0,00 INR

No products in the cart.

யூ டூ?

பாமா கோபாலன்

டற்கரையில் காத்திருந்தாள் ஷாலினி. பத்து நகங்களையும் கடித்தாகிவிட்டது.இனி யாராவது நகம் கடன் தந்தால்தான் உண்டு.சுரேஷும் கடற்கரையில் காத்திருந்தான்.

லவர்ஸ்என்றால்அலை மோதும் பீச்சில்தான் காத்திருந்து சந்திக்கணும்’னு ஏதாவது ரூல் போட்டிருக்கா என்ன?

இது கடற்கரை ரயில்வே ஸ்டேஷன்.

பின்ன எதற்காக சென்னை கடற்கரை சந்திப்புஎன்று போர்டு போட்டிருக்கிறதாம் என்று கேட்கிறாள் ஷாலினி.

ஏய் .. நீ இந்த பிளாட் ஃபாரத்தில் காத்திருக்கியா? நான் மூன்றாவது பிளாட்ஃபாரத்தில் இருந்தேன்.’‘

நடந்தவாறு கேட்டான். “என்ன சொல்றார் உங்கப்பா?”

அவருக்கு எப்பவும் யூ ட்யூப் கவலைதாண்டா…” என்றாள்.

யூ பற்றிக் கவலைப்படச் சொல்லு.. அதாவது உன்னைப் பற்றி. உன் கல்யாணத்தைப் பற்றி…” சிரித்தான்.

உங்கம்மா சம்மதத்தை எப்படி வாங்கறது?” – அவள் பதிலுக்குக் கேட்டாள்.

அவங்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான் இருக்காம். அது என்னன்னு சொல்லித் தொலையவும் மாட்டேன்றாங்க. இல்லாட்டி ஏதாவது செட்அப் செய்துடலாம்.”

என்ன மாதிரி கண்டிஷனாய் இருக்கும்னு கொஞ்சம் ஊகிச்சுத்தான் பார்ப்போமேஅம்மாவுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?”

டிகாஷன் காபிஅரக்குக்கலர் சேலைஆனியன் பஜ்ஜி…”

வேற வேற..” ‘நீயா நானா’ கோபிநாத் ஸ்டைலில் கேட்டாள்.

சீரியல்ஸ் பார்த்துத் தள்ளுவாங்க…”

சுத்தம். நான் பார்க்கறதே இல்லை. ஒரு வேளை, ‘பாரதி கண்ணம்மாவின் கதாநாயகி நேற்று என்னென்ன கலர் உடைகளில் தோன்றினாங்க…’ என்கிற மாதிரி க்விஸ்கிஸ்வைப்பாங்களோ?”

என்ன சொன்னஎன்ன சொன்ன..?” – கண்கள் விரியக் கேட்டான் சுரேஷ்.

உக்கும்.. இதெல்லாம் மட்டும் காதில் கரெக்டா விழுமே?”

வரசா ஃப்ளாட்ஸ்…

இரண்டாவது மாடி.. F2வில் சத்தம் ஃப்ளோரைப் பிளந்தது.

ஷாலுசோபாவை வலது பக்கமாத் திருப்புமெதுவா…”

டேய் பரத்டி.வி. மேல இடிச்சுடாதே… கையில சுத்தியல் வேற வைச்சிருக்கஒவ்வொரு சானலும் பீஸ் பீஸாத் தெரியும்.” – அப்பா வரதராஜன் கத்தினார்.

மனைவி மங்களம் எட்டிப் பார்த்தாள். “என்னது பீட்ஸா வேற ஆர்டர் செய்திருக்கானா இத்தனை அமர்க்களத்தில்?” என்றாள்.

ஷாலினி இயர்ஃபோனை மாட்டியபடி “டாடிக்விக். மணி இப்பவே மூணரைஎன் டிரஸ்ஸிங் டேபிளை ஜாக்கிரதையா ஹாண்டில் பண்ணுங்க..” என்றாள்.

வீடு மாறப்போகிறார்களா?

பெண் பார்க்க வருகிறார்களா?

இரண்டுமில்லை. ‘வீடியோ வரதராஜன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற அவளின் அப்பா வரதராஜனும் மம்மி மங்களமும் யூட்யூப் வெறியர்கள். பார்ப்பதோடு நிறுத்துவதில்லை. பதிவேற்றுவதுதான் முக்கியக் கடமை என்று நினைப்பவர்கள்.

