online@kalkiweekly.com

மீண்டும் அமலா

-வினோத்

நடிகை அமலாவை நினைவிருக்கிறதா? 1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கியவர். . ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள அமலா ‘மைதிலி என்னை காதலி’, ‘மெல்ல திறந்தது கதவு’, ‘வேலைக்காரன்’, ‘வேதம் புதிது’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 1991இல் வெளியான ‘கற்பூர முல்லை’ படத்தில் நடித்திருந்தார். 

தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்  ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு  பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அகில் என்கிற மகன் உள்ளார். முதலில் இந்தச்செய்தி வந்த போது பலர் இது

வதந்தி என்று ஒதுக்கினர். காரணம் திருமணத்துக்குபின் நடிப்பதில்லை என்பதில் தீர்மானயிருந்தவர் அவர். ஆனால் இப்போது 30 வருடங்களுக்குப் பிறகு, தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘கணம்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்,

இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015இல் வெளியான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துவந்த ஷர்வானந்த், 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது முழமூச்சில். புத்தாண்டில் படம் வெளியாகும் என்கிறது டோலிவுண்ட் வட்டாரம்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கடைசிப் பக்கம்

1
  தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! -சுஜாதா தேசிகன் கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில்...

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

0
முகநூல் பக்கம் இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்? ”என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்” – என்று...

நாளை வெகுதூரம் (சிறுகதைகள் தொகுப்பு)

0
நூல் அறிமுகம் சரவணன் சுப்ரமணியன் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) திருப்தியான மனநிலைக்கு எடுத்துச் செல்லும் தொகுப்பு 'எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன்' என்ற தொமினிக் விதால்யோவின் கூற்றை வழிமொழியும்...

பத்திரிகை நிருபர் பணி என்பது வரம்

0
கா.சு. வேலாயுதன்  நிருபர் பணிக்கு வந்து 24 ஆண்டுகள் முடிந்து 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 1997- செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு கல்கி வார இதழ் தன் அலுவலகத்திற்கு வரவழைத்து,...

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்

0
விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்களே?  ஜோசியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா?     -சரவணன்,வேலூர் ஜோதிடக்கலை வல்லுநர் திருமதி வேதா கோபாலன் அளிக்கும் பதில்  நம்முடைய விதி என்ன என்பதை  நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும் சரவணன்...
spot_img

To Advertise Contact :