0,00 INR

No products in the cart.

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்

விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்களேஜோசியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா?     -சரவணன்,வேலூர்

ஜோதிடக்கலை வல்லுநர் திருமதி வேதா கோபாலன் அளிக்கும் பதில் 

நம்முடைய விதி என்ன என்பதை  நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும் சரவணன் ஜி.

பிறந்த நேரம் முதலான சரியான விவரங்கள் கொடுக்கப்பட்டு, உங்களுடைய ஜாதகம் மிகச் சரியான முறையில் கணிக்கப்பட்டு, ஜோதிடரும் திறமைசாலியாக இருந்து, துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லப்பட்டால் கட்டாயம் உங்கள் விதியை நீங்கள் தேதி வாரியாக அறிந்துகொள்ளுதல் சாத்தியமே.

ஜோதிட கட்டங்கள் மற்றும் கிரகங்களின் அமைப்பை வைத்து உங்கள் குணாதிசயம், உங்கள் குடும்பம்.. மனைவி மக்கள்.. வரவிருக்கும் அதிர்ஷ்டங்கள், ஆபத்துக்கள், ஆரோக்யம், கல்வி, உத்யோகம், வருமானம், லாபம், விரயம், விபத்து, நோய் என்ற பல விஷயங்களைக் கட்டாயம் அறிய முடியும்.

இப்போதும் லாப நோக்கைக் கணக்கில் கொள்ளாமல் மனச்சாட்சியுடன் செயல்படும் ஜோதிடர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். திறமைவாய்ந்த ஜோதிடரால் உங்களின் எந்தக் கேள்விக்கும் விடை செல்ல முடியும். உங்களின் எந்தச் சந்தேகத்தையும் தீர்க்கவும் முடியும்.

உங்களின் முதல் கேள்விக்கு இப்போது வருகிறேன்.

விதியை மதியால் வெல்லவும் செய்யலாம். அப்படிச் செய்ய முடியும் என்ற விதி இருந்தால்!

விதியை வெல்ல வேண்டும் என்று பகவான் ஸ்ரீ ரமணரும் ராமகிருஷ்ணரும் மகா பெரியவாளும் நினைத்திருந்தால் சுலபமாக செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. காரணம், விதியை அனுபவித்துத் தீர்ப்பது ஒன்றே அதைக் கடப்பதற்கான வழி என்று நினைத்தார்கள்; உணர்ந்திருந்தார்கள்.

ஆனால் நம் போன்ற சாதாரணர்களுக்கு விதியின் தகிப்பைத் தாங்குவது அத்தனை சுலபமான விஷயம் அல்ல.

அதற்காகத்தான் ஜோதிடத்தின் துணையை நாடுகிறோம். நாம் பிறந்த கணத்தில் கிரகங்கள் இருந்த நிலைமையும் நவ கோள்களின் சுழற்சிப்படி இப்போதைய நிலையும் எவ்வாறு உள்ளன என்று துல்லியமாகக் கணக்கிட்டால் உங்கள் கேள்விக்கான பதில் “கட்டாயம் முடியும்” என்பதே.

ஒன்றை நாம் உறுதியாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வெயில் காய்வதைப் போலவும் மழை பொழிவதைப் போலவும்தான் விதி தன் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்துகொண்டே போகிறது.

வெயிலையும் மழையையும் நிறுத்த முடியாததுபோல் விதியின் செயல்களையும் மாற்றவே முடியாது.

ஆனால் ஜோதிடம் எந்த வகையில் நமக்குத் துணை புரிகிறது? இரவில், இருளில், திசை தெரியாமல் நடந்து போகும் ஒருவரின் கையில் உள்ள விளக்கைப்போல் உதவுகிறது ஜோதிடம்.

எங்கே பள்ளம் உள்ளது. எங்கே கருங்கல் இடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அப்போது சற்று நிதானிப்போம். அடி பலமாக இருக்காது. மனமும் தயாராகிவிடும்.

