0,00 INR

No products in the cart.

மழலை சொன்ன பாடம்!

சிறுகதை
சுமதி ராணி
ஓவியம் : தமிழ்

சூரியன், அதிகாலை ஆரஞ்சு வண்ண சேலையை வானம் முழுவதும் வாரி இறைக்க, சிக்னல் கிடைத்துவிட்ட சுறுசுறுப்பில் பறவைகள் சங்கீத மொழியில் விடியலைக் கொண்டாடின. இவற்றால் உறக்கம் கலைந்த சங்கரன், மெல்ல கண் திறந்து நேராக சுவற்றில் மாட்டியுள்ள கணபதியை பார்த்தார். ‘பிள்ளையாரப்பா… விடியல் மட்டும் தான் எனக்கு சுகம். நிச்சயம் நீ அருள்வாய்’என்ற நினைவு தந்த உற்சாகத்தில் வேகமாக காலைக்கடன்களைத் தொடர்ந்தார்.

“தாத்தா, தாத்தா… ப்ளீஸ், ராத்திரி நிறைய நேரம் வீட்டுப்பாடம் செய்ததால், ஷூவிற்கு பாலிஷ் போட மறந்துட்டேன். ஸ்கூலுக்குக் கிளம்பும்போது அம்மா பார்த்தால் திட்டுவாங்க… ப்ளீஸ் தாத்தா. நீங்க என் செல்லத் தாத்தாதானே… பாலீஷ் போட்டுத் தாங்க…”

சின்னக் கைகளை நீட்டிஉதடுகளையும் கண்களையும் சுருக்கி, உருட்டி கொஞ்சலோடு ஐஸ் வைத்தான் @பரன் சூரஜ். “கவலைப்படா@த கண்ணா. இதோ ஐந்து நிமிடத்தில் ரெடி” என்றார் சங்கரன் சந்தோஷமாய்.

“மாமா… இந்த அஞ்சு பாத்ரூமில் தண்ணீரில் அட்டகாசம் செய்யறா! கொஞ்சம் பாருங்க” இது மருமகள் நந்தா. பாத்ரூமிற்குள் சென்றால், “ப்ளீஸ் தாத்தா, ஒரே ஒரு டூ மினிட்ஸ் மட்டும் தாத்தா. குட் தாத்தாதானே” என்று கண்களைச் சுருக்கி, கன்னம் தடவினாள் குலாப் ஜாமூன் டேபத்தி அஞ்சு.

அதற்குள், “அப்பா வெளியில் காய்கறி வண்டிக்காரர் வந்திருக்கார். நல்லதாய் பார்த்து வாங்குங்க@ளன்.” – இது மகன் கௌதம். காலைப்பொழுதின் பரபரப்பில் சங்கரனுக்கு தலை சுற்றியது. ‘ரத்தக் கொதிப்பை பரிசோதிக்கணும்.’ டாக்டர் ராமாமிருதம் மூன்று நாட்களுக்கு முன்பே கடைத்தெருவில் பார்த்தபோது நினைவுபடுத்தினார்.

கௌதமிடம் பணம் கேட்க வேண்டும். என்ன சொல்வானோ தெரியவில்லை. ‘உஜாலா’வாக ஸ்கூலுக்குத் தயாரான சூரஜும், அஞ்சுவும் முயல் குட்டிகளாகப் போட்டிப் போட்டுக்கொண்டு, ஓடி வந்து சங்கரன் கையைப் பிடிக்க, நினைவு கலைந்தார்.

வெளியில் சென்று செருப்பு மாட்டும் போதுதான் நினைவு வந்தது, செருப்பும் மிகவும் நைந்துவிட்டது. ‘வேறொன்று வாங்க வேண்டும். கௌதம் என்ன சொல்வானோ?’“சீக்கிரம்ப்பா… லேட் ஆகிவிட்டது…சு என்றபடி வந்த கௌதம், “என்னப்பா யோசனை…? குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திற்கு நேரமாச்சு”என்றான்.

“இல்லப்பா… கௌதம். வந்து… செருப்பு ரொம்ப பிய்ஞ்சு போச்சு. வேற வாங்கணும். அதான்… அப்புறம் டாக்டர் ராமாமிருதத்தை முந்தா நாள் கடைத்தெருவில் பார்த்தேன். மறுபடியும் ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு நினைவுப்படுத்தினார். அதான்… கொஞ்சம் பணம் தந்தால்…” சங்கரன் இழுத்தார்.

