online@kalkiweekly.com

மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

மிதக்கத்தான் ஆசை!

துவரை மிதக்கவில்லை. அதனால், கப்பல் பயணம் செய்யத்தான் ஆசை. விமானத்தில் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது. வெளியே எதையும் பார்க்க முடியாது. கப்பலின் மேல் தளத்தில் நின்று, நடந்து எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க ஆசை.
ராதிகா ரவீந்திரன்

ழெட்டு தடவை பறந்து பார்த்தாச்சு. ஆக, இனி ஒரு வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் மிதந்து பார்க்கவே ஆசை.
மங்களா கெளரி

ரண்டையும் அனுபவித்துள்ளேன். இரண்டிலுமே சங்கடமும் உண்டு; சந்தோஷமும் உண்டு. ஆனாலும், எனது சாய்ஸ் மிதப்பதுதான். சுற்றிலும் நீலக்கடல்! அலைகளற்ற அமைதியான கடல்! பகலில் சூரிய ஒளியில் மினுக்கும் நீலம்! இரவில் வானோடு போட்டி போடும் நட்சத்திரப்படுதாவின் கீழே அதுவே சொர்க்கம்.
செல்லம் செரீனா

றந்து போக ஆசை இருந்தாலும், பயம். கப்பல் பயமில்லை.
நா.புவனா நாகராஜன்

மிதக்கத்தான் ஆசை. இரண்டு முறை விமானத்தில் சென்றிருக்கின்றேன். கப்பலில் சென்றால் கடலில் வாழும் உயிரினங்களை எல்லாம் அருகில் பார்க்க முடியும். இயற்கையை ரசிக்க முடியும். விமானத்தில் சென்றால் இயற்கையை பார்க்கத்தான் முடியும்; ரசிக்க முடியாது.
என்.ஜெகதாம்பாள்

நிறையவே பறந்தாச்சு. இதில் கஷ்டம் என்னன்னா, அட்டென்ஷனிலேயே ரொம்ப நேரம் உட்கார வேண்டும். உள்ளேயே நடப்போமென எழுந்தால், பதற்றமாக ஓடி வருவார் பணிப்பெண். சின்னூன்டு சலிப்பு வந்தாலும், மேல் தளம் வந்து சில்லென்ற கடற்காற்றை அனுபவிக்க, பறந்தே போகும் சலிப்பு. கப்பலில்தான் களிப்புங்க.
கோமதி சிவாயம்

றந்து பாத்தாச்சு. பகலில் வெண்பஞ்சு மேகங்களையும், இரவில் நட்சத்திரங்கள் மினுக்கும் வானமும் பாத்தாச்சு. இல்லாத இறக்கைகளை உணர்ந்தாச்சு. தண்ணி கொஞ்சம் பயந்தான். நீச்சல் தெரியாது. இல்லாத துடுப்புகளை உணர, இன்னொரு வழியாய் மிதந்து பார்க்கவே ஆசை.
சுபாஷினி ரமணன்

ப்பலில் சென்று கடலின் அழகையும், இயற்கைக் காட்சிகளையும் ரசித்துப் பயணம் செய்ய வேண்டும் என்பதே நீண்ட நாள் ஆசை.
கிருஷ்ணமூர்த்தி லதா

ஹா… ஹா! வானத்துத் தாரகைகளை ரசித்து, மேஜிக் உப்புமாவை ருசித்துஇதெல்லாம் சரிதான். ஆனால், விமானம் பறக்கும் பொழுது ஒரு இனந்தெரியாத பயம் கவ்வும். கப்பல் க்ரூஸ் பயணம் என்பது, தாலாட்டு பாடி தூங்க வைப்பது போன்று இருக்கும். என் சாய்ஸ், க்ரூஸ் பயணமே.
ராதா நரசிம்ஹன்

