முள்ளு முருங்கை இலை வடை

முள்ளு முருங்கை இலை வடை

ஆர். பிருந்தா இரமணி, ஐராவதநல்லூர்.

தேவையானவை:

இட்லி அரிசி – 1 கப்

முள்ளு முருங்கை இலை – 20

ஜீரகம் – 1 டீஸ்பூன்

மிளகு – 20

உப்பு தேவையானது

கடலை எண்ணெய் பொரிக்க

செய்முறை:

1. அரிசியைக் களைந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

2. முள்ளு முருங்கை இலையை நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட்டு, சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து வைக்கவும்.

3. ஊறிய அரிசி, முள்ளு முருங்கை இலை, ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

4.ஒரு காட்டன் துணியில் அரைத்த மாவைப் போட்டு ஒற்றி எடுத்தால் மாவில் உள்ள அதிகப்படி தண்ணீர் எல்லாம் துணியில் உறிஞ்சி விடும்.

5. வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.

6. சூடானதும் மாவைச் சிறு உருண்டைகளாக எடுத்து, வடை போல் தட்டி எண்ணெய்யில் போடவும் .

7. இரு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்தால் முள்ளு முருங்கை இலை வடை ரெடி!இருமல், சளிக்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com