0,00 INR

No products in the cart.

மனம் பதறுகிறது!

– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

பெண் சிசுவை கருவிலேயே கலைப்பது முதல், கண் பார்வையால் காமுறுவது வரை பெண்களுக் கான கொடுமைகள் சொல்லிலடங்காது. மனத்தால் வன்முறை, உடலால் வன்முறை என்று வீட்டிலும் வெளியிலும் எதிர்கொள்ளும் அராஜகங்களை மெளனமாகப் பொறுத்துக்கொண்டு, ’பெண் என்பவள் பூமிக்குச் சமமாக பொறுமை கொண்டவள்’ என்பதை நிரூபித்து வருகிறாள்.

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation) போன்ற கொடூரமான செயல்களையும் எதிர்கொண்டு போராடி ஓரளவு வெற்றி பெற்று வருகிறது பெண்ணினம். கருவிலிருந்து மரணம் வரை பல்வேறு வழிகளில் பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள் பெண்கள்.

மொழியை, ’தாய் மொழி’ என்கிறோம். நிலத்தை, ’பூமா தேவி’ என்கிறோம். தேசத்தை, ’தாய் நாடு’ என்கிறோம். ஆனால், சுதந்திரமாக வாழ விடாமல் உயிரோடிருக்கும்போதே பெண்களுக்கு நரக வேதனையை அனுபவிக்க வைக்கிறது உலகம். இன்னும் எத்தனை காலம்தான் இந்த இழிநிலையைப் பொறுத்துக் கொண்டிருப்பது?

இந்தப் பீடிகையெல்லாம் எதற்காக என்கிறீர்களா? வருத்தம் தரும் செய்தி இருக்கிறது. வாருங்கள் பார்ப்போம்.

பரந்த நோக்கு கொண்ட, நவ நவீனமான காஸ்மோபாலிட்டன் சிங்கப்பூரில் நிலவும் பழைமைவாத ரகசியம் பெண்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்காசியாவில் உள்ள இந்த தீவு நாடு பலவிதங்களில் நவீனமாக விளங்கினாலும், அதன் சமூக விழுமியங்கள் பழைமை வாதத்தில் மூழ்கி உள்ளன.

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற கொடிய வழக்கம் உலகின் பல நாடுகளில் சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், சிங்கப்பூரில் அது சட்டவிரோதமானது அல்ல. வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளதல்லவா?

இந்த சம்பிரதாயம், ’மலாய்’ முஸ்லிம் சிறுபான்மையினரிடையே பரவலாக இருந்தாலும், பல பெண்களுக்கு, தாம் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோம் என்பது அவர்களின் பதின்ம வயது அல்லது பெரியவர்கள் ஆகும்வரை உணர்வுக்கு வருவதில்லை.

சாஷா என்பவர் தனது 22வது வயதில், தான் சிசுவாக இருந்தபோதே தனது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்தார். இது குறித்து, 2021 ஆகஸ்ட் 6ம் தேதி அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த செய்தி, இப்போது பரபரப்பாக கவலையோடு பார்க்கப்படுகிறது.

“நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்” என்கிறார் சாஷா. “எனது உறவினரின் சிறு பெண் குழந்தையை இத்தகைய சித்திரவதைக்கு ஆளாக்கியதைக் கண்டு, அதை நான் எதிர்த்த போதுதான் இந்த சிதைப்பு எனக்கும் நடந்திருப்பதை அறிந்து கொண்டேன். எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. எனது சுதந்திரம் பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன்” என்கிறார் இந்த 26 வயது பெண்மணி.

தனது தாயிடம் இது குறித்து ஆத்திரத்தோடு கேட்டாராம். “உனது பிறப்புறுப்பை சிதைத்து நீக்கியது உனது நன்மைக்காகத்தான். நீ கெட்டுப்போகாமல் இருப்பதற்காக… இப்போது நீ பரிசுத்தமானவள். இது நம் மதத்தின் ஒரு கட்டுப்பாடு” என்று அவர் தாய் விளக்கமளித்தாராம்.

சிங்கப்பூரின் மலாய் மொழியில், ‘சுனத் பெரெம்புவன்’ என்றழைக்கப்படுகிறது இந்தக் கொடுஞ் செயல். இதில் பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் அல்லது கிளிட்டோரல் ஹுட் வெட்டப்படுகிறது.

