0,00 INR

No products in the cart.

புத்தகப் பதிப்பில் தடம் பதிக்கும் இளம்புயல்!

நேர்காணல் : சேலம் சுபா

ந்தப் பெண்மணி இடது கை பழக்கம் உள்ளவர். துரதிர்ஷ்டவசமாக வலது கையினால் வற்புறுத்தி எழுத வைத்த காரணத்தினால் எழு ஆசையிருந்தும் முடியாமல் வருந்தியவர். இவரிடம் இருந்த எழுத்துத் திறமையும் எவராலும் அறியப்படாமல் புதைந்திருந்தது. இவரைத் தேடி வந்து இவரின் படைப்பை புத்தகமாக்கி வெளியிட்டது மகிழ்ச்சி என்றாலும், அந்தப் புத்தகத்தின் அட்டைப்படமாக இடது கையினால் அவர் எழுதும் ஓவியத்தை வடிவமைத்துத் தந்து, இவரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கித் தந்துள்ளார் ஒரு இளம் பெண்.

நாம் எழுதியதையெல்லாம் யார் படிக்கப்போறாங்க?’ என்ற ஏக்கத்துடன் இருந்த அறுபது வயதைக் கடந்த ஜனனி கீர்த்திவாசனின், யானைகளின் கதை’ இப்போது புத்தகமாக பலரின் பாராட்டுகளுடன்அட்டைப்படம் அவர் என்றோ வரைந்த யானை படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான அந்த இளம் பெண்ணுக்கு மனதார நன்றிகளை சமர்ப்பிக்கிறார் ஜனனி.

விவசாயம் தொழில் என்றாலும், எழுத்தில் தீரா ஆர்வத்துடன் சூரியலூர் ரவி எழுதிய அறிவியல் சார் புனைவு கதையைப் புத்தகமாக வெளியிட்டதுஸ்ரீரங்கத்தை சேர்ந்த எழுபது வயது முதியப் பெண்மணி வைதேகியின் கதைகளைப் புத்தகமாக்கி அவரின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கியதுஒன்பது வயது சிறுமியின் படைப்புகளைப் புத்தகமாக்கி இளம் வயது எழுத்தாளராக்கி உற்சாகப்படுத்தியதுஇப்படி எண்ணற்ற பேருக்கு வழிகாட்டி அவர்களின் புத்தகக் கனவை நிறைவேற்றி, அவர்களை சாதனையாளர்களாக உயர்த்தி வருகிறார் லட்சுமிப்பிரியா எனும் இளம்பெண். அடுப்பங்கரையிலிருக்கும் இல்லத்தரசிகள் முதல், வழிகாட்ட யாருமின்றி பொருளாதாரமுமின்றி தவித்த எழுத்தாளர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இயங்கி வருகிறது பேக்கிடெர்ம் டேல்ஸ் (PachyDerm Tales Literary Consultancy).

கொரோனாவின் முதல் அலையில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 130 புத்தகங்களை மின் நூலாகவும் அச்சு நூலாகவும் பிரசுரித்து குறுகிய காலத்திலேயே பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதன் நிறுவனரான லட்சுமிப்பிரியா சிறிய வயதிலேயே பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற அயல் நாடுகளில் இலக்கிய உரை ஆற்றிய பெருமைக்குரியவர். மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணரும் பேராசிரியராகவும் உள்ளார்.

படைப்பாளர்களின் கனவுகளை நிறைவேற்றி ஆனந்தக் கண்ணீரை வரவைக்கும் இந்த நிறுவனத்தை துவங்கியதின் நோக்கம் என்ன? வேலூரில் வசிக்கும் லட்சுமிப்பிரியாவை சந்தித்தோம். உடன் அவரது தாய் உமா அபர்ணாவும் இருந்தார்.

