ரூ. 500-க்கு ஜியோ ஸ்மார்ட் போன்: செப்டம்பர் 10 முதல் அறிமுகம்!

ரூ. 500-க்கு ஜியோ ஸ்மார்ட் போன்: செப்டம்பர் 10 முதல் அறிமுகம்!
Published on

இந்தியாவில் ரூ.500-க்கு ஜியோ நிறுவனம்  4-ஜி ஸ்மார்ட் போன்களை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விறபனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த 2016-ம் ஆண்டு  ஜியோ சேவையை அறிமுகப்படுத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றார். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மிகக் குறிந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விலைகுறைவான ஸ்மார்ட் போன்களை வருகிற செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நாடு முழுவதும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் மூலமாக இந்தியாவில் இருக்கக்கூடிய 300 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ தளத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பதே முகேஷ் அம்பானியின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன்களில் இந்தியாவிற்கான பிரத்யேகமான ஆண்ட்ராய்டு மென்பொருள் மறுசீரமைப்பு செய்து, உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 500 முதல் 700 ரூபாய் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிக அளவில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com