0,00 INR

No products in the cart.

யுபிமிஸ்ம்

-லதானந்த்

ஆங்கிலத்தில் ‘யுபிமிஸ்ம்’(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த கண்ணியத்துடன் அழைக்கப்படுவதான ஓர் உணர்வை இது தரும் என்பதில் சந்தேகமில்லை.

சான்றாக, ‘உடல் ஊனமுற்றோர்’எனும் சொல் தற்போது, ‘மாற்றுத் திறனாளி’என அழைக்கப்படுகிறதே, அதைப்போல. இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

முன்பெல்லாம் அரசுப்பணிகளில், ‘ப்யூன்’என்னும் பணி உண்டு. அப்பணி பிறகு, Last Grade Government Servant (LGGS), அதாவது ‘கடைநிலை ஊழியர்’என அழைக்கப்பட்டது. தற்போது அப்பணிக்குப் பெயர், ‘அலுவலக உதவியாளர்.’

வங்கிகளில், ‘ப்யூன்’என்று சொன்னால் ரகளை செய்து விடுவார்கள். அங்கெல்லாம், “sub staff`என்று சொல்ல வேண்டும். ‘மணியக்காரர்’என்ற பதவி, தற்போது, ‘கிராம நிர்வாக அலுவலர்’(Village Administrative Officer)என மாறியிருக்கிறது.

ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிய பிறகு ரிப்பேரானால், அதை சரிசெய்ய வரும் மெக்கானிக்குக்கு, ‘சர்வீஸ் எஞ்சினியர்’என்பது தற்காலத்துப் பொதுப்பெயர். கம்ப்யூட்டரைக் கொத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் தங்களை software engineer என்று சொல்லிக்கொள்ளுவதும் வழக்கமான ஒன்றுதான்.

மேலை நாடுகளில் scavenger என்பது garbage collector ஆகிவிட்டது.‘பெயரில் என்ன ராஜா இருக்கிறது?’என்கிறீர்களா? அதுவும் சரிதான். மூன்றாம் பாலினத்தவர் முன்பெல்லாம், ‘அலி’என்று பரவலாக அழைக்கப்பட்டார்கள். ‘அலிகளுக்கின்பம் உண்டாமோ?’எனப் பாரதியாரும் பாடியிருக்கிறார்.

சிலசமயம், ‘பேடி’என்னும் வார்த்தையும் புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. டி. ராஜேந்தர் அடிக்கடி சொல்லுவார், ‘இந்த ராஜேந்தர் ஒரு தாடி! ஆனால், இல்ல பேடி!’மூன்றாம் பாலினர் காலக்கிரமத்தில், ‘அரவாணிகள்’என அழைக்கப்பட வேண்டும் என விரும்பி அவ்வாறே அழைக்கப்பட்டனர். தமிழ்ப் பத்திரிகைகள் இப்பதத்தை பிரபலப்படுத்தின.

கொஞ்ச காலம் போக, ‘திருநங்கைகள்’என அழைக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டு, அவ்வாறே இவர்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இவர்கள் தங்களை, ‘பெண் உணர்வு கொண்ட ஆண்கள்’என அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, ஷேக்ஸ்பியர், ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’நாடகத்தில் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது :

“A rose by any other name would smell as sweet”

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

மழலை சொன்ன பாடம்!

0
சிறுகதை சுமதி ராணி ஓவியம் : தமிழ் சூரியன், அதிகாலை ஆரஞ்சு வண்ண சேலையை வானம் முழுவதும் வாரி இறைக்க, சிக்னல் கிடைத்துவிட்ட சுறுசுறுப்பில் பறவைகள் சங்கீத மொழியில் விடியலைக் கொண்டாடின. இவற்றால் உறக்கம் கலைந்த சங்கரன்,...

யாகாவாராயினும் நாகாக்க….

0
கட்டுரை: ஜி.எஸ்.எஸ் செபாஸ்டியன் மைக்கேல் என்பவரின் சுவை அரும்புகளை பத்து லட்சம் டாலர் தொகைக்கு இன்ஷ்யூர் செய்திருக்கிறது அவரைப் பணிக்கு அமர்த்தி இருக்கும், ‘டெட்லி’என்ற பிரபல பிரிட்டிஷ் தேயிலை தயாரிப்பு நிறுவனம். எதற்காக அவ்வளவு...

நலந்தரும் நாஞ்சில் நாட்டு உணவு!

0
-ம.லெஷ்மி நீலகண்டன்,ஈத்தாமொழி பல நீண்ட நெடிய வரலாறு படைத்தது நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அதுகுறித்து எனக்குத் தெரிந்த, பழக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே விவரிக்க முயல்கிறேன். காப்பி, தேனீர் : எனது அறிவுக்கு...

இங்கிதம்!

0
லதானந்த் ஓவியம் : தமிழ் கோவையில் ஒரு கவியரங்கம் -‘வனத்திலிருந்து வருகிறேன்’அப்படிங்கிற தலைப்பில், ‘உலக வன நாளை’ ஒட்டி நடந்துச்சு. இடம் : அவினாசி லிங்கம் ஹோம் சயின்ஸ் யூனிவர்சிடி. பல கவிஞர்கள் இதில் கலந்துக்...

காலதேவி கோயில்

0
காலதேவி கோயில் மதுரை மாவட்டம், சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோயில். புராணங்களில் வரும் காலராத்ரியைத்தான் இங்கு கால தேவியாக வழிபடுகின்றனர். இந்தக் கோயில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடை திறக்கப்பட்டு, சூரிய...