0,00 INR

No products in the cart.

வாழ வழியுண்டு பூமியில்!

– ஆர்.மீனலதா, மும்பை

உலக முதியோர் தினம் (01.10.2021)

“தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சாதிக்கிறது!’’

“அந்தக் காலத்துப் பாட்டுகளைச் சத்தமாகப் பாட வேண்டியது!’’

“எப்பப் பார்த்தாலும் பழங்கதை பேசறது! அறிவுரைகளை அள்ளி விடறது!”

“அப்பப்பா! போதும்டா சாமி!”

யாரைக் குறித்து இத்தகைய விமரிசனங்கள்? முதியவர்களின் செயல்களை, இளசுகள் விமரிசிப்பதில் இருந்து சில வகைகள் இவை. இதை விட அதிகமும் உண்டு.

சமீபத்திய உலக சுகாதார நிறுவன புள்ளி விபரத்தின்படி, சர்வதேச அளவில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் அறுபது கோடி பேர் உள்ளனர் எனவும், 2025ல் இது அதிகமாகி, 2050ஆம் ஆண்டில் 200 கோடியைத் தாண்டி விடும் எனக் கூறப்படுகிறது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் முதியோர்களுக்கான மருத்துவம்; ஊட்டச்சத்து, சுத்தம் – சுகாதாரம் போன்ற பராமரிப்பு; பொருளாதார உயர்வு போன்றவைகள் உயர்ந்து வருவதன் காரணம், வாழ்நாள் அளவும் உயர்ந்து கொண்டு செல்கிறது. வாழ வயது ஒரு தடையில்லை.

எண்பது வயதிலும் பலர் சுறுசுறுப்பாகப் பணி செய்து வருகின்றனர். அவரவர் தேவைகளை பிறர் உதவியின்றி கவனித்துக் கொள்கிறார்கள் என்றாலும், முதுமையில் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதைத் தனிப்பட்ட விதமாகப் பார்க்காமல், சமூகச் சிக்கலாகப் பார்க்க வேண்டியது தேவை. ஏனெனில், இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

முதியோர்கள் செய்யத் தேவையானவை :

* நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளை வருடந்தோறும் மேற்கொள்ளுதல்.

* உணவில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை உண்ணுதல்.

* நல்லவற்றை நினைத்து உற்சாகமாக இருத்தல்.

* New Normal வாழ்க்கையை பழகிக்கொள்ளுதல்.

* எடை அதிகரிக்காமல் இருக்க, நடை பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை முடிந்தவரை செய்தல்.

* புகை, புகையிலை, மது மற்றும் அரிசி, சீனி, உப்பு ஆகிய மூன்று வெள்ளைப் பொருட்களைத் தவிர்த்தல்.

* உடலுக்கும், மனதுக்கும் போதுமான ஓய்வு கொடுத்தல்.

* பிடித்த நடவடிக்கைகள்; சமூக – கலாசார ஈடுபாடுகள் மேற்கொண்டு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்வாக இருத்தல்.

* மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளை, அவரது ஆலோசனை யின்றி திடீரென நிறுத்துதல் அபாயம்.

* தேவைப்படும் நேரங்களில் குடும்ப மருத்துவர் ஆலோசனையைப் பெற சோம்பல் படாமல் இருத்தல்.

* வள வளவென பிறர்க்கு அறிவுரைகளை வழங்காமல் இருத்தல்.

* மனதை அலட்டிக்கொள்ளாமல் வாழ்தல்.

* தேவையற்ற எண்ணங்களை நீக்குதல்.

குடும்பத்தினரின் பங்களிப்பு :

குடும்பத்தினரும், வீட்டில் உள்ள இளைய சமுதாயத்தினரும் முதியோர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களை விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக அங்கீகரிப்பது, மரியாதை அளிப்பது, அரை மணி நேரம் செலவிட்டுப் பேசுவது போன்றவை மிக மிக அவசியம்.

முதியோர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட இத்தகைய செயல்கள் உதவும்.

முதியோர்களானாலும் சரி; இளசுகளானாலும் சரி; ’இருக்கும் உறவு இறக்கும் வரையில்!இருக்கும் பொருள் இழக்கும் வரையில்!’ என்பதை நினைவு கூர்ந்து, எதற்கும் ‘நான்’ என்றெண்ணாமல், ‘நாம்’ என்று ஒற்றுமையாக இணைந்து வாழ்வது, செயல்படுவது எப்போதும் நன்மை பயக்கும்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

0
- அ.பூங்கோதை பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து...

அன்புவட்டம்

0
- அனுஷா நடராஜன் குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி... இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை? - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி கு, கும், திற், ஒ... எல்லா...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...