மனைவி சமையல் மேடையை மாடு கன்று போடும் இடம் மாதிரி சொதப்பியவாறு பிட்ளை செய்ய முயல்வது முதற்கொண்டு வீடியே எடுப்பார்.

பால் பொங்குவதை வீடியோவாக எடுத்துவிட்டு .. “இது மாதிரி பால் பொங்காமல் இருக்க வேண்டுமானால் அதன் பக்கத்திலேயே நில்லுங்கள்” என்கிற மாதிரி ஒரு கமென்ட் தருவார் (ஜோக்காம்.)

யூ ட்யூபோ வீடு காட்டும் மேனியா’ அவரைப் பீடித்திருக்கிறது.

அவர் கணகணவென்று மணியடித்தவாறு சுலோகம் சொல்வதை மனைவி ஷூட் செய்வாள். சாமி பக்கம் திரும்பாமல் மொபைல் பக்கம் திரும்பியே சிரித்தவாறு சுலோகங்களை சொதப்புவார்.

வெளிச்சம் போதாததால் வராந்தாவுக்கு பூஜை அறையை ஷிஃப்ட் செய்யலாமா என்றொரு எண்ணம் உள்ளது.

ஒரு சமயம் “சாமி படத்திலிருந்து பழைய பூக்களை எடுத்துவிட்டு ஷுட் செய்யுங்கள்..” என்று யாரோ கமென்ட் போட்டிருந்தார்கள். இவருக்கு வேண்டாத மூன்றாவது ஃப்ளோர் அண்ணாசாமி தன் கஸினை விட்டு கமென்ட் போட வைத்திருப்பார் என்பது வி.வி.யின் ஊகம்.

கர்மம்” என்று மங்களம் தலையில் (வலிக்காமல்) அடித்துக்கொள்வாள்.

நீ மட்டும் என்னவாம்? ஏப்ரன் கட்டிக்கொண்டு பாத்திரம் துலக்குவது எப்படின்னு வீடியோ போடும்போது புடைவையெல்லாம் தண்ணியாச்சே.,. தோசை ஊற்றும்போது முகத்தில் தெறித்து நகைச்சுவை நடிகை மாதிரி இருந்தது பற்றி கமென்ட் வந்ததே… அதைவிடவா?” என்று கலாய்ப்பார்.

என்னங்க இன்னிக்கு வாழைக்காய் தோல் சீவுவது எப்படின்னு ஒரு வீடியோ போடலாம்னு இருக்கேன்…” என்பாள் மங்களம் ஒருநாள்.

வாழைக்காய் இருக்கா?” என்பார்.

இல்லைவாழைப்பழம்தான் இருக்கு” என்பாள்.

அப்ப… வாழைப்பழம் தோல் உரிப்பது எப்படின்னு வீடியோ செய்துடலாம்” என்பார் அபத்தமாய்..

இன்னதுதான் என்றில்லாமல் கையில் அகப்பட்டதையெல்லாம் வீடியோவாக்கி யூ ட்யூபில் ஏற்றிவிடுவார்கள்.

பனியன் போட்டுக்கொள்வது எப்படி’ன்னு ஒரு வீடியோ எடுக்கலாமா? என்று அவர் ஒரு நாள் யோசித்தார்.

என்னப்பா இது அபத்த யோசனை?” என்று மகள் முகம் சுளித்ததற்கு

ஏம்மா? புடைவை கட்டுவது எப்படின்னு எல்லாருக்கும் தெரிஞ்சதை சொல்லித் தராங்க இல்ல?” என்று லாஜிக் பேசுவார்.

இன்றைக்கு வேறு வகையான அமர்க்களம்.

போனவாரம் ஒரு போன்கால் வந்தது. அதுதான் வீ‘ட்டைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது.

மிஸ்டர் வீடியோ வரதராஜன்மிகச்சிறப்பாக யூ ட்யூப்களில் வீடியோக்கள் பதிவேற்றுபவர்களைப் பேட்டி கண்டு, அவர்கள் ஷூட் செய்வதை ஷூட் செய்து தீபாவளியன்று வெளியிட எங்கள் ‘புதுமை’ சானல் முடிவு செய்திருக்கிறது..” லட்டு மாதிரி குரலில் ஒரு இளம் பெண் பேசினாள். “உங்களைப் பற்றிப் பத்து வரிகளில் ஒரு குறிப்பு வேண்டும்” என்றாள்.

