online@kalkiweekly.com

மனதை திசை திருப்பு!

எழுத்து : லேzy

ஒரு கப் zen – 10
காவிரிக் கரையோரம்
ஆரவாரமில்லாத ஒரு குக்கிராமம்.
ஆள் நடமாட்ட மில்லா ஆயிரம் ஆண்டு சிவாலயம்.
பழுதடைந்த கோபுரம்,
செடிகள் முளைத்த மண்டபம்.
காடாகிக் கிடந்த பூந்தோட்டம்,
கவனிப்பாரின்றி வளர்ந்து நிற்கும் தென்னந்தோப்பு.
ஆழ்ந்த நித்திரையில் கோயில் குருக்கள்.
மண்டபத்தில் அமர்ந்தேன்.
காவிரியின் சலசலப்பில் கலந்தேன்.
மரங்களின் காற்றசைவுக்கு அசைந்தேன்.
அமைதி என்னை ஆட்கொண்டது,
ஆசை என்னை விட்டு நகர்ந்தது.
என் கோபங்கள் காற்றோடு கலந்தது.
மௌனம் என்னை அரவணைத்தது.
நேரத்திற்கு அர்த்தம் மறந்து வெகு நேரமாயிற்று.
குருக்கள் கொண்டு வந்த
வெண் பொங்கல் பிரசாதத்தின் மணம்தான்
என்னை மீட்டது…

‘என் வீட்டில் நிறைய ZEN MASTERS உள்ளனர். அவை அனைத்தும் பூனைகள்’ என்கிறார் ஜெர்மனியின் ZEN குருவான’Eckhart Tolle.’
சாதாரண பூனையிடம் நாம் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும். பூனையை விட அழகாக Energy Conserve செய்கிற செல்லப் பிராணி இந்த உலகிலேயே இல்லை. அதற்குப் பசித்தால் மட்டும்தான் நம் கால்களைச் சுற்றி வரும். மற்ற நேரத்தில் அது அமைதியாகப் படுத்துவிடும். நாய்களுக்குக் கூட ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்கள் உண்டு. பூனைகளுக்கு அந்நோய்கள் வருவது கிடையாது. Stress என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் வாழும் பூனை. தூங்கி எழுந்தவுடன் பூனை ஒரு யோகா Session செய்யும், பார்த்திருப்பீர்கள். உடம்பை இப்படியும் அப்படியுமாக வளைத்து தீர்த்துவிடும். அதனுடைய Internal organs, அதாவது உள் உறுப்புகள் எல்லாவற்றுக்கும் உடற்பயிற்சி கொடுக்கும் வேலைதான் அந்த யோகா. பிறகு இரண்டு மணி நேரம் வெளியே உலாவச் சென்று விடும். பசித்தால் மீண்டும் வந்து நம் கால்களைச் சுற்றும். பிறகு உணவு… மீண்டும் தூக்கம்.
One can never win a staring contest with a cat.
பூனையை கண் சிமிட்டாமல், நேருக்கு நேர் பார்த்து யாராலும் ஜெயிக்க முடியாது. ஏன் தெரியுமா? நாம் அப்படிப் பூனையை முறைத்துப் பார்க்கும்பொழுது நம் மனம், ’அடுத்து என்ன செய்யப்போகிறது பூனை. நாம் கண் சிமிட்டாமல் இருக்க வேண்டுமே’ என்றெல்லாம் அலைபாயும். ஆனால், பூனையின் மனதில் எந்தவிதமான எண்ண ஓட்டமும் இருக்காது. It would simply wait for you to react. ’இவன் ஏதாவது செய்யட்டும்’ என்று முறைத்துக் கொண்டிருக்கும். ’அடுத்து என்ன?’ என்ற எண்ணமே இல்லாமல் வாழும் குணமுடையது பூனை. It just lives this moment. இந்த நேரத்தில் மட்டும்தான் அதன் கவனம் இருக்கும். நடந்ததையோ, நடக்கவிருப்பதையோ பற்றி பூனை கவலைப்படவே படாது. அதனால்தான் ’Eckhart Tolle’ அதை, ’ZEN குரு’ என்கிறார்.
ஞானிகளும் அப்படித்தான். காஞ்சி மகானையோ, ரமண மஹரிஷியையோ நேரில் பார்த்தவர்கள், ’அப்பப்பா அவரது பார்வை என்னை ஊடுருவிச்சென்றது’ என்பார்கள். உண்மை என்னவென்றால், அவர்கள் மனதில் எண்ண ஓட்டம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பதுதான். ’இவன் யாரு, எதுக்காக இங்கு வந்துள்ளான்’ என்றெல்லாம் அவர்கள் மனதில் எந்த எண்ணமும் இருக்காது. ஆனால், அவர்களைக் காணச் செல்லும் நாமோ, ’நம்மைப் பார்ப்பாரா? பேசுவாரா? நம் மனதில் இருக்கும் வேண்டுதலுக்கு இங்கு பதில் கிடைக்குமா? அவர் கையால் ஏதாவது பிரசாதம் எடுத்துக் கொடுப்பாரா?’ என்று ஆயிரமாயிரம் எண்ண ஓட்டத்துடன் அங்கு நிற்போம். அதுதான் வித்தியாசம்.

