0,00 INR

No products in the cart.

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

பாரதி நினைவு நாள் நூற்றாண்டு
சாந்தி ஜெகத்ரட்சகன்

செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன. என்ன இது? இன்று இந்த நேரத்தில் பாரதியின் பாடல்? அதுவும் சேர்ந்திசையாக 50 குழந்தைகள் சுருதி பிசகாமல் பாடுகிறார்கள் என்று பயணத்துக்கு அங்கு காத்திருந்தவர்களின் கண்களில் ஆச்சர்யம் மின்னியது. அருகில் வந்து விசாரித்தவர்களுக்குச் சொன்னதை இப்போது உங்களுக்கும் சொல்லுகிறேன்.

இந்த ஆண்டு புதிய அறம் பாட வந்த அறிஞன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன் என்றெல்லாம் போற்றப்படும் உலக மகாகவி சுப்பிரமணிய பாரதி மறைந்த நாளின் நூற்றாண்டு. ஆண்டுதோறும் பாரதியின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண் டாட சென்னை வானவில் பண்பாட்டு மையம் மகாகவிக்குப் புகழஞ் சலி செலுத்தும்விதமாக `பாரதி நூற்றாண்டு நினைவுநாள் நிகழ்ச்சி கள்` என்று வடிவமைத்து நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தினுள்ளே இருக்கும் அரங்கில் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளப்போகும் குழந்தை கள் இவர்கள். இந்த விழாவிற்காகவே பயிற்சி எடுத்தவர்கள். விமானத்தில் ஏற அழைப்பு வரும் வரை, இருக்கும் நேரத்தில் ஒரு ஒத்திகை பார்க்கிறார்கள்.
செப்டெம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு,க.ஸ்டா லின் மகாகவி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சிகளை பாரதி இல்லத்தில் `பாரதி சுடர்` ஏற்றித் தொடங்கி வைத்தார். ஏற்றிய பாரதி சுடரை தமிழ்நாடு முதலமைச்சர் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் வழக்கறிஞர் வானவில் கே.ரவியிடம் வழங்கினார் .

இந்த நிகழ்ச்சிகளின் ஒரு முக்கிய அம்சமாக, நமது பாரத தேசத்திற்கு ஒரு கொடையாக வானவில் பண்பாட்டு மையம் வழங்குவது மகாகவி சுப்ரமணிய பாரதியின் `செப்புமொழி பதினெட் டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்` என்ற பாரதியின் அமரவரி, தமிழிலும் பதினெட்டு மொழிகளிலும் ஒலிக்கும் இசைப் பேழையாகும். இந்த மகா வாக்கியத்தை தமிழ் தவிர இன்னும் பதினெட்டு மொழிகளில் அந்தந்த மொழி வல்லுநர்களால், குறிப்பாக, சில மொழிகளில் `சாகித்ய அகாடெமி விருது` பெற்ற ஆற்றலாளர் களால், கவிதையாகவே மொழிபெயர்க்கப்பட்டு, அவ்வரிகளுக்கு அந்தந்த மொழிகளின் மண் வாசனைத் தூவலோடும் துள்ளலோடும் அருண் பிரகாஷ் இசையமைக்க, அந்தந்த மொழியினர் பாடுவது போல அனுபவித்துக் குரலினிமையுடன் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கிறார். `செப்புமொழி பதினெட்டுடையாள்` என்னும் இவ்விசைப்பேழையை அருண் பிரகாஷ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஆகியோரை தமிழக முதல்வர் கௌரவித்து நிகழ்ச்சியில் மகாகவி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டுத் தொடக்கவுரை ஆற்றினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வழங்கிய பாரதி சுடரை வானவில் பண்பாடு மைய நிறுவனர் வழக்கறிஞர் வானவில் கே.ரவி மற்றும் வானவில் பண்பாட்டு மைய உறுப்பினர்களும், இசை, நடனக் கலைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நமது தேசத் தலைநகர் தில்லிக்கு ஏந்திச் சென்றனர்.

செப்டெம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை தில்லியில் நாடாளு மன்ற வளாகத்தில் `பாராளுமன்றத்தில் பாரதி` என்னும் தலைப்பில் பாரதி நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மத்திய அரசின் பண்பாட்டுத் துறையும், அவ்வமைப்பின் அங்கமான தென்னக பண்பாடு மையமும், தஞ்சாவூர், இந்திரா காந்தி தேசியக் கலை மையம், தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து வானவில் பண்பாட்டு மையம் நடத்தியது. இம்மாபெரும் நிகழ்ச்சி யில் நமது தேசத்திலுள்ள மக்களின் சார்பில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு மகாகவி பாரதிக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த நிகழ்ச்சி யில் பேசும்போது, “மகாகவி பாரதியார் சிறந்த தேச பக்தர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக ஆர்வலர், சீர்திருத்தவாதி எனப் பன்முக ஆளுமை கொண்டவர்” என்று புகழாரம் சூட்டினார்.

“இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய மேதையான மகாகவி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்கு வகித்தவர். அவரது எழுத்தில் புதிய வடிவங்கள், வெளிப்பாடுகள், எளிமையான வார்த்தைகள், வட்டார மொழிப் பாடல்கள், கவிதைகள், தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது” என்று அவர் கூறினார்.
“பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீ அரவிந்தர் போன்ற தேசியத் தலைவர் களுடன் பாரதி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். காலனித்துவ ஆட்சியின் இருண்ட நாட்களில் நமது நாட்டைச் சூழ்ந்திருந்த இருளை தேசியவாதம் மூலம் அகற்ற தனது சக்தி வாய்ந்த வரிகளுடன் சூரியனைப் போல் மகாகவி எழுந்தார்” என்று எழுச்சி உரையாற்றினார்.