விதியைத் தெரிந்துகொள்வதால் இன்னொரு பயனும் உள்ளது. கிரக நிலைமைக்கேற்ற பரிகாரங்கள் செய்ய முடியும். ஒவ்வொரு கிரகத்துக்கும் அதிதேவதைகள் உண்டு. அந்த தெய்வங்களுக்கு உரிய பரிகாரங்களை ஜோதிட வல்லுனரின் ஆலோசனைப்படியோ நாடி ஜோதிடத்தின் துணை கொண்டோ செய்வது நலம் அளிக்கும்.

அப்படிச் செய்தால் விதியை வென்று விடமுடியுமா?

அப்போதும் முடியாது!

பின் எதற்காகத் தெரிந்துகொள்ள வேண்டும்? அதது நடக்கிறபோது நடந்துவிட்டுப்போகட்டுமே? பாலத்தை நெருங்கும்போது கடந்துவிட்டுப்போகலாமே? பரிகாரம் செய்வதால் என்ன பலன்?

சாலை வளைவோ ரயில்வே கேட்- டோ.. வருமுன் சாலையில் போர்ட் வைக்கிறார்கள் அல்லவா? எனில் நிதானிப்போம்தானே? அதுபோல்தான் இதுவும்.

கடுமையான வெயில் வந்தே தீரும்.. மழை பொழிந்தே தீரும்.. அதை மாற்ற முடியாது என்றுதான் சொன்னேனே தவிர.. நம்மை அதிலிருந்த பாதுகாக்க வழியேயில்லை என்று சொல்லவில்லை.

ஆம்..

குடையாகவும் மழைக் கோட்டாகவும் பயன்படுபவை பரிகாரங்கள்.

முழுக்க நனைய மாட்டீர்கள். வெயிலில் மண்டை பிளக்காமல் காத்துக்கொள்ளலாம். விதியின் பாதிப்பு கடுமையான தாக்குதலாக நமக்கு இருக்காது.

ஒருவருக்கு விபத்து நேரும் என்று கிரக நிலைகள் கூறுவதைச் சொல்லி எச்சரிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

(வாகனங்கள் ஓட்டும்போதும் எந்திரங்கள் இயக்கும்போதும் கவனமாக இருங்கள் என்று ராசிபலன்களில் படித்திருப்பீர்களே). அப்போதும் விபத்து நடக்கக்கூடும். அப்போதும் அடிபடக்கூடும். பதினைந்தாவது படியிலிருந்து விழுவது என்பது வேறு, முதல் படியிலிருந்து விழுவது வேறல்லவா? சிராய்ப்போடு தப்பிக்கலாம்.

அருமையான, சுவாரஸ்யமான கேள்வி கேட்டமைக்கு நன்றி.
குட் லக்.

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?

0
வாசகர் கேள்வியும் - வல்லுநர் பதிலும்   உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?       - சந்திர மோகன், வேலூர். வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார் பொதுநல மருத்துவர்  கு. கணேசன்   உடற்பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்குச் சரியான காரணங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை....

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்

தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்  வங்கிகளில் டெபாஸிட்களுக்கு வட்டி விகிதங்களை  குறைத்துக் கொண்டே  இருக்கிறார்களே ஏன்? அரசுக்கு மக்கள் வங்கிகளில் சேமிப்பை ஊக்குவிக்க  விரும்பவில்லையா? - சுஹைல் ரஹ்மான், திருச்சி  வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார்    ...

மானியம் மட்டும் ஏன் மாதந்தோறும் குறைந்துக்கொண்டே வருகிறது?

0
வாசகர் கேள்வியும் - வல்லுநர் பதிலும்    தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால்  மானியம் மட்டும் ஏன் மாதந்தோறும் குறைந்துக் கொண்டே வருகிறது? - நாராயணி, வேலூர்   வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார் நிதி ஆலோசகர் சித்தார்த்தன்...

கடைசிப் பக்கம்

1
தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! -சுஜாதா தேசிகன் கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில்...

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

0
முகநூல் பக்கம் இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்? ”என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்” – என்று...