் ஓடியதைப் பார்த்திருந்த எனக்கும் அதுபோல் ஓட வேண்டும் என்ற கனவு இருந்தது. நியூயார்க் நகரத்தில் 2002ல் முதல் மராத்தான் ஓடினேன். மீண்டும் 2004ல் பிலடெல்பியா நகரப் பந்தயங்களில் ஓடினேன். 2009ல் நியூயார்க் நகர ஓட்டத்தில் 3 மணி 16 நிமிடங்களாக என் ரெக்கார்டு இருந்தது.

எனக்கு 30 வயது இருக்கையில் என் தந்தை ஜேம்ஸ் காலமானார். அந்த வாரமே நான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றேன். நான் தொடர்ந்து ஓடுவதே, என் தந்தையுடன் நான் இணைந்திருப்பதற்கான வழி என்றுணர்ந்தேன். அடுத்த வருடமே மராத்தானில் ஓடினேன். ஆனால், அந்த ரேசின்போது ஏதோ பிரச்னை இருப்பதை உணர்ந்தேன்என்று முதன் முதல் தன் ஓட்டப்பந்தயத்தில் நேர்ந்த தடை பற்றி விவரிக்கிறார் காலோவே.

பதினெட்டாவது மைலைச் சுற்றி வரும்போது, அவர் ஓட்டத்தில் இருந்து விலக வேண்டி வந்தது. தனக்கான நாள் அதுவல்ல என்று மட்டுமே அப்போது நினைத்தார். அப்போதைய தன் உணர்வுகளையும், தான் மீண்டு வந்த சிரமங்களையும் அவர் விவரிக்கிறார். இங்கு அவருடைய உறுதியையும் விளையாட்டில் இருந்த தீவிர விருப்பத்தையும் நாம் காண முடிகிறது. இங்குதான் காலோவே பிறருக்கு முன்னோடியாக நிற்கிறார்.

2011ஆம் ஆண்டு அவரது உடல் பலவீனமாகவும் கடினமாகவும் ஆனதை உணர்ந்து 18 மைல் சுற்றிய பின் பாஸ்டன் மராத்தானில் இருந்து வெளியேறினார். சில வாரங்களுக்குப் பிறகு அவர் கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டது. இந்த நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதற்குப் பிறகு அவர் ஓடுவதில் சிரமப்பட ஆரம்பித்தார்.

என் இடது காலைத் தூக்கிய பின், அது கீழே வராமல் நீண்ட நேரம் காற்றிலேயே நின்றது. மிகப் பிரயத்தனம் செய்து பாதத்தைக் கீழே வைத்தபோது, இடது பக்கம் வளைந்தது. அது ஏதாவது அடிபட்டதன் விளைவா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், என்னால் தொடர்ந்து ஓட முடியவில்லை என்பது மட்டும் புரிந்தது. இடதுகால் மரக்கட்டை போல் ஆனது. அதை இழுத்துக் கொண்டு நடந்தேன். எனக்கு அழுகையாக வந்தது. மூளையிலிருந்து இடது காலுக்கு சிக்னல் வரவில்லை என்று தோன்றியது. எலும்பியல் நிபுணர்களையும் நரம்பியல் நிபுணர்களையும் சென்று பார்த்தேன். அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் கூறுவதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லைஎன்று அந்தக் கடினமான நாட்களை விவரிக்கிறார்.

பல மாதங்கள், பல மருத்துவர்களைப் பார்த்தார். அவரது தந்தைக்கு பார்க்கின்சன் நோய் இருப்பதை அறிந்த டாக்டர்கள், ‘ரன்னர்ஸ் டிஸ்டோனியா’ என்ற நோய் இருப்பதைக் கண்டறிந்தனர். இது ஒரு குறிப்பிட்ட வகை இயக்கக் கோளாறு. இது நீண்ட தூர ஓட்டங்களின்போது கட்டுப்படுத்த முடியாத தசைச் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. பார்க்கின்சனை போலவே, டிஸ்டோனியாவுக்கும் சிகிச்சை இல்லை. அறிகுறிகளைக் கொண்டு ஓரளவு மருந்துகள் உதவும் என்பது தெரிய வந்தது. ஆனால், காலோவே அவற்றை எடுக்க விரும்பவில்லை.

