spot_img
0,00 INR

No products in the cart.

வானவில்!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

தெரியுமா?

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக நடந்த அந்நிய துணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ்த் துறவி, முக்தி அடைந்து விட்ட காஞ்சி பரமாச்சாரியார் சுவாமிகள்தான். அவர் தமது சீடர்களை அழைத்து, ’அந்நிய துணி பகிஷ்கரிப்பை நடத்துங்கள்’ என்று கூறிய செய்தி நம்மில் பலருக்கும் தெரியாது.

– உமா ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி

ரசம் ருசிக்க…

* ரசத்தை இறக்குமுன், அதில் ஒரு இஞ்சி முறப்பா போட்டால் ரசம் ருசிக்கும்.

* ரசம் கொதிக்கும்போது, அதில் நார்த்தங்காய் ஊறுகாய் துண்டு ஒன்று போட்டால் தனிச்சுவைதான்.

* ரசத்தை பரிமாறுமுன், அதில் சிறிது ஆரஞ்சு ஜூஸ் விட்டால் ரசம் மணக்கும்.

* பூண்டை பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கி ரசத்தில் சேர்த்தால் செம டேஸ்ட்.

– என்.கோமதி, நெல்லை

சர்க்கரை நோய்க்கு மருந்து!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பன்னீர் பூவை வாங்கி வந்து, இரவில் ஒரு டம்ளர் வெந்நீரில் ஐந்து பூக்களை ஊறவைத்து, காலையில் பாதியாக கொதிக்க வைத்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவிலேயே சர்க்கரை நோய் கட்டுப்படும்.

– அமலா ஜூடு, கோடம்பாக்கம்

சிவப்பழகு வேண்டுமா?

பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத்தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியது இதுதான்… கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் ஒன்று, உலர்ந்த திராட்சை பழம் பத்து இவற்றை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் கலவையுடன், அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து, அதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது முகத்தை பளபளப்பாக மாற்றி விடும்.

– கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

யம தீபம்!

மகாபரணி என்பது புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் ஆகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்மராஜாவின் நட்சத்திரம். இந்நாளில் இறந்த நமது முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் செய்வது மற்றும் யம தீபம் ஏற்றுவதால், யமதர்மராஜன் மனம் மகிழ்ந்து, நமது முன்னோர்களின் வேதனையைக் குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பதாக நம்பப்படுகிறது.

மகாபரணியிலும், மகாளய பட்சத்திலும், தீபாவளிக்கு முந்தைய தினமும் யம தீபம் ஏற்றுவது நமது மரபு. மரண பயம் நீங்கவே இந்த யம தீபம் ஏற்றப்படுகிறது. வீட்டின் உயரமான பகுதியில் தெற்கு திசை நோக்கி இந்த தீபம் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லை எனில், வழக்கமாக சுவாமிக்கு விளக்கேற்றும்போது தனியே ஒரு அகல் தீபம் ஏற்றி வழிபட, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். இந்த தீபத்தை ஆலயங்களிலும் ஏற்றலாம்.

மயிலாடுதுறை அருகில், ஸ்ரீவாஞ்சியத்தில் க்ஷேத்ர பாலகராக தனிச் சன்னிதியில் உள்ள யமதர்மராஜாவின் சன்னிதியில் விளக்கேற்றலாம். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னிதியிலும் யம தீபம் ஏற்றுவது சிறப்பு.

தயிர் இட்லி

மினி இட்லி – 20, தேங்காய்த் துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – 2, முந்திரிப்பருப்பு – 4, கொத்தமல்லி – சிறிது

மேலே குறிப்பிட்ட (இட்லி தவிர) அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதிகம் புளிப்பில்லாத தயிரில் கலந்து தேவையான உப்பு சேர்த்து விடவும். இதில் மினி இட்லிகளை ஐந்து நிமிடம் ஊறவிட்டு பின் பரிமாறலாம். மினி இட்லி இல்லை என்றால், நார்மல் இட்லியை நான்கு துண்டுகளாக்கி தயிரில் போடலாம். பரிமாறுவதற்கு முன் சர்விங் பவுலில் தயிர் இட்லிகளைப் போட்டு மேலே சிறிது காராபூந்தி, காரட் துருவல், கொத்தமல்லி பொடியாக நறுக்கித் தூவி பரிமாற, சூப்பரான சுவையில் இருக்கும். தயிர் வடை போன்று மாலை நேர டிபனாகவோ அல்லது இரவு நேர உணவாகவோ இதை எடுத்துக்கொள்ளலாம்.

பழமொழியின் அர்த்தம்!

`அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்.’