பத்து வரிகளை நூறு முறை அடித்து எழுதிவிட்டார் வி.வி.

வடுவூரில் தன்னை மாடு முட்டிய சம்பவத்தை இதில் சொல்ல வேண்டுமா? வேண்டாமா? என்கிற அளவுக்குக் குழப்பம்.

அந்த லட்டுப் பெண்ணைப் பார்க்கும் ஆவல் வேறு.

மிகச் சரியாக ஐந்து மணிக்கு வருவதாக சானல்காரர்கள் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், முன்னதாகவே டோர் பெல் அடித்தது.

சார் உபன்யாஸா மேட்ரிமோனியிலிருந்து வரேன்.”

அடடே. ஷாலினி கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதற்காகப் பதிவு செய்திருந்த இடம். நேரடி சர்வீஸும் உண்டாம். நாலு நாள் முன்னால் போன் செய்தபோது இவர்தான் இன்றைக்கு வரச் சொல்லியிருந்தார். மறந்தேவிட்டார்.

அப்படி உட்காருங்க.. ஒரு சின்ன வேலை.. முடிச்சுட்டு வந்துடறோம். குடிக்க ஜலம் வேணுமா? காபி குடிக்கறீங்களா?”

தனித்தனியாத்தானே தருவீங்க?” என்று தேவையில்லாமல் ஜோக் அடித்தார் ‘மேட்ரி’ காரர்.

சமயம் பார்த்து இதுவேற தொல்லை. மனசுக்குள் முனகியவாறு காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் மங்களம்.

சர்க்கரை போட மறந்துட்டீங்களோ? இட்ஸ் ஓகே .. என் உடம்பிலேயே அது எக்கச்சக்கமா இருக்கு” என்றவாறு அபத்தமாய்ச் சிரித்தார் மேட்ரி.

மீண்டும் டோர் பெல்.

வந்துவிட்டார்கள்!

ஏய் ஷாலினி… பங்களம்.. மரத்..” என்றார் குழறியவாறு.

உள்ளேன் ஐயா என்று கிண்டலாய்ச் சொன்னாள் மகள்.

இவர் எதிர்பார்த்த லட்டு எதுவும் அந்த டீமில் இல்லாதது அப்பாவுக்கு ஏமாற்றம்தான்.

காஸ்ட்லியான கேமரா, ஏகப்பட்ட ‘வாட்’ களைத் தின்னும் லைட்கள், நீ………ள ஒயர்கள், ஜங்ஷன் பாக்ஸ்.. கார்ட்லஸ் காலர் மைக்

ஸ்மார்ட் இளைஞன், சின்ன மீசை, ஒற்றைக்காதில் மின்னும் கடுக்கன், டைட் ஜீன்ஸ், ‘அயம் ஸ்மார்ட்’ என்று அறிவித்த டிஷர்ட் சகிதம் சுறுசுறுப்பாக இயங்கினான்.

மேட்ரிகாரர் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்..

அந்த இளைஞன் முக்காலியில் கேமராவைப் பொருத்தினார். இதுபோல் ஒரு கேமரா இருந்தால் தினமும் யூ ட்யூபுக்கு எடுக்க எவ்ளோ நன்றாயிருக்கும் என்று வரதராஜன் அபத்தமாய் ஆசைப்பட்டார் அதன் விலை தெரியாமல்.

அஸிஸ்டென்ட் ஒருவர் ஜங்ஷன் பாக்ஸிலிருந்து ஒயர் இணைத்து நீ…ஈஈஈளமாய் உருவி பிளக்கை சொருகினார். பல இருநூறு வாட்கள் மடமடவென்று உயிர்பெற்றன. அவரா எலெக்ட்ரிக் பில் கட்டப்போகிறார்?

வரது சார். அந்த சோபாவில் சாய்ந்தாற்போல் உட்காருங்க. பக்கத்தில் ஒரு ஸ்டூல் வைச்சு பூங்கொத்து ஒண்ணு வைக்க முடியுமா?” என்று கேட்க, அம்மா ஆறு கால் பாய்ச்சலில் மாதிரிப் பறந்தோடினாள்.