ஒன்றரை ஆண்டுகள் டாக்டர்களின் பின்னால் அலைந்த பிறகு, மருத்துவர்கள் கண்டறிந்த ‘ரன்னர்ஸ் டிஸ்டோனியா’ என்னும் இன்வாலென்டரி இயக்கம் பற்றி கூகுளில் தேடிப் பார்த்தேன். இந்த நோய் ஏற்பட்டால் கால்கள் நாம் சொன்ன பேச்சைக் கேட்காது என்று அறிந்தேன். 2013ல் நியூஜெர்சியை விட்டுச் செல்ல முடிவு செய்தேன். அங்கிருக்கும் நிறைய நண்பர்கள் ரன்னர்கள். என்னால் அங்கே இருக்க இயலாது என்று தோன்ற, கலிபோர்னியா சென்றேன். பைக் ரைடிங் அல்லது நீச்சல் விளையாட்டில் ஈடுபடலாம் என்று நினைத்தேன்என்கிறார் காலோவே.

ஓட்டப் பந்தயத்திலிருந்து விடைபெற வேண்டி வந்ததால் கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையில், ‘சர்ப்’ செய்து நீந்தலாம் என்று நினைத்தார். ஆனால், அது தனக்கு சாத்தியமற்றது என்பதை உணர்ந்தார். தனது உடல் சிகிச்சை அமர்வுகளுக்கு மீண்டும் செல்லத் தொடங்கினார். பின்னோக்கி ஓடுவது தன்னால் எவ்வளவு இயல்பாக முடிகிறது என்பதை விரைவில் உணர்ந்தார். அதற்குக் காரணமாக அமைந்தது ஒரு ட்ரெட்மில் பயிற்சி. அங்கு கிடைத்த ஒரு கண்டுபிடிப்பு அவர் வாழ்க்கையை மாற்றியது.

அது எவ்வாறு என்பதைக் காண்போம்

நியூஜெர்சியில் ஒரு உடல் சிகிச்சை நிபுணரைக் காண நேர்ந்தது. அவர் ஒரு டிரெட்மில்லில் முன்னோக்கியும் பக்கவாட்டாகவும் பின்னோக்கியும் ஓடச் சொன்னார். முன்னோக்கி ஓடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால், பக்கவாட்டாகவும் பின்னோக்கியும் ஓடுவது இயற்கையாக இருப்பதை உணர்ந்தார்.

திடீரென்று அவர் மீண்டும் காலடி எடுத்து வைத்து மணலில் பின்னோக்கி ஓடத் தொடங்கினார். விரைவாக சாலையிலும் ஓடத் தொடங்கினர். பின்னர் அவருக்கு அரை மராத்தான் ஓட வேண்டும் என்ற யோசனை வந்தது.

பின்னோக்கி ஓடும்போது அவரது கணுக்கால்கள் முன்னோக்கி ஓடுவதை விட அதிகமாக வலித்தன. எனவே, பாரம்பரிய ஓட்டப்பந்தய வீரர்களைப் போல காலோவா பயிற்சியின் போது அதிகம் ஓடவில்லை. அவருடைய வாராந்திர உடற்பயிற்சிகளை மிகவும் குறைவாகவே வைத்துக் கொண்டார்.

ஒரு ஞாயிறன்று நியூயார்க் நகர மராத்தானில் காலோவே எல்லைக் கோட்டைக் கடந்தார். 26.2 மைல் முழுப் பாதையையும் பின்னோக்கி ஓடி வென்றார்.

