0,00 INR

No products in the cart.

முப்பெரும் சக்தியாக உருக்கொண்ட அம்பிகை!

நாள் ஒன்று; வழிபாடு மூன்று!

– தனுஜா ஜெயராமன்

தலைநகர் சென்னையில் எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும், பௌர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். அந்த முப்பெரும் தேவியரில், இச்சா சக்தியாக திருவுடையம்மன் மீஞ்சூர் அருகிலுள்ள மேலூரிலும், ஞானசக்தியாக வடிவுடையம்மன் திருவொற்றியூரிலும், கிரியா சக்தியாக கொடியிடையம்மன் திருமுல்லைவாயிலிலும் அருள்பாலிக்கின்றனர்.  இம்மூன்று அம்மன்களும் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அம்மன் விக்ரஹங்களும் ஒரே சிற்பியால் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர், அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது. அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு, அப்பகுதியில் சுகந்தவனம் என்ற அடர்ந்த காட்டில் சென்று ஒரு மேட்டுப்பகுதியில் தானே பால் சொரிவதையும், பாம்பு ஒன்று அந்தப் பாலை அருந்துவதையும் கண்டு அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்தனர்.

பிறகு, அவர்கள் அங்கிருந்த முட்புதரை விலக்கிப் பார்த்தபோது, ஒரு புற்று சிவலிங்க வடிவமாகக் காட்சி தந்தது. சிவபெருமான் புற்று வடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர் மக்கள் அவ்விடத்தில் கோயில் ஒன்றை எழுப்பியதோடு, அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தனர்.

ஒரு சமயம் சோழ நாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன், வடநாடு மீது போர் தொடுத்து வென்று சுகந்தவனம் வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். காலை பூஜைக்காக விசாரித்த மன்னன், திருமணங்கீஸ்வரர் வரலாற்றை அறிந்து, இக்கோயில் சிவனை வழிபட்டபோது, அக்கோயிலில் சக்தி இல்லாமல், சிவன் மட்டுமே உள்ளதைக் கண்டான். உடனே மன்னன் சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக அம்மன் சிலையையும் வடித்து பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவிட்டான்.

அம்மன் சிலை வடிக்க, தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர, சிற்பி அலைந்து திரிந்து ஒரு மலையின் உச்சியில் கல் ஒன்றைக் கண்டான். அதனை மலை மீதிருந்து கொண்டு வரும்போது, கைநழுவி கீழே உருண்டு விழுந்ததில், அந்தக் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.

சிற்பி, தான் தவறு செய்து விட்டதாக நினைத்து தனது கையைச் சிதைத்துக்கொள்ள முற்பட்டார். அப்போது அங்கே அம்மன் தோன்றி, “சிற்பியே, தவறு உன்னிடம் இல்லை. நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல், ஞான சக்தியாக வடிவுடையம்மன், கிரியா சக்தியாக கொடியிடையம்மன் என முப்பெரும் சக்திகளான உருக்கொள்ளவே மூன்று பாகங்களாக ஆனோம். மூவகை உருவையும் சிலையாக வடித்து, மேற்படி திருக்கோயில் களில் பிரதிஷ்டை செய்து விடு” என உத்தரவிட்டு, அம்பிகை மறைந்தாள். அதன்படி திருப்பணிகள் செய்து, மூன்று அம்மன்களையும் அவரவர்க்குரிய தலங்களில் சன்னிதிகள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் ஒரே நாளில் வழிபட்டால் விரும்பும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும் என்பது ஐதீகம். குறிப்பாக, இந்த அம்மன்களை பௌர்ணமி தினத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....