ஃப்ரேம்ல ஒரு இளம் பெண் இருந்தால் எஃபெக்ட் அதிகமா இருக்கும்…’ என்றவன் ’மேடம் நீங்க வாங்களேன்…’ என்றான் ஷாலினியைப் பார்த்து.

சார் உங்களுக்கு இந்த யூ ட்யூப் பதிவேற்றும் ஆசை எப்போது, எப்படித் தோன்றியதுன்னு காஷுவலாய்ப் பேச ஆரம்பிங்க .. கேமரா ரோலிங்..” என்றான்.

இது அவர் தயார் செய்யாத கேள்வி. “போன மாசி மாசம் .. என் அத்தை பேரன் வந்திருந்தபோது…” என்று அபத்தமாய் உளர ஆரம்பித்தார்.

அப்படி இப்படி ஒருவாறு ஃபார்முக்கு வருவதற்கே பத்து நிமிஷமாயிற்று. பிறகு மடமடவென்று உற்சாகம் வந்து பேச ஆரம்பித்துநடுவில் பெண்டாட்டியைத் துணைக்கழைத்துபிறகு ’பரத் இன்னும் வீடியோவில் முகத்தைக் காட்டவில்லை’ என்ற ஞானோதயம் ஏற்படுவதற்குள் பத்து விரலைக் காட்டினார் கேமரா இளைஞர். கவுன்ட் டவுன் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்ததால்.. ஆகவே, நேயர்களேஅன்பர்களேவணக்கம் கூறி வடை பெறுவது.. சேவிடை பெறுவதுசார் இதை நீங்க கொஞ்சம் எடிட் செய்துக்குங்க…” என்று கேமராவைப் பார்த்து உளறி பேட்டியை இனிதே முடித்துக்கொண்டார்.

கட்” என்றான் இளைஞன்.

கிருஷ்ணபரமாத்மா மாதிரி டைரக்டரும் அவரே கேமரா மேனும் அவரே போலும்.

எல்லோர் மனசிலும் ஒரு அப்பாடா எழுந்தது.

புதுமை என்ற சானலை நாங்க பார்த்ததே இல்லையே?” என்றாள் அம்மா.

பார்த்திருக்க முடியாதே” என்றான்.

திடுக்கிட்டனர்.

தீபாவளியன்றுதான் சானலே ரிலீஸ்” என்றான்.

தன் கையிலிருந்த டேப்ஐப் பார்த்த மேட்ரிமோனிக்காரர் துள்ளினார்.

.. எங்கயோ பார்த்திருக்கேனேன்னு யோசித்தேன். நீங்க சுரேஷ்தானே? உங்க பேரன்ட்ஸ் எங்க மேட்ரிமோனியில் பதிஞ்சிருக்காங்களே…” போட்டோவுடன் காண்பித்தார். “பெண்பார்க்கும் படலம் முடிஞ்சாச்சுன்னு சொல்லுங்க…” சிரித்தார்.

அப்பா அகமகிழ்ந்தார். தன் குடும்பத்திற்கேற்ற மாப்பிள்ளை கிடைத்துவிட்டான். சூப்பர் கேமராக்காரன்.

அடுத்த வாரம் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டதன் ஒரே காரணம் சுரேஷின் அம்மா போட்ட கண்டிஷன் நிறைவேறியதுதான். ஏதோ ஒரு சீரியலில் டி.வி. நிகழ்ச்சியில் பார்க்கும் பெண்ணைத்தான் தன் மகனுக்குக் கட்டி வைப்பாளாம் அம்மாக்காரி. அதுபோல் தன் வீட்டிலும் நடக்க வேண்டும் என்று ஆசையாம். சுரேஷ் புது சானலில் சேர்ந்ததால் அவள் கனவும் நனவாகிவிட்டதுஇவன் காதலும் நிறைவேறி விட்டது.

அவன் வீடியோ எடுப்பதாய் உளுஉறுவாக்கட்டிக்கு நடிக்கறான்னுதானே நினைச்சீங்க? அதான் இல்லை. நிஜம்ம்ம்மாவே அவன் நிகழ்ச்சித் தயாரிப்பாளன்தான்.

இப்போதெல்லாம் அவர்கள் யூட்யூப் வீடியோக்கள் போடுவதில்லை. வீட்டுக்கு வரவிருக்கும் மாப்பிள்ளையின் சானல் கௌரவம் கெட்டுப்போகக்கூடாதில்லையா?

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...