
அன்புள்ள வாசகர்களே!
இந்த வாரம் 'கல்கி' வராததால் உலகமே இருண்டுவிட்டது போல் உணர்ந்தேன். ஆக்ஸிஜனை சுவாசிப்பது போல் 'கல்கி'யையும் சுவாசிப்பதால் 'கல்கி'
படிக்க முடியாமல் அவதிப்பட்டேன்.
இரண்டு கண்களிலும் 'கல்கி' நிறைந்திருப்பது போல, இதயத்தின் இரு
அறைகளும் பாரம்பரியமாகக் கண்ணியான 'கல்கிக்காக' எந்த அர்ப்பணிப்புக்காகவும், விசுவாசமாகவும் உள்ளது.
ஏன் இந்த நிமிடம் வரை இந்த வார கல்கி இணையதள பக்கத்தில் வெளி யாகவில்லை. காலையே வெளியாகும் என போனவாரம் அறிவிப்பு வேறு
வெளியானதே.வாசிக்கும் ஆவலுடன்.
இது போன்று பல மின் அஞ்சல்கள், வாட்ஸாப்கள், அலைபேசி அழைப்புகள். கடந்த இதழிலேயே அடுத்த இதழ் 10/9/21 அன்றுதான் இணைய தளத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். வாசகர்களின் தெளிவிற்காக இந்த விளக்கக் குறிப்பு
உங்கள் அபிமான கல்கி வார இதழ் இணையதளத்தில் இதுவரை அச்சு இதழ்களைப் போல முன் தேதியிட்டு, இதழின் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே வெளியாகிக்கொண்டிருந்தது. 10/09/21 இதழ் முதல் இதழ் தேதியிடப்பட்ட நாளிலேயே இணைய தளத்தில் இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வடிவில் வாரந்தோறும் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி
அன்புடன்
(ஆ-ர்)