பிரதமருக்கு பரிசாக வழங்கிய ஈட்டி: 10 கோடி ரூபாய்க்கு ஏலம்!

பிரதமருக்கு பரிசாக வழங்கிய ஈட்டி: 10 கோடி ரூபாய்க்கு ஏலம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போடியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்றார். அந்த போட்டியில் அவர் பயன்படுத்திய ஈட்டியை, இந்தியப் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் நீரஜ் சோப்ரா.

அந்த ஈட்டி 10 கோடிக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுத் தாயகம் திரும்பிய இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, ஒலிம்பிக் வீரர்கள் பிரதமருக்கு தங்கள் விளையாட்டுக் கருவிகளை பரிசாக வழங்கினார்கள். அதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது ஈட்டியை பிரதமருக்குப் பரிசாக வழங்கினார்.

அப்படி பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் ஆகியவற்றை மின்னணு ஏலத்தில் விடும் பணியை கலாச்சாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டது. பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி, (   )  நேற்று முந்தினம் இப்பணீ தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக பிரதமர் பெற்ற பரிசுப் பொருட்கள் அனைத்தும் இந்த ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஏலத்தில் டோக்கியா ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், அவருக்கு வழங்கிய நினைவுப் பரிசுகளும் இடம் பெற்றிருந்தன.

இந்த ஏலத்தின் முதல் நாளிலேயே நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.10 கோடிக்கு ஏலம் போனது அனைவரையும் வியக்க வைத்தது. இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் தொகை, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com