“அப்பா புரியுது. நான் என்ன செய்யட்டும். நீங்கதான் பார்க்கறீங்களேப்பா… சூரஜ் ஷூ அறுந்துப்போச்சு. வேறு வாங்கணும். அஞ்சு வேற பள்ளியில எதுக்கோ நடனம் ஆடறளாம். அதுக்கு ஏதோ ட்ரெஸ் தைக்க பணம் கேட்டிருக்காங்க. போதாக்குறைக்கு நந்தா இரண்டு மாசமா தலைய வலிக்குது. கண் டெஸ்ட் பண்ணனும்னு கேட்டுக்கிட்டிருக்கா. பெண்டாட்டி, பிள்ளைகள் என்று பார்ப்பதா? எனக்குப் பார்ப்பதா? பெற்றவரைப் பார்ப்பதா? வருவோர் போவோரைப் பார்ப்பதா? ப்ளீஸ்ப்பா… குடும்ப பாரம் ரொம்ப அழுத்தறது. அப்பா, என் பாரத்தை உங்களிடம் சொல்லாமல், நான் வேறு யாரிடம் சொல்வேன்” என வேதனைப் பெருமூச்சு விட்டான் கௌதம். தொடர்ந்து வழக்கம்போல, “இந்த முறை மட்டும் உங்க பென்ஷன் பணத்திலிருந்து சமாளிச்சுக்கோங்க”என்றான்.

எதிர்பார்த்த பதில்தான். ஆனாலும், வழக்கம்போல் சங்கரன் மனம் துவண்டது. தண்ணீரிலிருந்து பிரிக்கப்பட்டு, கடைத்தெருவிலிருந்து வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மீனிற்குத் தெரி யும்; தான் எவ்வளவுதான் துள்ளினாலும், எம்பி குதித்தாலும் அடங்கப்போவது உண்மை என்று! எனினும், அது துள்ளாமலா… குதிக்காமலா இருக்கிறது.

சங்கரன் மனமும் அப்படித்தான் துள்ளியது. துள்ளும் மனம் யோசித்தது. ஆமாம்; பொல்லாத பென்ஷன் வாங்குகிற பணத்தில்… மகள் மிருதுளாவின் திருமணத்துக்காக கடன் வாங்கிய இடத்தில் மாதத் தவணை கட்டியபின், எஞ்சியுள்ள பணத்தை அப்படியே மருமகள் நந்தாவிடம் கொடுத்துவிடுவது கௌதமும் அறிந்ததே.

‘ஹ்ம்… பண விஷயம் என்றால், மனசாட்சி என்ற ஒன்று மாயமாகி விடுகின்றதே.’இந்த மாதம் பணத்தை நந்தாவிடம் தந்தபோது, நாளை மறுநாள் வரும் சங்கரனின் தகப்பனாரின் திவச காரியங்களுக்கான செலவையும் நினைவுப்படுத்தித்தான் கொடுத்துள்ளார். இதற்கு வேறு பத்தாக்குறை, பெண்டாட்டி, குழந்தைகள் செலவு கள் என்று என்னென்ன மன பாரங்களை என்னிடம் இறக்கி வைக்கப் போகிறானோ தெரியல… இயலாமையின் பிரதிபலிப்பாக பெருமூச்சு வந்தது.

அவருக்கு பிரம்மிப்பாக இருந்தது. மனிதரின் வாழ்நாளில், மனச்சுமையுள்ள வாழ்வானாலும், உயிர்வாழ வைப்பது சுவாசம்தான். அந்த சுமையின் வேதனையை லேசாக்கும் வெளிப்பாடு நீண்ட பெருமூச்சாய் சுவாசம்தான். என்னவொரு முரண்பாடு?

‘அப்பா, உனக்குக் கொடுத்து வைத்திருந்தால் உன்னுடைய திவசக்காரியங்களில் என் கடமைகளை நல்லபடியா செய்றேன். இல்லையேல்…’மனம் தந்தையின் முகத்தை தன்னுள் வாங்கி மன்னிப்பு கேட்டது. ‘அப்பா, ஒரு தந்தையாய் என்னை எப்படியெல்லாம் வளர்த்தாய். எனக்காக எத்தனை சுமந்தாய். எத்தனை இழந்தாய். எனக்கு மட்டும் ஏன் இந்த இயலாமை? என் மகன் கௌதமிற்காக நான் எவ்வளவு சுமந்@தன்… இழந்தேன். அவனுடைய அம்மா லட்சுமியும் கடைசிக்காலம் வரை எவ்வளவு பாடுபட்டாள். எங்கள் உணவை எத்தனை வேளைகள் குறைத்து, இவனுக்கு நல்ல படிப்பும், உத்தியோகமும் தர எவ்வளவு பாடுபட்டோம்.

அப்பா, அதெல்லாம் உனக்குத் தெரிந்ததுதானே. நீ பார்த்ததுதானே’என்று சங்கரனின் மனம் பலவறாய் புலம்பியது. திடீரென அவர் சாட்டையடி பட்டதுபோல் அதிர்ந்து நின்றார். ‘அப்பா, நீயும்தானே அப்போது டாக்டரிடம் போக, மருந்து வாங்க, மூக்கு கண்ணாடி மாற்ற என்னிடம் பணம் கேட்பாய். நானும் கௌதமின் படிப்பு செலவும், மிருதுளாவின் பாட்டு, நடன வகுப்புகள் செலவும் சொல்லி, உன்னிடம் சலித்துக்கொண்ட துண்டு.

