0,00 INR

No products in the cart.

 வாசகனை மனதில் வைத்து எழுதினால்…

முகநூல் பக்கம்

கா.சு. வேலாயுதன்

வாசிப்பு, பதிப்பு உலகில் பொன்முட்டையிடும் வாத்தாக இன்ன மும் விளங்கும் கல்கியின் நூல்கள் 1999-ல் அரசுடைமையாக்கப்பட்டது. அவரின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் பரிவுத்தொகை  வழங்கப்பட்டது.

அப்போது கல்கியின் நிரந்தர பதிப்பாளரான வானதியிடம் கல்கி வாரிசுகள் “உங்களிடம் விற்பனையாகாத கல்கியின் நூல்கள் எவ்வளவு இருக்கின்றன? கல்கி நூல்கள் நாட்டுடைமையாவதால் ஒவ்வொரு பதிப்பகமும் தன் இஷ்டம் போல் அவர் புத்தகங்களை அச்சிட்டு பணம் பார்த்துவிடும். நியாயப்படி அதில் பெருநஷ்டம் உங்களுக்குத்தான். எனவே இந்தப் பரிவுத்தொகை உங்களுக்கே சேரும்” என்று தெரிவிக்க, பதிப்பாளரோ, “இல்லையில்லை. அவரின் நூல்களின் முழு உரிமை வாரிசுகளான உங்களுக்குத்தான். நீங்கள் வைத்துக்கொள்வதே சரி” என்று கூற கல்கி வாரிசுகள் அதை ஏற்கவில்லையாம்.

பதிலாக, “பரிவுத்தொகை 20 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டித் தொகைக்கு ஈடாக வானதி அச்சிடும் கல்கியின் நூல்களை விரும்பும் பள்ளி, கல்லுரிகளுக்கு வழங்கிடவும், அந்தத் தொகையை வானதி எடுத்துக்கொண்டு, அதற்கான பில்களை கல்கிக்கு அனுப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்துள்ளனர்.

கா.சு.வேலாயுதன்

இன்றுவரை அதுதான் நடந்து வருவதாக வானதியின் பதிப்பாசிரி யரே என்னிடம் தெரிவித்தார். ஒரு எழுத்தாளரும், பதிப்பாளரும் இப்படி ஒரு தார்மீக வணிக உறவு முறையுடன் செயல்பட்டது நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை.

பிரதிபலன் பாராமல் வாசகர்களை மனதில் வைத்து இதயசுத்தி யுடன் எழுதப்படும் எழுத்தும், அதே மனதுடன் வாசகர்களை மனதில் வைத்தே பதிப்பிக்கப்படும் புத்தகங்களும் இப்படி நீடு வாழுமோ என்னவோ? எழுத்தும், எழுதுகோலும் தெய்வம் என்பது இதுதானோ?

(கே.கே.மகேஷ் பதிவிட்ட ‘நூல்கள் நாட்டுடைமை’ குறித்த பதிவுக்கு நானிட்ட பின்னூட்டத்திலிருந்து)

 

 

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....