“பெல்ஜியத்தின் வீழ்ச்சி, ரஷ்ய புரட்சி, மாஜினியின் வாழ்க்கை, ஃபிஜியில் பெண்களின் அவலநிலை – இந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர் மூலமாகவே தமிழகத்துக்கு முதலில் தெரியவந்தது. அவர் விடுதலைக்காகப் போராடி பதினோரு ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கியிருந்த புதுச்சேரி பாரதியின் இல்லத்தில் நுழைந்தபோது நான் உணர்ச்சியில் மூழ்கினேன். வறுமை, கல்வியறிவின்மை, பசி, பாகுபாடு இல்லாத இந்தியாவுக்காக அந்த மகாகவி கூறிய ‘நல்ல காலம் வருது’ பாடலை நினைவுகொள்ள வேண்டும்” என்றும் குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற ஊக்கமும், உறு துணையும் வழங்கிய மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள், பண்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு பேசினார் பாரதிக்கு புகழஞ்சலி செலுத்தினார். வானவில் ரவி சென்னையிலிருந்து ஏந்திவந்த பாரதிச்சுடரை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்.

விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங் கய்யா நாயுடு `பாரதியின் மரபுச்சுடர்` பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதிக்குப் பதக்கம் அணிவித்துப் பாராட்டுப் பாத்திரம்‌ வழங்கிப் போற்றினார். பதினெட்டு மொழிகளில் உருவான `செப்பு மொழி பதினெட்டுடையாள்` இசைப்பேழைக்கு இசையமைத்த அருண் பிரகாஷூம், அந்தந்த மொழி வல்லுநர்களிடமிருந்து கவி வரிகளின் மொழிபெயர்ப்பைப் பெற்று இவ்விசைப்பேழை உருவாக ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட பன்மொழிப் புலவர் முனைவர் எழில்வேந்தனும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரால் கௌரவிக்கப்பட்டனர்.

பிறகு `பாரதி யார்` என்ற நாடகத்தில் பாரதியாகவே வாழ்ந்து காட்டிய இசைக்கவி ரமணன் அந்த மேடையில் யோகசித்தி என்ற ஒரு சிறிய பகுதியை அந்த நாடகத்தில் இருந்து மேடையில் நிகழ்த்திக் காட்டினார். அவரை குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கைய நாயுடு கௌரவம் செய்தார்.

தொடர்ந்து 60 சிறுவர்கள் பாரதியின் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சியும், 25 நடனக் கலைஞர்களின் பாரதி பாடல் வரிகளுக்கான `தோள் கொட்டுவோம்` என்ற தலைப்பிட்ட கண்கவர் நடன நிகழ்ச்சியும் விழா அரங்கில் நடைபெற்றது.

இசைக்கலைஞர் கலைமாமணி டாக்டர் சுதா ரகுநாதன் பாரதி பாடல்களைப் பாடி அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண் டார். முனைவர் பர்வீன் சுல்தானா `சிந்தனை ஒன்றுடையாள்` என் னும் தலைப்பில் இந்த விழாவுக்கு மகுடம் வைத்தது போல சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பாரதியாரின் பாதச் சுவடுகள் பட்ட இடங்களிலெல்லாம், அதாவது பாரதியார் எங்கெங்கு சென் றுள்ளார் என்று வரலாற்றில் எழுதப்பட்டுள்ளதோ அவ்விடங்களி லெல்லாம் வானவில் பண்பாட்டு மையம் பாரதி நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

பாரதியார் பிறந்த எட்டயபுரம், அவரின் திருமணம் நடந்த கடையம், அவர் பயின்ற திருநெல்வேலி, அவர் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை, நான்கு ஆண்டுகள் அவர் கல்லூரியில் பயின்ற காசி, சகோதரி நிவேதிதாவை அவர் சந்தித்து தன் குருமணியாக ஏற்ற கொல்கத்தா, மனைவி செல்லம்மா பாரதியுடன் பார்த்த மிருகக்காட்சி சாலை அமைந்த திருவனந்தபுரம், அவர் சில காலம் சிறையிருந்த கடலூர், அவர் இந்து அபிமான சங்கத்தில் உரையாற்றிய காரைக்குடி, அவர் மறைவதற்குமுன் `மனிதனுக்கு மரணமில்லை` என்ற தலைப்பில் நிறைவான உரையாற்றிய ஈரோடு, பத்தாண்டு காலம் தங்கியிருந்து மிக அரிய பொக்கிஷங்களான அவர் வழங்கிய புதுச்சேரி ஆகிய இடங்களில் பாரதி நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இறுதியாக டிசம்பர் 11 அன்று பாரதி பிறந்த நாளன்று ஜதி பல்லக்கு ஊர்வலத்தோடு சிறப்பு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறும்.

இதில் பட்டியலிட்டபடி இவ்வாண்டு செப்டெம்பர் 11ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதிவரை மகாகவிக்குப் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளாக மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளை வானவில் பண்பாட்டு மையம் நடத்தவுள்ளது.

காசியில் நடைபெறவுள்ள பாரதி நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்குபெற்று மகாகவிக்கு அஞ்சலி செலுத்தி சிறப்புரை யாற்ற அந்நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் நம் பாரதப் பிரதமருமான நரேந்திர மோதிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுவரை எத்தனையோ நிகழ்ச்சிகளை மேடையிலும், பொதுகைத் தொலைக்காட்சியிலும் தொகுத்து வழங்கியிருந்தாலும் புது தில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்க கிடைத்த நல் வாய்ப்பை மஹாகவி வழங்கிய ஆசியாகவே எண்ணி அவருக்கு நன்றி சொல்லுகிறேன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...