spot_img
0,00 INR

No products in the cart.

ரூ.100 க்கு ஆன்லைனில் தங்கநகை சேமிப்பு திட்டம்: பிரபல நகைக்கடைகள் புதுமை!

இந்தியாவில் நகைக்கடை விற்பனையாளர்கள் ஆன்லைனில் குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு தங்கநகை சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 

இதுகுறித்து, 4,000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை பங்குதாரர்களாகக் கொண்ட ஆக்மாண்ட் கோல்ட் நிறுவனத்தின் இயக்குனர் கேதன் கோத்தாரி கூறியதாவது:

 

நாடு தழுவிய கொரோனா ஊரடங்குக்கு பிறகு தங்க நகை விற்பனையில் சரிவு ஏற்பட்டது.அதை ஈடு செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் வழிவகுத்துள்ளது. அந்த வகையில்,டாடா குழுமத்தின் தனிஷ்க், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா, பிசி ஜுவல்லர் மற்றும் செங்கோ கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் போன்ற தங்க நகை விற்பனையாளர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் தங்க மேடைகளுடன் (digital gold platforms) டை-அப் மூலமாகவோ குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு தங்கத்தை சேமிப்பதற்கான திட்டத்தைத் துவங்கியுள்ளனர். அதன்படி,தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோர் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்திற்கு ஈடான தொகையை இந்த நகைக்கடைகளின் ஆன்லைன் திட்டத்தில் முதலீடு செய்தவுடன், வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் அந்த 1 கிராம் தங்கம் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும்.

 

இந்தியாவில் டிஜிட்டல் தங்க விற்பனை புதியதல்ல.ஆனால் பாரம்பரிய நகைக்கடை விற்பனையாளர்கள் மட்டும் தங்கத்தை ஆன்லைனில் விற்பனை செய்வதிலிருந்து விலகி இருந்தனர். ஆனால், கொரோனாவுக்குப் பின் நிறைய நகைக்கடைக்காரர்களின் மனநிலை மாறியுள்லது. அவர்களூம் ஆன்லைனில் நகைகளை விற்பனை செய்வதில் முனைப்புடன் உள்ளனர். ஆகவேதான் இத்திட்டம் துவக்கப் பட்டுள்ளது.

 

-இவ்வாறு அவர் கூறினார்.

தங்கத்தின் தேவை உச்சத்தில் இருக்கும் பண்டிகை காலம் தொடங்கும் போதே நகைக்கடைக்காரர்கள் இந்த சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இணையம் வழியாக வாங்குவதற்கு அதிகமான இந்தியர்கள் ஆர்வமாக இருப்பதால் டிஜிட்டல் கொள்முதல் அதிகரித்து வருகிறது.

 

Other Articles

Stay Connected

263,924FansLike
1,886FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

50 ஆண்டுகள் ஒளிர்ந்த அமர் ஜவான் ஜோதி இன்று அணைக்கப்படுகிறது: காங்கிரஸ் கடும் கண்டனம்!

0
டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ஒளிர்ந்து வரும் அமர் ஜவான் ஜோதியை இன்று அணைத்துவிட்டு, அதை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியுடன் ஐக்கியமாக்க மத்திய அரசு...

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 1 லிருந்து 20-ம் தேதிவரை நடத்தப்படும் என்று, கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன்பு அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக...

முதல்வர் ஸ்டாலின் மீதான 18 அவதூறு வழக்குகள்; சென்னை உயர்நீதிமன்றம் ரத்து!

0
கடந்த அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது போடப்பட்ட 18 அவதூறு வழக்குகளை இன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக...

ஒலியை விட வேகமாக பறக்கும் பிரமோஸ் ஏவுகணை: இந்தியாவின் பரிசோதனை வெற்றி!

0
ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஏவு தளத்திலிருந்து பரிசோதனை முயர்ஸியாக செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக பாய்ந்து இலக்கை அழித்து வெற்றியடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தெரிவித்ததாவது: இந்தியாவில்...

216 – அடி உயரத்தில் ஶ்ரீராமானுஜர் சிலை: ஐதராபாத்தில் பிரதமர் மோடி பிப்ரவரி 5-ல் திறந்து வைப்பு!

0
தமிழகத்தில் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ குருவன ஶ்ரீ ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ஆம் தேதியன்று திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சமத்துவத்துக்கான சிலை...