லட்சுமிப்பிரியா

ல்லோருக்கும் கூறக்கூடிய வகையில் அனைவருக்குள்ளும் கதைகள் உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணம் முழுக்க முழுக்க அம்மா உமா அபர்ணாதான். சின்ன வயதிலிருந்தே புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தையும் என்னையும் இணைத்தவர். எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லை. ஆனால், ஆயிரம் நண்பர்களுக்கு சமமான புத்தகங்களை வாசித்துள்ளேன்.

சிறு வயதில் புத்தகங்கள் மீதான என் நேசம் என்னையும் எழுத்தாளராக்கியது. என் எழுத்துக்களை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதில் பல அனுபவங்களைப் பெற்றேன். வழிகாட்டி இன்றி, ஒரு புத்தகம் வெளியிடுவதென்பது பெரும் பிரயத்தனம் என்பது புரிந்தது. படித்த நானே இப்படித் தடுமாறும்போது, வீட்டை விட்டு வெளியே வராத, ஆனால் எழுதுவதில் திறமைக் கொண்ட பெண்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன்.

ஒரு புத்தக வெளியீட்டில் உள்ள பல சிரமங்களை எப்படிக் கடந்து வருவது என சிந்தித்ததின் விளைவே, பேக்கிடெர்ம்ஸ் டேல்ஸ் (PachyDermTales literary consultancy) துவங்கியதின் நோக்கம்.

எங்கள் மூலம் வெளிவரும் புத்தகங்களின் முழு உரிமையும் அதை எழுதியவர்களுக்கே. வடிவமைப்பில் இருந்து இணையதளங்களில் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு உதவுவது வரை துணை நிற்போம். இதற்கான செலவு நீங்கள் விரும்பித் தருவதே என்று அழகாக சொல்கிறார் லட்சுமிப்பிரியா.

ன் மகளுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்களை அறிமுகப்படுத்தினேன். வாசிப்புப் பழக்கத்தை கற்றுத்தந்தேன். தமிழின் மீது நாங்கள் கொண்ட பற்று தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டு செல்லும் கருவியாக மாற்றியுள்ளது. சமூகக் கட்டுப்பாடுகளில் சிறைபட்டு வெளியே வராமல் முடங்கிப்போகும் பெண்களின் திறமைகள் இங்கு ஏராளம். அவற்றை மீறி ஒரு பெண் கல்வி அறிவால் சாதிக்கும்போதுதான் சொந்த உறவுகளாலேயே மதிக்கப்படுகிறாள். இப்படிப்பட்ட பெண்களின் எழுத்தாற்றலை வெளிப்படுத்த உதவி, அவர்களை சமூகத்தின் முன் மதிப்பு மிக்கவர்களாக மாற்ற எங்கள் நிறுவனம் காத்திருக்கிறது” என்கிறார் உமா.

இந்நிறுவனத்தின் அத்துனை பணிகளிலும் பொறுப்பெடுக்கிறார்கள் சாந்தினிதேவி, பூர்ணிமாஸ்ரீ, ப்ரீஷா, ஹர்ஷிதா, ஸ்வேதா, ஜெருஷா, காயத்ரி ஆகிய ஏழு கல்லூரிப் பெண்கள்.பொறுப்புகளை ஒப்படைத்து, முடிவுகளை எடுக்கும் உரிமையையும் தந்து எங்கள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு தரும் லட்சுமிப்பிரியாவிற்கும் அம்மா உமாவிற்கும் நன்றிகள்” என்கிறார்கள் அந்த கல்லூரிப் பெண்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு நம் பண்பாடு, கலாச்சாரங்களைச் சொல்லவும், பன்னாட்டு கலாச்சாரங்களை அறிமுகம் செய்யவும் பாலமாக இருப்பவர்கள் எழுத்தாளர்களே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள லட்சுமிப்பிரியா, “மொழிபெயர்ப்பிலும் சர்வதேச அளவில் இணையதளத்தில் தரும் பயிற்சிகளிலும் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை இந்த சேவைக்காக ஒதுக்குவதில் பெரும் மகிழ்ச்சி” என்கிறார்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...