0,00 INR

No products in the cart.

மன்னிக்க வேண்டுகிறேன்!

– ரேவதி பாலு

“மன்னிக்கும்படியான காரியமா பண்ணியிருக்கான் அவன்?” – இது நம் வீடுகளில் அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தைகள்தான். பொதுவாக, மன்னிப்பது என்றால் `நடந்த சம்பவத்தை அடியோடு மறந்து விடுவது. எதுவுமே நடக்காதது போல பழைய மாதிரி பேசிப் பழகுவது` என்றுதான் நாமெல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தவறு இழைத்த ஒருவரை தண்டிக்க சக்தியில்லாமல், இயலாமையின் காரணமாக அவரை நம் ஆயுள் முழுவதும் மனசு முழுவதும் பகைமையோடு கறுவிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருப்பது மன்னிப்பாகாது என்று அர்த்தம் செய்துகொள்ள இயலாது.

மன்னிப்பின் உண்மையான அர்த்தம் தெரிந்தால் நாம் ஆச்சர்யப்படுவோம். “உன்னை தண்டிக்க என்னால் முடியும். ஆனால், நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. உனக்குத் தீங்கு நினைக்க நான் மனதால் கூட நினைக்க விரும்பவில்லை” என்று மனதார விட்டு விடுவதே மன்னித்தல் ஆகும்.

’இதெல்லாம் சாத்தியமா என்கிறீர்களா?’ இந்த மாதிரி மனநிலை அமைய, இவ்விதத்தில் ஒருவரை மன்னிக்க நாம் மிகவும் வலிமையானவராக இருக்க வேண்டும். இந்த மன வலிமை நமக்கு இருக்கிறதா? என்றுதான் நாம் முதலில் பார்க்க வேண்டும்.

நமக்கு இழைக்கப்பட்ட ஒரு கொடுமையான சம்பவத்தை நினைத்து நினைத்து நாம் மருகிக்கொண்டே இருக்கிறோம். ஏனென்றால், நம்மால் அதை மறக்க முடியவில்லை, நம் ஆயுள் முழுக்க அந்த சம்பவம் நம்மை உறுத்துகிறது. அதன் வெளிப்பாடாக நாம் ஒருவரை சபிக்கிறோம் என்றால் உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? அதை நினைத்து நினைத்து நாம் மருகும்போதும் வாடும்போதும் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம். இதனால் எதிராளிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

இதை ஒரு மகான் அழகாகச் சொல்கிறார். “கண்மூடித்தனமான கோபம், அதனால் வரும் ஆத்திரம் என்பது சூடாக எரிந்துகொண்டிருக்கிற கரித்துண்டை அடுத்தவர் மேல் எறிவதற்காக நாம் நம் கைகளால் எடுப்பது போல. அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த நம்மை நாமே தண்டித்துக்கொள்வதுதான் அதற்கான எதிர்வினை.

ஒருவர் செய்த தவறுக்கான தண்டனை அவருக்குக் கிடைக்கக்கூடாது என்றெல்லாம் சொல்ல வரவில்லை. அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் உண்மை.

மன்னிப்பு என்பது எதிராளிக்கு தண்டனை தர மறுத்தல் மட்டுமல்ல; நம் மனதில் இருந்து முழுமையாக இன்னொருவருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற நினைப்பையே அகற்றுவதுதான் உண்மையான மன்னிப்பு.

இந்த உணர்வு நம் மனதில் வந்துவிட்டால் நம் மனது அன்புமயமாக ஆகிவிடும். அதனால் இன்னொருவருக்கு வாழ்வில் ஒரு கெடுதல் வந்தால் நம்மால் மகிழ்ச்சி அடைய முடியாது. மாறாக, மிகவும் வருத்தப்படுவோம்.

நிலையற்ற இந்த வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டியது அவரவர் அளவில் நிறைய உள்ளது. இதில் ஏன் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொண்டு நம் வாழ்க்கையின் அமைதியைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்?

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

0
- அ.பூங்கோதை பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து...

அன்புவட்டம்

0
- அனுஷா நடராஜன் குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி... இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை? - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி கு, கும், திற், ஒ... எல்லா...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...