0,00 INR

No products in the cart.

வங்கி லாக்கர் – வருங்கால விதிகள்

விழிப்புணர்வு!
– ஜி.எஸ்.எஸ்.

வீட்டில் பாதுகாப்பு குறைவு என்றுதான் வங்கி லாக்கர்களில் விலை உயர்ந்த பொருட்களை வைக்கிறோம். ஆனால், தீ விபத்து, பூகம்பம், திருட்டு போன்ற ஏதோ ஒரு காரணத்தால் நாம் லாக்கரில் வைத்துள்ள பொருள்களை இழந்துவிட்டால் அதற்கான நஷ்ட ஈட்டை வங்கி வழங்குமா? ஒரு ரூபாய் கூட வழங்காது என்பதுதான் இப்போது உள்ள நடைமுறை.

ஏனென்றால், அந்த லாக்கர் அறையை, வங்கி நமக்குக் குத்தகைக்கு விடுகிறது. அவ்வளவுதான். சொல்லப்போனால், நாம் என்ன பொருட்களை லாக்கரில் வைக்கிறோம் என்பதையே வங்கிக்குத் தெரிவிப்பதில்லை (அதைத் தெரிவித்தாலும் வங்கி அதை ஏற்காது). உங்கள் சொந்த வீட்டை யாருக்காவது வாடகைக்கு விட்டால், அங்கு நடைபெறும் திருட்டுக்கு நீங்கள் நஷ்ட ஈடு தருவீர்களா? இந்த வாதத்தைதான் வங்கிகள் கூறிவந்தன.

இந்த நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வரவிருக்கிறது. நிலநடுக்கம், பெருவெள்ளம், புயல் போன்றவற்றால் லாக்கர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு வங்கி பொறுப்பேற்காதுதான் (இவற்றை சட்டத்தில், `ஆக்ட் ஆஃப் காட்’ – கடவுளின் செயல் என்பார்கள்). ஆனால், தீ விபத்து, திருட்டு, கட்டடம் இடிந்து விழுதல் போன்ற காரணங்கள் அந்த வங்கியின் அலட்சியத்தால் ஏற்பட்டது என்றால், வங்கி உங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். ஆனால், இது லாக்கரில் நீங்கள் வைத்த பொருளின் மதிப்புக்குத் தகுந்த மாதிரி இருக்காது. லாக்கருக்கான ஆண்டு வாடகை எவ்வளவோ, அதைப்போல நூறு மடங்கு கிடைக்கும். ஆனால், பலரும் லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) மதிப்புள்ள பொருள்களை லாக்கர்களில் வைத்திருப்பார்கள். ஆக, அவர்களுக்குக் கிடைக்கும் நஷ்ட ஈடு மிகக் குறைவுதான். என்றாலும், பொன் வைக்கும் இடத்தில் (காதில்?) பூ வைக்கிறார்கள்.

2021 பிப்ரவரியில் ஒரு வங்கி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இப்படி கருத்து தெரிவித்தது. ‘வாடிக்கையாளர்கள் மீது தங்களது ஒருதலைப்பட்சமான அநீதியான விதிகளைத் திணிக்கும் உரிமை வங்கிகளுக்கு இருக்கக்கூடாது. வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, வங்கிகளுக்குத் தெளிவான வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இதைத் தொடர்ந்துதான் வரும் ஆண்டு தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றன புதிய விதிகள். வங்கி லாக்கர்கள் தொடர்பான புதிய சட்டங்களில் வேறு என்ன மாற்றங்கள் என்று பார்ப்போம்.

லாக்கரில் சட்டவிரோதமான மற்றும் அபாயகரமான பொருட்களை வைக்கக்கூடாது. இந்த உறுதிமொழியை சில வங்கிகள் வாடிக்கையாளருடனான ஒப்பந்தத்தில் இடம்பெறச் செய்திருந்தனர். இனி, இந்த உறுதிமொழி எல்லா வங்கிகளுக்கும் கட்டாயமாக்கப்படும்.

எப்போதுமே வங்கி லாக்கர்களுக்கான தேவை இருந்துகொண்டே வருகிறது. ‘எங்கள் வங்கியில் லாக்கர் தேவை என்றால், பெரும் தொகையை எங்களிடம் வைப்பு நிதியாக வைக்க வேண்டும்’ என்று வங்கிகள் வலியுறுத்துவதுண்டு. ஆனால், இனி அது நடக்காது. லாக்கரின் மூன்று வருட வாடகைத் தொகையை வைப்பு நிதியாக வைத்திருந்தால் போதுமானது.

இப்படிக் கூறினாலும் வங்கியின் நடவடிக்கையை யார் கண்காணிப்பது? எனவே, லாக்கர் கேட்டு வரும் விண்ணப்பங்களை, அவை வந்து சேரும் தேதிக்கேற்ப வங்கி வரிசைப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர் விண்ணப்பத்திற்கான எண்ணையும் அவருக்குத் தெரிவித்துவிட வேண்டும். அதே வரிசையில்தான் லாக்கர்களை அளிக்க வேண்டும்.

வங்கிகள் தங்களின் எந்தெந்தக் கிளைகளில் லாக்கர்கள் காலியாக உள்ளன என்பதைத் தங்கள் வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட வேண்டும். இதன் காரணமாக ஒரே கிளையை மட்டுமே வாடிக்கையாளர் அணுகுவது தவிர்க்கப்படுகிறது. (சொல்லப்போனால், தம்மிடம் வாடிக்கையாளராக இல்லாதவர்களுக்குக் கூட வங்கிகள் லாக்கர் அளிக்கலாம் என்கிறது புதிய விதி.)

தொடர்ந்து மூன்று வருடங்கள் வாடிக்கையாளர், லாக்கருக்கான வாடகையைக் கட்டாமல் இருந்தால் வங்கிகள் லாக்கரை உடைக்கலாம். ஆனால், கெளரவமான சாட்சிகளை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொருட்களின் பட்டியலைத் தயார் செய்து, அதில் பார்வையாளர்களின் கையெழுத்தைப் பெற வேண்டும்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...