‘எண்ணங்களே இல்லாத பார்வை, தெய்வீகப் பார்வை’ நம் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் நம்முள்ளேயே தீர்வு உள்ளது. ஆனால், பிரச்னை என வரும்பொழுது நாம் மனதைப் போட்டு குழப்பிக் கொள்வதால் அந்தத் தீர்வு தற்காலிகமாக மறைந்து நிற்கின்றது. அதனால்தான் பிரச்னை என்று வந்தால் நம்மை, ’இந்தக் கோயிலுக்கு போ… அந்த நதியில் நீராடு. மகான்களின் ஜீவசமாதிக்கு சென்று வா’ என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி நாம் அங்கே சென்றால், நமது மனம், நாம் சந்தித்திருக்கும் பிரச்னையிலிருந்து சற்று திசை திரும்பும். Divert ஆகும். அப்பொழுது மறைந்திருந்த அந்தத் தீர்வு நமக்குத் தென்படும்.
Diverting your mind from the problem itself would provide a solution for ending the problem. பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மனதை திசை திருப்பினாலே போதும், அப்பிரச்னைக்குத் தீர்வு நம்முள்ளேயே தென்பட்டு விடும். ZEN செய்யச் செய்ய, நமக்குப் பிரச்னை எது வந்தாலும், இருக்கும் இடத்திலேயே நம் எண்ணங்களிலிருந்து விடுபட்டு நின்று, சற்றும் மனம் குழம்பாமல் பிரச்னையைச் சமாளிக்கும் திறம் நம்மில் வளர்ந்துவிடும்.
(தொடரும்)

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

விடுபடுவோம்!

0
ஒரு கப் Zen - 13 எழுத்து : லேzy இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மனிதனுக்கு survival ஒரு பொருட்டே அல்ல. உணவுக்கும் நீருக்கும் பஞ்சம் இருந்த காலமெல்லாம் மலையேறியாகி விட்டது. புயலோ, பெருமழையோ, வெள்ளமோ, எதுவாயினும்...

சொர்க்க வாசல் திறக்குமா?

0
ஒரு கப் ZEN - 12 எழுத்து : லேzy உயிரற்ற நிலைதான் மரணம். தனியாக மரணம் என்று ஒன்று கிடையாது. Lack of Life force is called Death. ‘உயிர்’ என்பது ஒரு அபூர்வ...

விநாயகர் சதுர்த்தியும் காக்கைகளும் !

0
- மங்கை ஜெய்குமார் எங்கள் குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசிக்கும் பெண்மணி தினமும் மொட்டை மாடியில் காக்கைகளுக்கு சாதம் வைப்பது வழக்கம். நானும் என் கணவரும் காலையில் மொட்டை மாடிக்கு நடை பயிற்சிக்காகச் செல்லும்...

தாலிபான் தலையீடு – தவிடுபொடியாகும் மகளிர் விளையாட்டு!

0
-ஜி.எஸ்.எஸ். ’கிரிக்கெட் விளையாட்டு பெண்களுக்கு ஏற்றதல்ல. அப்படி ஆடும்போது அவர்களின் முகமும், உடலின் சில பகுதிகளும் முழுமையாக உடையால் மறைக்கப்படாமல் போகலாம். இஸ்லாமிய நெறிகள் இதை ஒருபோதும் அனுமதிக்காது’ - இப்படிக் கூறியிருக்கிறார் ஆப்கானிஸ்தானைக்...

நீண்ட ஆயுள் வேண்டுமா?

0
- ஆர். ஜெயலட்சுமி பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தேரையர் எப்படி வாழ வேண்டும் என இப்படிக் கூறுகிறார் : பால் உணவு உட்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள். படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே...
spot_img

To Advertise Contact :