இதன் பொருள் :

`அடி’ என்பது இறைவனின் பாதம். உடன்பிறந்த அண்ணன், தம்பி உதவாவிட்டாலும் கடவுளின் பாதம் பற்றியவர்களுக்கு அருளும், பொருளும் கொடுத்து உதவும் என்பதே இதன் பொருள்.

வெந்நீர் அபிஷேகம்!

திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருளும் ஸ்ரீ கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை நடைபெறும். சிவராத்திரி அன்று விசேஷ பூஜைகள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு போன்ற நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

– கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி

முறமும் சல்லடையும்!

முறம், சல்லடை இரண்டுமே தேவையானதை மற்றும் தேவையற்றதை தனித்தனியாகப் பிரிப்பதற்கு உபயோகப்படுபவை! முறம், தேவையானதை தங்கச் செய்து, தேவையற்றதை வெளியே தள்ளும். ஆனால் சல்லடை, தேவையானதை வெளித்தள்ளி தேவையற்றதை தங்கச் செய்யும். நமது மனதை முறம் போல் வைத்துக்கொண்டு, தேவையானதை உள்ளே வைத்து, தேவையற்றதை வெளியே தள்ளுவோம்!

– செளமியா சுப்ரமணியன், சென்னை

படித்ததில் ரசித்தது

நீரின் அருமை பயிரில் தெரியும்.

நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

பணத்தின் அருமை வறுமையில் தெரியும்.

தாயின் அருமை அன்பினில் தெரியும்.

தந்தையின் அருமை அறிவினில் தெரியும்.

நண்பனின் அருமை உதவியில் தெரியும்.

அண்ணனின் அருமை கனிவினில் தெரியும்.

அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்.

தம்பியின் அருமை தயவில் தெரியும்.

தங்கையின் அருமை விருந்தில் தெரியும்.

மகனின் அருமை மரியாதையில் தெரியும்.

மகளின் அருமை சுமையில் தெரியும்.

ஆனால், மனைவியின் அருமை அனைத்திலுமே தெரியும்.

இது… அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்கும் புரியும்!

– சுந்தரிகாந்தி, பூந்தமல்லி

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,160SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

வாசகர் ஜமாய்க்கிறாங்க…

0
பை ஒன் கெட் ஒன் ஆஃபர் கோபத்தை வாங்கினால் ரத்தக்கொதிப்பு இலவசம். பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம். வெறுப்பை வாங்கினால் பகை இலவசம். கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம். இது தேவையா? அல்லது நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள் இலவசம். உடற்பயிற்சியை வாங்கினால் ஆரோக்கியம் இலவசம். அமைதியை...

ஜோக்ஸ்!

0
ஓவியம் : பிள்ளை “கடைக்காரரே, பத்து ரூபாய்க்கு தக்காளியும் முருங்கைக்காயும் கொடுங்க!” “இந்தாங்கம்மா... கால் தக்காளியும், ஒரு துண்டு முருங்கைக்காயும்!” - ஆர்.மகாதேவன், திருநெல்வேலி ....................................................................................... “என்ன சார்... சிலிண்டரோட என்னைப் பார்க்க வந்திருக்கீங்க... என்ன பிராப்ளம்?” “கேஸ் பிராப்ளம் வந்தா...

வங்கி முதலீடு – தனியார் நிறுவன முதலீடு: எது சிறந்தது?

0
கருத்து யுத்தம்! முகநூல் வாசகியர்களின் பதிவுகள்! வங்கி முதலீடே சிறந்தது! அரசு வங்கி முதலீடு மட்டுமே சிறந்தது. தனியார் நிறுவனங்களுகளிடம் ஆரம்ப காலத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் விதத்தில் செயல்பட்டு போகப்போக ஷேர் மார்க்கெட் முதலீட்டில் பங்கு போட்டு...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

0
வெற்றிலை ரசம் தேவையானவை : வெற்றிலை - 6, புளிச்சாறு - 2ஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெல்லத் தூள் - ஒரு ஸ்பூன், தாளிக்க - நெய், கடுகு, சீரகம், பெருங்காயம். செய்முறை :...

தைப்பூச சிறப்புகள்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க... பொதுவாக, பெளர்ணமி திருநாள் தெய்வ வழிபாட்டிற்கும், அமாவாசை தினங்கள் பிதுர் வழிபாட்டிற்கும் உரியது. பெளர்ணமியோடு சேர்ந்து வரும் சில சிறப்பு நட்சத்திரங்கள் மகிமை பெற்றவையாகும். இப்படிப் பெளர்ணமியோடு சேர்ந்து வரும் மாசி...