மிதக்கவே ஆசைப்படுகிறேன். எனக்குப் பரந்த தண்ணீர் என்றாலே பயம். ஆனால், வைரமுத்துவின், ‘தண்ணீர் தேசம்படித்த பின்பு பயம் போய், பற்றுதலே வந்து விட்டது. மேலும், பறந்த அனுபவமும் உண்டு. விமானப் பயணத்தில் பகல் நேரத்தில் கூட இரவில் பயணிப்பது போலவே இருக்கும். அதில் மேகத்தைத் தவிர, ரசிக்க வேறெதுவுமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே ரசிக்க வேண்டும். கப்பல் பயணம் உலாவியபடியே இரவு, பகலை ரசிக்கலாம். என்ஜாய்மென்ட்டோடு பயணிக்க வேண்டுமென்றால், அது கப்பல் பயணம் தான்.
ஜானகி பரந்தாமன்

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் ஆறு, குளங்களில் குளித்து பழக்கம் உண்டு. இப்போது கூட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திருச்சியில் காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்வது உண்டு. ஆகையால், எனக்கு மிதக்கத்தான் ஆசை! கப்பலில் பயணம் செய்வதை நினைத்துப் பார்க்கும்போது, பயமாகத்தான் இருக்கிறது. என்றாலும், வாழ்க்கையில் ஒரு முறையாவது கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இரண்டு மூன்று முறை மும்பை வரையில் விமானத்தில் சென்று இருக்கிறேன். ஒருமுறையாவது ஸ்ரீலங்கா வரை குறைந்த அளவு நேரமாவது கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
லலிதா பாலா

டல் நடுவே கப்பலில் செல்கையில், அலையை ரசித்தபடி குட்டிக் கவிதை கொட்டித் தீர்த்திட ஆசைதான்.
காயு ஆர்.கே.

ராமேஸ்வரம் சென்றபோது சாதாரண படகில் சிறிது தூரம் பயணம் செய்திருக்கிறேன். சாண்டில்யனின், ‘கடல் புறா, யவன ராணிபடித்த பின்பு, கப்பல் பயணம் பற்றி வியந்திருக்கிறேன். ஆனாலும், வள்ளுவரின், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுஎனும் கூற்றை நினைவில் கொண்டு பறவைகளைப் போல, உயர உயர பறக்கவே ஆசைப்படுகிறேன். தவழும் மேகத்தை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறேன். கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களைத் தொட்டுப் பிடிக்கவே ஆசைப்படுகிறேன்.
பிரியா கார்த்திக்

விமானத்தில் பயணித்து விட்டேன். மிதந்து செல்வதில் ஆர்வம். அலைகளை ரசித்து, மணலில் கால் பதித்து ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்து விட்டேன். அவற்றுக்கு நடுவில் அமைதியாக மிதந்து செல்லும் கப்பலில் பயணித்து, மிதந்து மகிழ ஆசை, ஆர்வம் அதிகம்.
பவானி சேது

பறக்கத்தான் ஆசை!

ரண்டிலுமே நான் சென்றதில்லை. ஆனால், விமானத்தில் போக ஆசை உண்டு. தண்ணீரைப் பார்த்தால் எனக்கு பயம். ஆதலால் என்னுடைய கருத்து பறப்பதுதான்.
சாந்தி ஸ்ரீநிவாசன்

விமானத்தில் பறப்பது ஒரு சுகமேரன்வேயில் புறப்பட்டு மேலே எழும்பொழுது, அவ்வளவு பெரிய நகரம் நம் கண்களில் இருந்து சிறியதாக மாறி, மெல்ல மெல்ல மறைவதும், கடலின் அழகை உயரே இருந்து ரசிப்பதும், வெண்பஞ்சு கூட்டமாய் மேகங்கள் நம் அருகே மிதந்து செல்லும்பொழுது உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சியும் என அனைத்தும் விமானப் பயணத்தில் அனுபவிக்கலாம்.
பானு

ப்பல் பயணமா? வேண்டாண்டா சாமி! ஒரே வயத்தைப் பிரட்டல்! ஜுரம்! வலை நாற்றம்! உப்புக் காற்று.
வசந்தா கோவிந்தன்

Of course by plane. Very quick and we can spend rest of our holidays by seeing the places. Instead of wasting time in ship we can go for plane. For our happiness, we can go once bin ship.
– Viji Ramakrishnan

