மோர் தோசை

மோர் தோசை
Updated on

தேவை:-

பச்சரிசி மாவு – 1 க்ப்

தயிர் 1/2 கப்

கறிவேப்பிலை – 10

பெருங்காயப்பொடி 1 டீஸ்பூன்

உப்பு திட்டமாக

செய்முறை:-

மாவு, தயிர், உப்பு மூன்றையும் மிக்ஸியில் போட்டு, நீர் விட்டு நுரைக்க, ஒருநிமிஷம் அரைக்கவும்.அதை கோதுமை தோசை பதத்தில் கரைத்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லில் பரவலாக ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.அம்புட்டுதேன். தொட்டுக்க காட்டசாட்டமான இட்லி மிளகாய் பொடி சூப்பராக இருக்கும்.

.கே. என்.கோமதி, பெருமாள்புரம்

logo
Kalki Online
kalkionline.com