மருத்துவமனை நோயாளிகளே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

மருத்துவமனை நோயாளிகளே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை
Published on

 டாக்டர் ரேவதி மணிமாறன்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் ஆய்வில் முதல் கட்ட தரவுகள் வெளியாகியுள்ளன.  அதில் தற்போது ஐ.சி.யூ.வில் இருக் கும் நோயாளிகள் ஒருவர்கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை என்பது தெரியவந்துள்ளது.  மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வில் தற்போது வரை 970 நோயாளிகளின் விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.  இதில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 72 நோயாளிகளின் விவரங்களை மருத்துவமனைக் குழு ஆய்வு செய்த தில் ஐ.சி.யு. நோயாளிகள் ஒருவர்கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன? டாக்டர் ரேவதி மணிமாறனிடம் பேசினோம்.

இந்தியாவில் கொரோனா தொற்றைப் பொறுத்தவரையில் நாம் மிகச் சரியான பாதையில்தான் பயணிக்கிறோம். போகப்போகத் தொற்றுக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கை இன்னும் கணிசமாகக் குறையக் கூடும். நாம் செய்ய வேண்டியது வைரஸ் தொற்றின் தீவிர பாதிப்புக்கு உள்ளாகிறவர்களை மிகச் சரியான நேரத்தில் பரிசோதித்து காப்பாற்றுவதைப் பார்த்துக்கொண்டாலே போதும். நாளாக நாளாக வைரஸ் நம் சுற்றுச்சூழலில் இருந்தாலுமே நாம் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையிருக்காது.

பெரிய அளவிலான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை (Large scale vaccination drive) நமது அரசு குறிப்பாகத் தமிழக அரசு தடையின்றி சுகாதாரத் துறையின் மூலமாகச் செயல்படுத்தி வருகிறது. இன்னும்கூட இறப்பு உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையேதான் அதிகம் இருந்து வருகிறது. அது எந்த மாற்றுருவினாலும் (Delta, delta plus any variant of corona) மாறப்போவதில்லை. ஆக யாரெல்லாம் இந்த வைரஸிற்குப் பலியாடுகளாகும் வாய்ப்பிருக்கிறதோ இன்னும் யாரெல்லாம் தடுப்பூசி போடாமலிருக்கி றோமோ அவர்களெல்லாம் தடுப்பூசியைப் போடச் செய்வது ஒன்றே நூறு சதவிகிதம் இறப்பைக் குறைக்கும் வழி.

உண்மையில் நாம் பயந்துகொண்டே இருந்தால் ஆகப்போவது எதுவுமேயில்லை. R.T., P.C.R. பரிசோதனைகளை அறிகுறிகளற்றவர் களுக்கும் இனி தொடர்வதில் அர்த்தமில்லை. அறிகுறிகள் உள்ளவர் களைப் பரிசோதித்தாலே போதுமானது என்பதைத்தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் சொல்கிறது. அறிகுறிகள் உள்ளவர்கள் தாமதமின்றித் தாமாகவே முன்வந்து பரிசோதித்துக் கொள்ளவும் சிகிச்சை பெறவும் முன்வர வேண்டும்.

கொரோனா தொற்று இன்னமும் அதிகமுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

கிட்டதட்ட 80 கோடி இந்தியர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றவர்களாக இருக்கின்றனர், இரண்டு விதமாக!

1) இயற்கையான கொரோனா தொற்றின் மூலமாகப் பெற்ற நோய்த் தடுப்பாற்றல்.

2) தடுப்பூசியின் மூலமாகக் கிடைக்கும் நோய்த் தடுப்பாற்றல்.

சென்ற வருடம் நாம் சொல்லிக்கொண்டது போல இந்த வைரஸை நாட்டைவிட்டே துரத்துவதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. அவசியமற்றதும்கூட! வைரசுக்கு இரையாகும் வாய்ப்புள்ள மக்களைத் தடுப்பூசி மூல மாக எதிர்ப்பாற்றல் பெறச் செய்தாலே இந்த அபாய வைரஸை வலுவிழந்ததாக மாற்றலாம்.

இரண்டு தவணை தடுப்பூசியோடு கூடுதல் தவணை (Do we need Booster dose) தேவைப்படுமா?

முன்பே குறிப்பிட்டபடி நம்மில் பெரும்பாலோர் இயற்கை யாகவோ தடுப்பூசியின் மூலமாகவோ நோய்த் தடுப்பாற்றல் பெற்றவர் களாக இருக்கிறோம். ஏற்கெனவே வந்த தொற்றின் மூலமாகப் பெறப்பட்ட இயற்கை நோய்த் தடுப்பாற்றால் வாழ்நாளைக்குமானது. போலவே அதற்கு நிகராகத் தடுப்பூசியினால் பெறப்படும் நோய்த் தடுப்பாற்றலும் பல வருடங்களுக்கு நீடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நாம் செய்யக்கூடாதது ஒன்றே ஒன்றுதான். ச்சும்மா ச்சும்மா இரத்தத்தில் ஆன்டிபாடீஸ் அளவைப் பரிசோதித்து பார்த்து வீணாக பயப்படக்கூடாது. ஏனென்றால் நம் உடலுமே ஆன்டிபாடீஸ் அதாவது நோய் எதிர்ப்பு மருந்து விஷயத்தில் ஒரு சிக்கன நடவடிக்கையை மேற்கொள்கிறது. உடலில் தொற்று ஏற்படுகையில் மெமரி செல்கள் மூலம் நினைவுபடுத்தி அதிக அளவில் ஆன்டிபாடீஸைச் சுரந்தும் தேவைப்படாத நேரங்களில் குறைவாகச் சுரந்தும் சிக்கன நடவடிக்கை மேற்கொள்கிறது. அதனால் அநேகமாக பூஸ்டர் டோஸ் தேவை யிருக்காது.

Breakthrough infections அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் வருகின்ற கொரோனா தொற்றானது தடுப்பூசி சேவையின் தோல்வி யைக் குறிக்கிறதா?

Definitely not. அது தடுப்பூசியின் தோல்வி அல்ல. உண்மையைச் சொல்லப்போனால் கடவுளே அளித்த வரம் எனலாம். தடுப்பூசியினால் பெறும் மூன்றாம் அலை என்பதும் அதனால் குழந்தைகள் பாதிக்கப் படுவார்கள் என்பதும் எங்கோ யாரோ ஒருவரது கற்பனையின் நீட்சியாக இருக்கக்கூடும் என்கிறார் இந்தியாவின் முன்னணி எபிடமியாலஜிஸ்ட்களில் ஒருவரான டாக்டர். ஜெயபிரகாஷ் முலியில் (Dr Jayaprakash Muliyil).

அதற்காக நாம் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றிலிருந்தே தப்பிவிட்டோம் என்றோ தடுப்பூசியே தேவையில்லை என்றோ நீங்களாகக் கற்பிதம் செய்துகொள்ள வேண்டாமே ப்ளீஸ்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com