online@kalkiweekly.com

பெருமிதம் கொள்வோம்

 

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் முழு உலகமே இறங்கியிருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்திலிருக்கும் நமக்கு இது மிகப்பெரிய சவால்.

ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தடுப்பூசிகளைப் போடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சிறப்பு முகாம்களின் வழியாக லட்சக்கணக்கான பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் எதிர்பார்த்ததைவிட பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் திட்டம் பல மாநிலங்களிலும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. பொது சுகாதாரத் துறையில் எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்கும் கேரளத்தில், கொரோனா இலவசத் தடுப்பூசிக்கு இணையம் வழியாகப் பதிவுசெய்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களைத் தேடி தடுப்பூசி இயக்கம் வருவது மக்கள் நல்வாழ்வுத் துறையின் திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றி.

செப்டம்பர் மாதத்தில் நடந்த மூன்று சிறப்பு முகாம்களில் மட்டும் மொத்தம் 70.71 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட்ட மூன்று சிறப்பு முகாம்களும் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்பது அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்புகளை அளித்துள்ளன. மருத்துவமனைகளில் மட்டுமின்றி, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என்று பொது இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் திட்டமிடப்படுகின்றன. சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களில் அதிகத் தடுப்பூசிகள் தேவைப்படும் இடங்களுக்கு மற்ற பகுதிகளிலிருந்து உடனடியாக வரவழைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்த வெற்றிக்கு பின்னாளுள்ள சுகாதாரத் துறை ஊழியர்களின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது.

தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்த இடங்களில் அதிகாலையிலிருந்து மாலை வரையிலும் ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்றியதைப் பார்க்க முடிந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டதும் மக்களிடையேயும் மருத்துவத் துறை பணியாளர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செவிலியர்களும் மருத்துவர்களும் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுபவர்கள். அவர்களின் இந்த இறைப் பணியை மனதாரப் பாராட்டுவோம். நன்றி சொல்வோம். நம் சகோதர சகோதரிகளின் செயலில் பெருமிதம் கொள்வோம். அவர்களின் இந்த அர்ப்பணிப்பான சேவைகள் குறித்து நமது இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்வோம்.

அரசின் இந்த முன்னெடுப்பில் ஆர்வத்துடன் மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து செயல்பட அதிக அளவில் தன்னார்வலர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்ள முன்வரவேண்டும்.

ஆண்டு இறுதிக்குள், ‘தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இல்லை’  என்ற பெருமிதமான நிலையை உருவாக்குவோம்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

பத்திரிகை சுதந்திரம் போற்றப்படுகிறது

1
  தலையங்கம்   உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா...

பிரதமரே கருணை காட்டுங்கள்

2
தலையங்கம் ஒன்றிய அரசு, சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. டீசல் விலை  100 ரூபாயை நெருங்கிவிட்டது. பெட்ரோல்,  டீசல் விலையை...

கடைசிப் பக்கம்

1
  தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! -சுஜாதா தேசிகன் கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில்...

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

0
முகநூல் பக்கம் இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்? ”என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்” – என்று...

நாளை வெகுதூரம் (சிறுகதைகள் தொகுப்பு)

0
நூல் அறிமுகம் சரவணன் சுப்ரமணியன் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) திருப்தியான மனநிலைக்கு எடுத்துச் செல்லும் தொகுப்பு 'எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன்' என்ற தொமினிக் விதால்யோவின் கூற்றை வழிமொழியும்...
spot_img

To Advertise Contact :