ரூ.26 கோடி மோசடி: பிரபல நகைக்கடையின் அனைத்து கிளைகளும் முடக்கம்!

ரூ.26 கோடி மோசடி: பிரபல நகைக்கடையின் அனைத்து கிளைகளும் முடக்கம்!

தமிழகத்தில் சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல இடங்களில் பிரபலமாக இயங்கி வந்தது கே.எப்.ஜே (கேரளா ஃபேஷன் ஜுவல்லரி) எனப்படும் நகைக்கடை.

இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்தது. ஆனால், நகைச்சீட்டு முதிர்வு தேதி முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு பணம் அல்லது அதற்கீடான தங்கம் திருப்பித் தரப்படவில்லை என வாடிகையாளர்கள் பலரும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்நிலையில் இந்த புகார்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அநத விசாரணையில், அநத நகைக்கடை நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பல்வேறு தங்க நகை திட்டங்கள் மூலம் சுமார் 1,689 வாடிக்கையாளர்களிடமிருந்து 25.78 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குநர்களான சகோதரர்கள் சுஜித் செரியன் மற்றும் சுனில் செரியன் ஆகியோரை பொருளாதார காவல் துறையினர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களூக்கு ஜாமீன் மறூக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த நகைக்கடை மீது மேலும் பல புகார்கள் காவல் துறைக்கு வந்துகொண்டிருப்பதால, அந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் தற்காலிமாக மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளன..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com