இது குறித்து வியப்புடன் விவரிக்கையில் காலோவே கூறுகிறார்

சான்டெய்கோவுக்கு இடம் பெயர்ந்த பின் 2013ல் பின்னோக்கி ஓடும் பந்தயங்களில் பங்கு கொள்ள முயன்றேன். பலமுறை கீழே விழுந்தேன். ஆனால், விடாமல் தொடர்ந்து நீண்ட பின்னோக்கிய ஓட்டங்களில் பங்கு பெற்றேன். ஐந்து முதல் எட்டு மைல் தொலைவு வரை ஓடினேன். 2014ம் ஆண்டில் முதல் அரை மராத்தானை ஓடினேன். நான் விழுந்து அடிபட்டு கொள்வேனோ என்று அஞ்சி, எனது சகோதரர் கூடவே வந்தார். 2 மணி 46 நிமிடங்களில் அதனை முடித்தேன். இது முன்னோக்கி ஓடுவதை விட, 1 மணி 15 நிமிடம் மெதுவானது. ஆனால், இது மிக வேகமான பின்னோக்கிய ஓட்டமாக எனக்கு கின்னஸ் ரெக்கார்டு வாங்கிக் கொடுத்ததுஎன்று வியப்பும் மகிழ்ச்சியுமாக விவரிக்கிறார்.

தடையையே முன்னேற்றமாக மாற்றிக்காட்டிய இப்பெண், 2017ல் நியூயார்க் மராத்தானில் நுழைந்தார். பார்க்கின்சன் நோய் குறித்த ஆய்வுக்காக பணம் திரட்டத் தொடங்கினார். நியூயார்க்கில் முன்னோக்கி ஓடும் மராத்தானில் மூன்று மணி பதினாறு நிமிடங்களில் முடித்த ஓட்டத்தை பின்னோக்கி ஓடுகையில் 6 மணி 6 நிமிடங்களில் முடித்தார்.

ஜஸ்டின் காலோவா தற்போது ஒரு இன்ஜினியரிங் கம்பெனியில் பிராஜெக்ட் மேனேஜராகப் பணியில் உள்ளார். அவருக்கு முன்னோக்கி நடப்பதில் தற்போது எந்த சிரமமும் இல்லை. ஆனால், ஓட முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், அவர் பின்னோக்கி ஓடி சாதனை மேல் சாதனை புரிவதில் திடமாக உள்ளார்.

விடாமுயற்சியின் அடையாளமாக விளங்கும் இவரைப் பாராட்டி வாழ்த்துவோம்!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

காலம் கெட்டுப்போச்சு… சிக்கலில் ஷாருக்கான் வாரிசு!

0
- ஜி.எஸ்.எஸ். தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று...

ஷேமிங்! ஷேமிங்!

0
விழிப்புணர்வு விஷயம் - ஆர். மீனலதா, மும்பை ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her! ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them! விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை...

விடுபடுவோம்!

0
ஒரு கப் Zen - 13 எழுத்து : லேzy இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மனிதனுக்கு survival ஒரு பொருட்டே அல்ல. உணவுக்கும் நீருக்கும் பஞ்சம் இருந்த காலமெல்லாம் மலையேறியாகி விட்டது. புயலோ, பெருமழையோ, வெள்ளமோ, எதுவாயினும்...

மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
மிதக்கத்தான் ஆசை! இதுவரை மிதக்கவில்லை. அதனால், கப்பல் பயணம் செய்யத்தான் ஆசை. விமானத்தில் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது. வெளியே எதையும் பார்க்க முடியாது. கப்பலின் மேல் தளத்தில் நின்று, நடந்து எல்லாவற்றையும் பார்த்து...

நிழலும் நிஜமும்!

0
கதை : மாதவி ஓவியம் : பிரபுராம் ஏற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர். “ஏய்யா தம்பிகளா... ஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க.” கண்டக்டரின்...
spot_img

To Advertise Contact :