இது குறித்து விக்கிபீடியா கூறுவதைப் பார்ப்போம்… “இது பெண் பிறப்புறுப்பின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றும் சடங்கு. இந்தச் சடங்கு பெரும்பாலும் பெண் குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயதிற்குள் நடத்தப்படுகிறது. பொதுவாக, பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது. இவ்வாறு உறுப்பின் இதழ்கள் அகற்றப்பட்ட பெண்ணால் உடலுறவு இன்பத்தை அனுபவிக்க முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும், அப்பெண்ணால் புணர்ச்சிப் பரவச நிலையை அடைய முடியாது. பெண்குறியின் தலை, காம்பு, உட்புற சிற்றுதடுகள், வெளிப்புற பெரிய உதடுகள் போன்றவற்றை நீக்குவது அல்லது பெண் குறியை தைத்து மூடிவிடுவது என்று பல்வேறு நிலைகளில் சேதப்படுத்தப் படுகிறது. சிறுநீர் கழிக்க சிறு துளை மட்டுமே விடப்படுகிறது. பாலுறவுக்காகவும் குழந்தைப் பிறப்பிற்கும் யோனி தேவையான அளவுக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. மகளிர் பாலுணர்வை கட்டுப்படுத்துதல், பெண் கற்பு, தூய்மை போன்ற கருத்துகள் இதற்குப் பின்னணியாக உள்ளன. இது பொதுவாக, தாய்மார்களால் செய்யப்படுகிறது. தமது மகள்களுக்கும் பேத்திகளுக்கும் சேதப்படுத்தாவிட்டால் சமூகத்தில் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற அச்சம் இதற்குத் தூண்டுகோலாக உள்ளது” என்று தெரிவிக்கிறது விக்கிபீடியா.

சிங்கப்பூரின் இந்த நடைமுறை, உலகின் பிற இடங்களை விட தீவிரத்தில் குறைந்திருந்தாலும் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த வழக்கத்தை, ’உரிமை மீறல் செயல்’ என்று கண்டனம் செய்து அதை முடிவுக்குக் கொண்டுவர பிரச்சாரம் செய்கிறார்கள்.

சாஷாவும் பிற சில முஸ்லிம் பெண் குழுவினரும் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை அகற்ற இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக தளங்களையும் துண்டு பிரசுரங்களையும் பயன்படுத்துகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பகுத்தறிவு பட்டறைகளை நடத்துகின்றனர். ஆனால், இதுகுறித்து பொது வெளியில் பேசுவது கடினமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

சாஷாவின் குழுவைச் சேர்ந்த ஜூபி அலி என்ற பெண்மணி சிறு குழந்தையாக இருந்தபோதே இந்தச் சடங்கிற்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், அவர் தைரியமாக சமூக எதிர்ப்புகளை மீறி தனது சொந்த இரண்டு மகள்களை அதில் சேர்க்க மறுத்துவிட்டார்.

ஆனால், 59 வயதான அவரது சகோதரி தனது மகள்களையும் பேத்திகளையும் அதற்கு உட்படுத்து வதை தடுக்க முடியவில்லை. “இது ஒரு அர்த்தமற்ற செய்கை. இது நம் பெண்கள் வளர எந்த விதத்திலும் பொருந்தாது” என்று அவர் தெரிவிக்கிறார். ஜூபியைப் பொறுத்தவரை அவருக்கு இது குறித்து மனதில் ஆழ்ந்த வலி உள்ளது.

நம் மனம் பதறுகிறது!

ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற 31 நாடுகளில் வாழும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்து வருவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு, ’இந்த நடைமுறையால் எந்த ஆரோக்கிய நன்மையும் பெண்களுக்கு ஏற்படுவது இல்லை. ஆபத்தான இந்த மூடச் சடங்கு சிறுமிகளின் உடல் நலத்தை பாதித்து, அவர்களின் உரிமைகளை மீறுவதோடு, இது பாலின பாகுபாட்டின் தீவிர வடிவம்’ என்றும் எச்சரிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர இதற்கான சர்வதேச தினம் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

0
- அ.பூங்கோதை பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து...

அன்புவட்டம்

0
- அனுஷா நடராஜன் குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி... இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை? - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி கு, கும், திற், ஒ... எல்லா...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...