online@kalkiweekly.com

spot_img

மலரும் மனிதநேயம்

இனி படிக்க வைக்க இயலாது என்று அவளது கூலி வேலைக்குப் போகும் தாயாரால் தீர்மானிக்கப் பட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்த தேவதை.விவரம் அறிந்து சமயபுரம் மொடக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அழைத்து வந்தார். அந்தப் பெண்ணின் பெயர் துர்கா.

“என்ன க்ரூப் வேண்டும்?”“வொகேஷனல்தான் கிடைக்கும்னு சொன்னாங்க.”“ஃபர்ஸ்ட் க்ரூப் தரேன். படிக்கிறியா?”“முடியுமா தெரியல?”“முடியுமா பாரு. முடியலன்னா மாத்திக்கலாம்.”“சரிங்க சார்.”

இப்படியாக எனது மகள்களின் எண்ணிக்கையில் இன்னும் ஒரு எண்ணைக் கூட்டினாள் துர்கா.“செல் வாங்குவதற்காக வந்த தொகையில் முதல் செல் அவளுக்கு. சிம் போட்டுத் தரேன் யார்ட்டயாச்சும் பேசு.”

“போன் பேசனதே இல்ல அவ. வீடுபோயி சாமி கும்பிட்டுட்டு பேசச் சொல்றேன்”என்கிறார் அவளது பாட்டி. ரயிலேறாத குழந்தையைப் பார்த்திருப்போம். இந்த டிஜிட்டல் உலகத்தில் போனே பேசியிருக்காத குழந்தைகள் சிலர் எம் பள்ளியில் உண்டு.

அவளுக்கு குவைத்தில் இருந்து ஒரு தோழர் அனுப்பிய 12,000 ரூபாயில் இருந்து 9700க்கு வாங்கிய போன்தான் துர்காவிடம் இப்போது. இரு நண்பர்கள் அனுப்ப இருப்பதையும் சேர்த்து 59000 ரூபாய் வருகிறது. இதில் 9700 போக அந்த இரு நண்பர்களும் அனுப்பும் பட்சத்தில் 49,300 மீதம் உள்ளது. திங்களன்று இன்னும் ஐந்து குழந்தைகளுக்கு செல் வரும். பெயர் சொல்லக்கூடாது என்பதால் சொல்லவில்லை. பணம் கொடுத்தவர்களோடு குழந்தைகள் பேசுவார்கள்.

என்னுடைய ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு. இந்த ஆண்டு உதவி பெற்று 10 குழந்தைகளைக் கல்லூரிகளில் சேர்த்திருக்கிறோம். அதற்காகப் படாத பாடுபட்ட எங்கள் நண்பர் ஆனந்தகுமார் சாருடைய கைகளைப்பற்றிக் கொள்கிறேன். பழைய செல் இருப்பவர்கள் கொடுத்து உதவுங்கள்.

இப்போதும் கையேந்துகிறேன்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

அருள்வாக்கு

0
நால்வருக்கும் விநாயகர் அருள் ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் சுந்தரமூர்த்திக்கும் பிள்ளையார் அனேக அனுக்ரகங்கள் பண்ணியிருக்கிறார். அவருக்கு மாத்திரம் இல்லை. ’நால்வர்’ என்று சிறப்பித்துச் சொல்கிற அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நாலு மகாபெரியவர்களுக்குமே...

80S கிட்ஸ் மிட்டாய், 2K கிட்ஸ் சாக்லேட்!

0
சில வாரங்களுக்கு முன் நாளிதழ்களில் ‘எளிய காலங்களுக்கு ஒரு புகழ் மாலை’ என்ற பிரிட்டானியா கம்பெனி விளம்பரம் ஒன்று லீ பக்கம் வந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். அதில் மிட்டாய் வாங்க 50 பைசாவைச் சேர்த்து...

இலங்கை & சீனா உறவு இந்தியாவுக்கு ஆபத்தா?

0
இரு நாடுகளின் வரலாற்றில் அழியா இடம் பெற்றிருக்கும் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு இனி தொடர்ந்து மேம்படும் நிலையில் இல்லையோ என்ற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டிற்கும் அரசியல் மாற்றங்கள் சீனாவுடனான அவர்களின் உறவைத்...
spot_img

To Advertise Contact :

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field