என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க, உன் தேவைகளை, வேண்டு மென்றே இல்லை என்றாலும், சூழ்நிலை காரணங்களினால் புறக்கணித்த நான், அதே சூழ்நிலை காரணங்களினால் இன்று என் மகனால் புறக்கணிக்கப்படுகிறேன். நாளைக்கு கௌதமிற்கும் சூரஜ் இதைத்தான் செய்வானோ? வேண்டாம் சூரஜ். இந்த நியதியை நீ மாற்றி விடு. உன் தலைமுறை முதற்கொண்டு இதனைத் தொடரவிடாதே.

நீ பெற்ற குழந்தைகளை ஆளாக்கும் பொறுப்பிற்கு இணையானது, உன்னைப் பெற்றவர்களைக் காக்கும் கடமையும்!’சங்கரன் முடிவெடுத்தார். இன்று முதல் தினமும் சூரஜ் மனதில் இந்த விதையை ஊன்றி, நல்ல பயிர் வளர்க்கப் பிரியப்பட்டார்.

“தாத்தா… வாங்க போகலாம். ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்று கொஞ்சிய குழந்தைகளின் குரல், இவரின் நினைவைக் கலைத்தது. சூரஜ் திரும்பி, “அப்பா டாட்டா… அம்மா டாட்டா… அப்பா நீங்க கவலைப்படாதீங்க. உங்கக்கிட்ட காசு இல்லையா? இதோ நான் நல்லா படிச்சு முடிச்சிட்டு, வேலைக்குப் போய், காசு வாங்கி, தாத்தாவிற்கு, உங்களுக்கு எல்லாம் தரேன். யூ @டான்ட் வொர்ரி அப்பா… சரியா?”என்று வாசலிலிருந்து சத்தமாய், உற்சாகமாய் சொல்லிவிட்டு சங்கரன் கைப்பிடித்து இழுத்துச் சென்றான்.

சங்கரனின் கண் பார்வையை, நிரம்பி நின்ற கண்ணீர் மறைத்தது. ‘அன்பு சூரஜ், என் மனதைப் படித்துவிட்டாயா? நீ எங்களுக்கு இன்று நடத்தியுள்ள பாலபாடம், மழலை சொன்ன பாடம். அது ஊக்கமளிப்பதாக இருக்கு கண்ணா!’ ஆ@ராக்கியமான மனம் கொண்டு பிஞ்சுகளின் கரம்பிடித்து ஆனந்த நடைபோட்டார் சங்கரன்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

யாகாவாராயினும் நாகாக்க….

0
கட்டுரை: ஜி.எஸ்.எஸ் செபாஸ்டியன் மைக்கேல் என்பவரின் சுவை அரும்புகளை பத்து லட்சம் டாலர் தொகைக்கு இன்ஷ்யூர் செய்திருக்கிறது அவரைப் பணிக்கு அமர்த்தி இருக்கும், ‘டெட்லி’என்ற பிரபல பிரிட்டிஷ் தேயிலை தயாரிப்பு நிறுவனம். எதற்காக அவ்வளவு...

நலந்தரும் நாஞ்சில் நாட்டு உணவு!

0
-ம.லெஷ்மி நீலகண்டன்,ஈத்தாமொழி பல நீண்ட நெடிய வரலாறு படைத்தது நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அதுகுறித்து எனக்குத் தெரிந்த, பழக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே விவரிக்க முயல்கிறேன். காப்பி, தேனீர் : எனது அறிவுக்கு...

யுபிமிஸ்ம்

0
-லதானந்த் ஆங்கிலத்தில் ‘யுபிமிஸ்ம்’(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த...

இங்கிதம்!

0
லதானந்த் ஓவியம் : தமிழ் கோவையில் ஒரு கவியரங்கம் -‘வனத்திலிருந்து வருகிறேன்’அப்படிங்கிற தலைப்பில், ‘உலக வன நாளை’ ஒட்டி நடந்துச்சு. இடம் : அவினாசி லிங்கம் ஹோம் சயின்ஸ் யூனிவர்சிடி. பல கவிஞர்கள் இதில் கலந்துக்...

காலதேவி கோயில்

0
காலதேவி கோயில் மதுரை மாவட்டம், சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோயில். புராணங்களில் வரும் காலராத்ரியைத்தான் இங்கு கால தேவியாக வழிபடுகின்றனர். இந்தக் கோயில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடை திறக்கப்பட்டு, சூரிய...