புளியம்பிஞ்சு துவையல்

புளியம்பிஞ்சு துவையல்

Published on

தேவையானவை

புளியம் பிஞ்சு– 2 கைப்பிடி,

புளியம்பூ– 2 கைப்பிடி,

புளியங் கொழுந்து– 2 கைப்பிடி,

மிளகாய் வற்றல்4,

கருப்பு உளுந்து3 டேபிள்ஸ்பூன்.

,உப்பு தேவையான அளவு.

எண்ணெய்2 டீஸ்பூன்,

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் புளியம்பூ, புளியம்பிஞ்சு, புளியங் கொழுந்து சேர்த்து வதக்கவும். கறுப்பு உளுந்து, மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும் சற்று ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். அம்மியில் கெட்டியாக அரைத்தால் சுவை அதிகரிக்கும். மிக்ஸியிலும் அரைக்கலாம். இந்த புளியம்பிஞ்சு துவையலோடு தயிர்சாதம் சாப்பிட, ஆஹா அமிர்தம் என்பர்.

மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

logo
Kalki Online
kalkionline.com