றவுகளை காணச்செல்லும் பயணமென்றால் விமானமே சிறந்தது. குறுகிய கால பயணத்தில் பயண இலக்கை அடைந்துவிடலாம். அதுவே சுற்றுலா பயண வாய்ப்பென்றால் குரூய்ஸ் என்னும் சொகுசுக் கப்பலில் செல்வதே சுகம். அதில் கிடைக்கும் அத்தனை நாட்டு உணவு வகை, பொழுதுபோக்கு அம்சங்கள், ரசிக்க இயற்கைக் காட்சிகள், கடைகள் என அனைத்தும் நாம் வேறு ஒரு உலகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். பறப்பது, மிதப்பது இரண்டுமே அதற்கு உண்டான அருமையான அனுபவங்களைக் கொடுக்கின்றன என்பதே உண்மை.
ஜெயகாந்தி மகாதேவன்

தோ அந்தப் பறவைப் போல பறக்க வேண்டும். சிறு வயது முதலே வானத்து ஊர்திக்கு கீழிருந்தே டாட்டா காட்டிக் கொண்டிருந்து அலுத்து விட்டது. அது பறந்து வரும் சத்தம் கேட்டு மேலே எங்கே, எந்த திசையில் வருகிறது என்று தேடித் தேடி கண்ணில் பட்டதும் டாட்டா காட்டிய 90’s kids ல நானும் ஒருத்தி. உள்ளே ஏறி ஒரு முறையாவது பயணித்து விட வேண்டும்.
தீபா தீபிகா

றக்கதான் ஆசை. விமானம் டேக் ஆப் ஆகும்போது உச்சி முதல் பாதம் வரை பயத்தில் உறைந்து இருக்க, சிறிது நேரத்தில் இருக்க மூடிய கண்களை மெதுவாகத் திறந்து விமானத்தின் ஜன்னல் வழியாக இந்த உலகை ரசித்துப் பார்க்கும்பொழுது, நிஜத்திலே விமானத்தில்தான் பறக்கிறோம் என்பதையும் மறந்து, வானத்தில் பறப்பதை போல ஒரு உணர்வு ஏற்படும். விமானத்தில் பறந்தபடியே கடலின் முழு அழகையும் ரசித்துச் செல்லலாம்.
தாமரைச் செல்வன்

றப்பதும் சுகம்தான். நாம் நின்று பார்த்து ரசித்த மேகக் குவியல்கள் இடையே பறந்து சென்று பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி, வானம் தொட்டுவிடும் தூரம்தான் என மெய்ப்பிக்கும்.
வாணி கணபதி

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

இஞ்சிக்கு மிஞ்சியது ஏதுமில்லை!

2
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி • இஞ்சி ஞாபக சக்தியை அதிகரிக்கும். • நமது உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி இஞ்சிக்கு அதிகம் உண்டு. • இஞ்சி சாறு குடித்துவந்தால் சளி மற்றும் தொண்டை வலியில்...

சங்கு வளையல்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க! தொகுப்பு : எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி கண்ணாடி, தங்கம், பஞ்சலோகம், பித்தளை என பல வகைகளில் வளையல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவையனைத்தையும் தாண்டி இன்று பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல் என்று பல ரகங்களில் வளையல்கள்...

காரட் கேக்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - இந்திரா, ஸ்ரீரங்கம் காரட் கேக்: தேவையானவை : கோதுமை மாவு - 1 கப் (250 ml), பேகிங் பௌடர் - அரை டீஸ்பூன், பட்டை பொடி - கால் டீஸ்பூன், துருவிய...

பயண டிப்ஸ்! – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
நீண்ட பயணம் செய்யும் போது அவசியம் கொண்டு செல்ல வேண்டியது என்ன? FB வாசகியர்களின் பதிவுகள்! மருந்து மாத்திரைகள் முதல் ஆதார் அடையாள அட்டை வரை. ரெடி டு ஈட் உணவு வகைகள் முதல் ரெயின்கோட்...

கேன்சர் எமனை விரட்டும் லெமன் கிராஸ் புல்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க - கே.முத்தூஸ், தொண்டி ‘லெமன் க்ராஸ்’ என்பது ஒரு வகை புல் இனத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில், ‘வாசனைப் புல்’, ‘எலுமிச்சைப் புல்’ மற்றும் ‘இஞ்சிப் புல்’...
spot_img

To Advertise Contact :