வாகனச் சத்தம் இனி இசையாக ஒலிக்கும்: மத்திய அமைச்சர் அசத்தல் திட்டம்!

வாகனச் சத்தம் இனி இசையாக ஒலிக்கும்: மத்திய அமைச்சர் அசத்தல் திட்டம்!

வாகனங்களில் கர்ணகடூரமான ஹார்ன் சத்தங்களுக்குப் பதிலாக இந்திய இசை கருவிகளின் இனிய இசையை ஒலிப்பான் சத்தமாக பயன்படுத்தப்பட வேண்டும் என புதிய சட்டம் கொண்டுவரவிருப்பதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நெடுஞ்சாலை ஒன்றை திறந்து வைத்து பேசிய நிதின் கட்கரி தெரிவித்ததவாது:

இந்திய வாகனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் ஹாரன்களுக்கு பதிலாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் இசையை பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆம்புலன்சுகள் மற்றும் காவல் துறையினரால் பயன்படுத்தப்படும் சைரன்களின் சத்தத்தையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்களின் வாகனங்கள் கடந்து செல்லும் போது முழு அளவில் சைரன் ஒலிக்கப்படுவதால் மக்கள் எரிச்சல் அடைகின்றனர். இவை காதுகளுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. வாகனங்களின் ஹாரன் சத்தம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறோம். அனைத்து வாகனங்களின் ஹார்ன் சத்தமும் புல்லாங்குழல், தபேலா, மவுத்ஆர்கன், ஹார்மோனியம் போன்ற இந்திய இசை கருவிகளின் இசையாக மட்டுமே இருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும்.

-இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்துகள் 1.5 லட்சம் மக்களின் உயிரைப் பறிக்கிறது. லட்சக்கணக்கானோர் காயமடைகிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் சாலை விபத்துகளை குறைத்த தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தமிழ்நாடு அரசு 50% குறைத்துள்ளது. மகாராஷ்டிராவில் இதை இன்னும் எட்டமுடியவில்லை. விபத்துகளின் போது உயிரிழப்பு வீதம் என்பது மகாராஷ்டிராவில் அதிகமாக இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com