மூலிகை குழம்பு

மூலிகை குழம்பு
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையானவை:

வறுத்து அரைக்க:, மிளகு,சீரகம்,வெந்தியம் ,கடுகு தலா ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை ஒரு துண்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

வெங்காயம்- 2.

தக்காளி – 2.

பூண்டு பற்கள் – 10.

புளி, மிளகாய் தூள், ந.எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

துளசி,முடக்கத்தான் கீரை,புதினா,கற்பூரவல்லி,தூதுவளை ,கொத்தமல்லி, கருவேப்பிலை, வேப்பங்கொழுந்து, –  தலா 1 கைப்பிடி

வெற்றிலை – 2. அல்லது 3.

பிரண்டை – 5 அல்லது 6 துண்டுகள்.

செய்முறை:

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் சூடாக்கி ஒரு வெங்காயம்,இரண்டு தக்காளி மற்ற மூலிகைகளை சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு பற்கள்,அரைத்த விழுதையும்,சேர்த்து வதக்கி, மிளகாய் தூள்,மஞ்சள்தூள் உப்பு, சேர்த்து,புளியை சேர்த்து கொதிக்க விடவும்.இறுதியாக அரைத்த பொடியை சேர்த்து இறக்கவும். சுண்டை,மணத்தக்காளி வற்றல்களை பொரித்தும் போடலாம். மழை குளிர்காலத்திற்கேற்ற இந்த மூலிகை குழம்பு ஜூரம்,ஜலதோஷம் வராமல் தடுக்க உதவும்.

ஷெண்பகம் பாண்டியன், சத்துவாச்சாரி
ஷெண்பகம் பாண்டியன், சத்துவாச்சாரி
logo
Kalki Online
kalkionline.com